Pages

Tuesday, May 31, 2011

சிதறும் சில்லறைகள் - 17

இன்றைய நாள்
உலக புகையிலை எதிர்ப்பு நாள்
வருடந்தோறும் மே 31 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வரும் இத்தினம் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்த நாள் புகைத்தலின் பாதகவிளைவுகளுக்காக அதனை எதிர்க்கும் ஒரு விழிப்புணர்வாக இத்தினம் புகையிலை எதிர்ப்பு நாளாகிறது.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

நல்லதொரு விடயம் வீரகேசரியில் வந்தது இங்கு சென்றுபார்க்கAnti Tobacco Day 2011 from Bariq Sabzwari on Vimeo.

படம்


இங்கே ஆவணமாக்கபட்டுள்ளது போல் உள்ளது சினிமாவும் புகைத்தலும் அதன் தாக்கமும்..

பாடல்..
கடைசியில் இந்த பாட்டு உங்களுக்கு என்னத்தை சொல்கிறது. வா வா அன்பால் படி கட்டு..
நீ பிரிந்திருப்பது என்பது ஒன்றும் விசயமல்ல. ஆனால் சேர்ந்திருப்பதன் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் இழக்கநேரிடும் அல்லவா.. இங்கே வா இதயம் இணைந்து அன்பு காட்டு. இதற்கும் விளக்கம் தராதே மீண்டும் நாங்க நல்லவங்க நீங்க யோசிக்கிறதுக்கு என்னப்பா செய்ய. அன்பு நிரந்தரம் உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். ஆனால் அதைக்கட்டிக்காப்பது தொடர்ந்து பேணுவது எவ்வளவு கஸ்டம் தெரியுமா..
எனக்கு சின்னவகுப்பில் படிப்பிக்கும்போது ஒர் ஆசிரியர்(சமூகக்கல்வி பாடம் படிப்பிப்பவர்)"டேய் நல்லவனா ஆகிறதோ சுலபம் ஆனால் அதைக்கட்டிக்காப்பது அதைவிடக் கடினம். இது எப்படி எண்டாடா சிறிய போக்குக்குள் புகுந்துபோயி வெளியேறுவது போல, பெரிய போக்குக்குள் இலகுவாக நடந்துபோகலாம் ஆனால் முன்னயது பெரும் கஸ்டம்" (அவர் போக்குக்குள் என்றது மதகு என்று சொல்லுவோம் அதில் சிறிய பாலங்களில் இருக்கும் நீர் வெளியேற்றும் குழாய்கள்)
அவர் சொன்னது அப்ப விளங்கல ஆனா இப்பவும் அவர் வந்து சொல்லிப்புட்டு போறது போல இருக்கு. ஆசிரிய ஐயாவே வணக்கம் என்றும் உங்களுக்கு
ஒரு ஸ்டேடஸ்
"அன்பு அளவிடலில் அலகு இல்லை
உணர்வுகளால் மட்டும் கலக்கும் உறவு அது..."

8 comments:

மைந்தன் சிவா said...

ம்ம் புகைப்பிடித்தலை எதிர்ப்போம்

மைந்தன் சிவா said...

ம்ம் புகைப்பிடித்தலை எதிர்ப்போம்

♔ம.தி.சுதா♔ said...

உலகத்திலிருந்தே புகைத்தலென்னும்.. இக் கொடியவனை விரட்டுவோம்..

Seelan said...

ம்ம்...புகை மையல் கொண்டோர் இருப்பு,
மெய்யை உருக்கும் நெருப்பு... அருமை..

கார்த்தி said...

புகைத்தல் பணத்தையும் எம்மையும் அழிக்கும் செயல்!

ஹேமா said...

தமக்குத் தாமே கொள்ளி வைத்துக்கொள்பவர்கள்...சொல்லிக் கேட்டுத் திருந்தமுடியாது.உணர்ந்து யோசித்துத் திருந்தவேண்டும்.என் அப்பாவோடு அம்மா கிட்டத்தட்ட 45 வருடங்களாகப் போராடுகிறார்.
மாற்றம் ஏதுமில்லை !

எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.ரசித்தேன் !

Bavan said...

ம்.. புகைத்தலை எதிர்ப்போம்,

என் முன்னால் யாராவது புகைப்பிடித்து அதன் வாசனை எனக்கு எரிச்சலைத்தந்தால் அவர்களுக்குப் புரியும்படியாக மூக்கைப் பொத்திக் கொள்வதோ அல்லது அந்தப்பக்கமா ஊதுங்க என்று நேரடியாகவே சொல்லிவிடுவேன். அப்படியாவது திருந்தட்டும் என்றுதான்..:-))

றமேஸ்-Ramesh said...

@@ மைந்தன் சிவா எதிர்ப்போம் நன்றி
@@ ம.தி.சுதா♔விரட்டுவோம் நன்றி
@@ சீலன் அண்ணே ம்ம் நன்றி
@@ கார்த்தி அதானே நிப்பாட்டுவோம் நன்றி
@@ ஹேமா ஓ.. அது உண்மை. நன்றி
@@ பவன் நானும் அவ்வாறே.. நன்றி

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு