Pages

Friday, May 27, 2011

இது ஸ்டேடஸ் - 16


"நீ எறிந்து விட்டுப்போகிறாய்
கசங்கி கலங்குவது நான் தானே"
##உன் பார்வை##

"கண்டேன் கண்டேன் '
உன்னையும் என்னையும் , உள்ளும் புறமும், அவனையும் அவளையும், அவர்களையும்..."

"நீ வேண்டாம் அழைக்காதே உறவொன்று சொன்னது...
நான் தருகிறேன் எல்லாம் நீங்களே செய்க அவர் பகிர்ந்தார்
அவர் பொன் பொருள் வழங்கினார்
பொத்திக்கொண்டு வந்தது பாசமும் உறவும்..
கடைசியில் உறவுமுறை சேமிப்பு
காசுநடைமுறைக் கணக்கு
##நிதர்சனம்##

"டேய் காதல் வந்தா கண்ணடி லவ்வடி.. சும்மா தண்ணி அடிக்காத... "
##பொண்ணு அவனுக்கு##

"நீளமாகும் நட்பில் பள்ளங்களும் மேடுகளும் தெரியும்... விழுவதையும் எழுவதையும் காணலாம்..விழுக எழுக படை நகர்க."

"ஒரு மாதிரியா ஒரு ஆர்ப்பரித்த துடுப்பு விக்கட் ஆட்டமிழப்பு... மூன்றாம் நடுவருக்கு விடப்பட்டிருக்கு(மனசாட்சி). இதுக்கு முதல் எத்தனையோ பல விக்கட்டுகள் பறிபோயின.. இப்பொழுது அந்த பந்துவீச்சாளர்களிடம் துடுப்பு. பந்து பரிமாறப்போவது பற்றி ஓரமாய் பந்து..."
##கிரிகட் ##

"நீ என்னை முந்திப்போகணும் என்று வேகமாய் விழுந்துவிடாதே
அப்போதும் உன்னைத்தூக்கிக்கொள்ள மெதுவாக ஓட்டிக்கொண்டிருக்கும் என்னால் (தானே) முடிகிறது..."
##உந்துருளிப் பயணம்##

"உன் பிழை சொல்கிறேன் என்பதற்காக உன் நட்பை இழந்துவிடுகிறேன் என்று அர்த்தமில்லை. பிழையையும் சொல்லி அடிக்கிற உரிமை என்னைத் தவிர யாரிடமிருக்கும் சொல்..எனக்கும் ஒரு நாள் அடிக்கும் உன் கையில் தெரியும் இந்த வலி "
## நட்பு##

"உலகத்துதலைகள் எல்லாம்விட நல்லதொரு இதயம் போதும் "

"நீ வெற்றிபெறவேண்டும் பிராத்தனை மட்டுமே என்னால் செய்ய முடியும். உன்னால் முடியும்.
செல்க !வெல்க!
உனக்காக நான் வெற்றிபெறமுடியாது என் வெற்றிகளிலும் உன் வெற்றிகளிலும் இருவரும் சேர்ந்தே மகிழ்வுறுவோம்..
##Good luck my dear Sister##

"சில இறப்புக்களை கேட்வே முடிவதில்லை. கேட்டாலோ வழிகின்ற கண்ணீருக்கு துடைக்கின்ற விரல்களைத் தவிர யார் இருக்கா?
அவனின் அமைதியான நீண்ட உறக்கத்துக்கு இதய அஞ்சலி.. .."

"வெயிலிலிருந்து மழையை நோக்கி இன்று இரவுப் பயணம்"

இன்றைய படங்கள்
நாளை 28-05-2011 ஆம் திகதி நடைபெறவுள்ள இரு நிகழ்வுகளின் அழைப்பிதழ்கள்

6 comments:

ஹேமா said...

நட்பு மனதைத் தொட்டது.

இத்தனை துயரங்கள் வறுமைக்குள்ளும் தமிழின் வளர்ச்சி கண்டு சந்தோஷம் றமேஸ் !

Jana said...

உன் பிழை சொல்கிறேன் என்பதற்காக உன் நட்பை இழந்துவிடுகிறேன் என்று அர்த்தமில்லை. பிழையையும் சொல்லி அடிக்கிற உரிமை என்னைத் தவிர யாரிடமிருக்கும் சொல்..

அருமை ஐயா... ஆனால் பிழைகளை நாசுக்காக சுட்டிக்காட்டினாலும் அதை ஏற்பதற்கு பல நண்பர்கள் தயார் இல்லை.
பாராட்டுக்களை விட குறைகளை சுட்டிக்காட்டுவதையே விரும்புகின்றேன் என்கின்றனர் பலர், அனால், தம் பிழைகள் என்ன என்பதை ஆராயவோ, அல்லது வெளிப்படையாகவே தெரிந்தாலும் அதை நியாயப்படுத்த மீண்டும் மீண்டும் பிழைகள் செய்யவே எத்தனிக்கின்றனர். ஒவ்வொருவரும் தம்மைதாம், ஒருமுறை சுயவிமர்சனம் செய்து கொண்டால், அனைவருக்கும் சுகமாக இருக்கும்.. (நான் உட்பட)

கடம்பவன குயில் said...

கதம்பமாக பல உணர்வுகளில் கவிதைகள். அனைத்தும் அருமை சகோ

கார்த்தி said...

வழமைபோல் வரிகள் அற்புதம்!

Bavan said...

//டேய் காதல் வந்தா கண்ணடி லவ்வடி.. சும்மா தண்ணி அடிக்காத//

ஹீஹீ..:-))

//சில இறப்புக்களை கேட்வே முடிவதில்லை. கேட்டாலோ வழிகின்ற கண்ணீருக்கு துடைக்கின்ற விரல்களைத் தவிர யார் இருக்கா?//


ம்.. உண்மை..:(

படங்கள் - விழாக்கள் சிறப்புற வாழ்த்துக்கள்..:-))

றமேஸ்-Ramesh said...

நன்றி ஹேமா
நன்றி ஜனா அண்ணே டச்சிங்...
நன்றி குயில்
நன்றி கார்த்திக்
நன்றி பவன்.நான் பிரகாஷ்ராஜ் இல்ல..

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு