எழுத எழுத நினைத்து
எழுதாமல் போனேன். ஆனாலும் இன்றைய ஸ்டேடஸ்
"நீ இருந்தால் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இல்லை என்றால் உனது நேரான தலைமைத்துவ நினைவுகளுடன் நான்."
அதற்காக உன்னை முழுமையாக ஏற்கிறேன் என்று அர்த்தப்படவில்லை.
தலைமைத்துவம் என்பது எவ்வளவு கஸ்டம் என்பது அந்த இடத்திலிருந்து பார்த்தால் தான் தெரியும். 'தலையிடியும் காய்ச்சலும் தனக்குத்தனக்கு வந்தால் தான் தெரியும்' என்று சொல்வுவோமே. அதேபோலத்தான் தலைமைத்துவமும், தலைவர் பதவியும், பொறுப்புக்களும், கடமைகளும் அதனை ஏற்றுக்கொள்ளும்போதுதான் தெரியும் அந்தக் கஸ்டங்களும் நமது பலமும் (Strength), பலவீனமும்(Weakness), வளமும் வாய்ப்புக்களும் (Opportunity and resources), அச்சுறுத்தல்களும் (Threats). நீங்களும் அந்த இடங்களை இடம்பிடித்துப்பாருங்கள் எங்கே நாம் 'நரம்பில்லாத நாக்கால்' காசில்லாததால் வார்த்தைகளை உளறித்தான் விட்டமோ என்று பல ஏக்கங்களும் தப்பு அல்லது தவறுகளும் உணர்த்தப்படும் எதிர்மறையான சிந்தனையுடன். அதேபோல் பலமும் வெற்றி முனைப்புகளும் திறமைகளும் தெரிந்துகொள்ளப்படும் நேர்சிந்தனையாக.
நாளைய நாள்
எனது மெளனங்களுடன் கூடிய அஞ்சலி விளக்குகளை ஏந்திக்கொள்கிறேன் மனதிலும் காயப்பட்ட உள்ளங்களுடன் அழுதுகொள்ளும் நெஞ்சங்களுடன்.
1997/98 பருவகாலங்களில் எழுதியது. வாசியுங்கள் இம்மாதத்துக்கு பொருந்தும்.சில சொற்களை தவிர்த்து சில மாற்றங்களுடன்
வீழ வாழும்
மஞ்சமதில் வீரத் தாலாட்டு கேட்டுற்ற
நெஞ்சமிது வீழாது
நெஞ்சமதில் ஈரத் தமிழ்கேட்டு
வஞ்சஞ்கொண்ட மனது
வஞ்சகனை கண்டுற்று வாசனைகள்
கொண்டு போற்றுவது
பிஞ்சுகளிடமு மில்லை அஞ்சாத்
தமிழன் நெஞ்சுரமுடையான்
தமிழுக்குயிராகி உடல் போர்த்து
உளந்தமிழ்ப் பயிராகி
தமிழுக்குயிராகி உடல் விதைத்து
உடல் தமிழுறவாகி
தமிழுக்குடலாகி உயிர்பிணைத்து
எம்மை தமிழுறவாக்கி
தமிழுக்குறவாகி தமிழ் தளைகட்டி
தமிழான வீரர்களே வாழ்க
கழிபகலும் கங்குற் பொழுதும் களநில
வரம் கண்டு மனம் கறங்கும்
விழிக்கின்ற பொழுது போதும் அவன்
விதிமுடிக்கின்ற தின மின்றென
விடிகின்ற எந்த பொழுதும் தமிழ்
தாய் உதிக்கின்ற நிலமென
விரிகின்ற நிலம் போதும் இருளிடத்து
விடுவிக்க வீரர் மாழும்
கங்குல் மணி யடிக்க கசை யடி
கொடுக்க மனம் கடுவளியா
பொங்கும் மணி யடிக்க கடிது
பூங்குழலேந்தி தாக உளமாய்
வெங்கள மணியடிக்க எம்மின
வீறுசிறக்க வெற்றியென்று
வீழிகிடைக்க மங்கலம்
உலமறிய தமிழெழும்
காப்பிழந்த தாமரையாய் தமிழ்
கற்பிழக்க பொறுக்குமோ
காப்பாள் கொப்பிழக்கா தாமரையாய்
குழல்பிடித்து கடிமரம் நட்டதே
காவிழந்த பலமரமாய் தமிழ்போ
வதோ அவன் வீழவே
காப்பிழக்கா வீரம் வீழுமே
தமிழ் வாழுமே
அதிவேக நெடுஞ்சாலையும் அபிவிருத்திகளும் சில சோகங்கங்களும்
ஆனாலும் நாளைய தினம் 27-11-2011 இலங்கையின் புதிய பரிணாமங்களின் வளர்ச்சியாக 7000 கோடி ரூபாய்களின் செலவில் அதி(???) வேக பாதை கொட்டாவவிலிருந்து மாத்தறையின் கொட்டகம வரையான இலங்கையின் நீண்டதும் பெரியதுமான அதிவேக நெடுஞ்சாலை மாண்புமிகு ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட இருக்கிறது. வரவேற்கிறேன். வெவ்வேறாக பல்வேறு முன்னேற்றங்கள் அவசியம் தேவை மாற்றங்களுடன்.
