ஓடி ஓடி வாசல் வருவாயே மாமி
சிவன் வீடு தேடியா போனாய்?
'தம்பி எப்படி இருக்கான்' என்று
தவறாமல் வருவாயே !
'யோசிக்காதே எல்லாம்
நல்லாகும்' என்று சொல்வாயே
நீ எமை விட்டு சென்றாயே
நாம் மட்டும் என்னாவது ???
காலச்சக்கரத்தில் உனக்கு
இறப்பு
வாழ்க்கைச்சக்கரத்தில்
எங்களுக்கு இழப்பு
'நான் மட்டும் வராமல்
என் பேத்தியை
பார்க்காமல் போவேனோ'
என்று நீ வந்து
முந்தானையில்
மருமகளை தூக்கி
உச்சிமோந்த காட்சி
நிக்குது நெஞ்சில்
இன்னும்
உன் அன்பு மாறாமல்..
வீட்டில் யாருக்கும் வருத்தம்
என்றால் போதுமே
முதன் முதலாக தெம்பிலி,
தோடங்காய், வீவா
என்று ஆயிரம் அன்புகளை
கொண்டுவருவாயே
இன்று நீ இல்லை
கலங்குகிறோம் நினைவாலே
அஞ்சலிக்கிறோம்
உறவாலே...
எதுவேண்டும் என்று
கேட்டபோதெல்லாம்
ஒன்றும் தேவையில்லை
உங்கள் அன்பு போதும்
என்பாயே
இனி யாருக்காக
அன்பு செய்வோம்
நீ மட்டும் சென்றால்.....
ஓடி ஓடி வாசல் வருவாயே மாமி
சிவன் வீடு தேடியா போனாய்?
ஆத்ம அஞ்சலி
மாமியின் 31 ஆம் நினைவு நாளையொட்டி அஞ்சலிக்கிறோம்.
Saturday, April 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோ...
உங்கள் மன உணர்வுகளுடன், எனது உணர்வுகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.
இரங்கற் கவி என்பதால், எதுவும் சொல்ல முடியவில்லை.
@@ Rathnavel said...
நன்றி அண்ண
@@நிரூபன் said...
நன்றி நிரூ
Post a Comment