ஆனாலும் நாளைய தினம் தமிழ்மக்களின் உயிர்நாள் அப்பேர்ப்பட்ட நாட்களில் அனேகமாக பல அபிவிருத்தித்திட்டங்களின் திறப்புவிழா நடைபெறுவது அண்மைய காலங்களில் நிகழ்வதன் மூலம் தமிழ்மக்களின் உணர்வுகளில் ஊசிஏற்றுவதாக உள்ளதாய் இருக்கிறதல்லவா.
ஆனபோதும் "எரிகின்ற காயத்துக்கு அமிலம் ஊற்றாமல் மருந்துகளும் ஆறுதல் வார்த்தைகளும் தந்தால் என்ன"....
மாண்புமிகு ஜனாதிபதியின் ஆட்சியில் என்னைப்பொறுத்தவரையில் சொல்லக்கூடிய உள்ளங்கை நெல்லிக்கனியாக இருப்பது பாதை/வீதிகளின் அபிவிருத்தி. முதல்ல கஸ்டப்பட்டு பல மணித்தியாலங்கள் செலவிட்டு அலுப்படைந்து போனபோது நேரங்களை மிச்சப்படுத்தியபோதும் வாகன விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுவதை தவிர்க்கமுடியாத நிலைகாணப்படுகிறது. இதற்காக கட்டாயம் மக்களுக்கு சரியான பாதை ஓட்டுதல் பற்றிய விளக்கப்பயிற்சி வழங்கப்பட வேண்டும். ஆனால் நீங்கள் கேட்கலாம் இவர்கள் என்ன கள்ள அனுமதிப்பத்திரங்களுடனா ஓட்டுனராகிறார்கள் என்று. என்னதான் ஊழல் ஒழியவேண்டும் என்று கத்தினாலும் அரசாங்க அலுவலகங்கள் அதிகாரிகள் மட்டத்தைப் பார்த்தால் அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திணைக்களங்கள், பாதுகாப்புத் திணைக்களங்கள், அனர்த்த முகாமைத்துவ திணைக்களங்கள், நிவாரணப்பணிகளில் இலஞ்ச ஊழலை தவிர்க்க முடியாமல் இருப்பது கண்கூடு.
வரவேற்கிறோம்
நேற்றுமுதல் முன்னணி பத்திரிகையொன்று தனது விஸ்தரிப்புகளில் ஒன்றாக "டிஜிட்டல் யுகம்" எனும் பகுதியில் வலைப்பூக்களின் வலுவை அதிகரிக்கும் நோக்குடன் "வலைப்பூக்களோடு விளையாடுவோம்" என்று மிக நேர்த்தியாகவும் வெளிப்படையான பல்திறமையான ஊடகத்துக்கேற்ற மிகத் திறமையினராக தனது வலைப்பூவை எழுதுவதுபோல் வித்தியாசமான பாணியில் எழுத்துக்களை கையாண்டு பெருமிக்கிறார் நண்பர் மருதமூரான் (இவரது வலைப்பூவுக்கு இங்கு செல்க)இவரது இந்த முயற்சிக்கு ஆயிரம் கைதட்டல்கள் நெஞ்சுநிமிர்த்தி.வாழ்த்துக்கள் நண்பரே.
ஒரு பாடல்
ஒவ்வொரு பாடல்களில் ஒவ்வொரு சுவை. இந்தப்பாடலில் தவில் மற்றும் கிளரினட் அற்புதமாய் விளையாடியிருக்கிறது. வைரமுத்துவின் வரிகளும் அருமை. அதைவிட நான் ரசிக்கிறேன் ஏ.ஆர். ரஃமானின் அந்தக்கால இனிய படைப்பாய். புதியமன்னர்கள் படத்தில் மனோ மற்றும் குழுவினர்
வானில் ஏணி போட்டு
ஹோய் கட்டு கோடி கட்டு
சொர்க்கம் வந்ததென்று
ஹோய் தட்டு கை தட்டு
மின்னல் நமக்கு தங்க சங்கிலி
விண்மீனேல்லாம் சின்ன மின்மினி
வானவில்தான் நம்
வாலிப தேசிய கொடி
கடைசியாக
"கைகொடுங்கள் கையால் அடிக்காதீர்கள் கையாலாகாதவனில்லை.
தோள்கொடுங்கள் தலை கொடுப்பேன் தலையாலடிக்காதீர்கள்.
தலைக்கனமானவன்."
"உனக்குக் கீழே இருப்பவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்று கண்ணதாசன் சொல்லிய வரிகள் நம்மட விதி அவ்வளவுதான் என்று ஏக்கப் பெருமூச்செறிய மட்டுமே உதவும். இவ்வசனம் எங்களை வளர்காது. "நமக்கு மேலே இருப்பவர் கோடி நினைத்துப்பார்த்து முன்னேறு" அதாவது முன்னேற்றத்தின் பாதையில் இருப்பவர்கள் நாம் எப்போதும் எங்களுக்கு இருப்பது அல்லது எங்களது தகமைகள் அல்லது திறமைகள் போதும் என்று எண்ணாமல் எங்களை விட உயர்வான நிலையில் உயர்வான பதவியில் உயர்வான இடத்தில் இருப்பவர்களைப் பார்த்தாவது முன்னேற்றத்தின் பாதையைத் திட்டமிட்டு வளர்ச்சியின் போக்கில் நாம் இருக்கவேண்டும். இதற்காக அவர்கள் எவ்வாறு கஸ்டப்பட்டு அந்த இடத்தை அடைந்தார்களோ அந்த கஸ்டங்களான அனுபவங்கள் எங்களை இன்னுமின்னும் வழிப்படுத்தி முன்னேற்றத்துக்குக் கொண்டுசெல்லும் இல்லையா?.

2 comments:
1997/98 ல் எழுதிய கவிதைதான்.ஆனால் இன்றும் பொருந்துகிறது.என்றுவரை...!
ஒரு சின்ன நிகழ்வு இந்த நேரத்தில்...
புதிதாக இயக்கத்தில் இணைய வந்தவரிடம் தலைவர் பார்த்து கேட்டார்."எத்தனை வருடத்தில் தமிழீழம் கிடைக்கும் என்று இவர் சொல்லி உங்களை இயக்கத்தில் சேர்த்தார்” என்றார்.
அந்த மாணவனும்"4 வருடமும் ஆகலாம் 40 வருடமும் ஆகலாம் என்று சொன்னவர்" என்று சொன்னான்.உடனே தலைவர் "இல்லை இவன் ஒரு பூஜ்ஜியத்தை விட்டுவிட்டான்.40 வருடமும் ஆகும்.400 வருடமும் ஆகலாம். இப்ப நாளைக்கே விடுதலை கிடைக்கும் என்று நினைத்து வரவேண்டாம்.அடுத்த தலைமுறையிலும் அது முடியாமல் போகலாம்" என்றார்.
திரும்பவும் அந்த மாணவன் கேட்டான் "விடுதலை எப்போது கிடைக்கும் என்று உறுதியாக உங்களால் சொல்லமுடியாதா?"என்று அதற்கு தலைவர் சொன்னார்.
"விடுதலை என்பது தனித்து எங்களுடைய போராட்டமல்ல. விடுதலை இயக்கத்தின் வளர்ச்சி, எங்கள் மக்களின் எழுச்சி,சிங்கள தேசத்தின் வீழ்ச்சி,தமிழகத்தின் ஆதரவு,சர்வதேசத்தின் ஆதரவு இவை எல்லாம் சேர்ந்து வரும்போதுதான் விடுதலையும் வரும்" என்று சொன்னார்.
உள்ளத்தை தொடுகின்றது தம்பி.
Post a Comment