Pages

Thursday, December 31, 2009

போ 2009 வா 2010

போ 2009 ஏ..!
போர் முடிந்த பூமியானாய்
நன்றி
அங்கு உலை வைக்கப்பட்டது
உயிர்கள்

இந்த மயான பூமியில்
இனி யார் அங்கு
மனிதப்பயிர்கள் வளர்ப்பது???

ஆராய்ச்சியாளர்களே.....!
உயிர்ச்சுவடுகள் ஏதும்
அகப்படுகிறதா???

அழுகுரல்கள் ஏதும்
கேட்கிறதா??
ஊன் வடிந்து
உயிராவது ஒழுகுகிறதா??
பாருங்கள்
எங்காவது மானுடம்
தெரிகிறதா என்று???

தமிழ் கொன்ற
2009 போகட்டும்
தமிழ் கொண்டு
2010 ஆளட்டும்

வாருங்கள் இனி
ஊர் கூடித் தமிழ்
தேர் இழுப்போம்
2010 இல்

இனியாவது
மூன்றெழுத்துக்களைக்
காப்பாற்றுவோம்
உயிர்,
தமிழ்...

வா 2010 தே...

வரும் வருடம்
நலம் தரும்
வருடமாகட்டும்

வாசிக்கப்படாமல் போன
பலபக்கங்கள் கொண்டு
வாழ்கைப் புத்தகம்
எழுதுவோம்
புது வருடத்தில்
வாருங்கள் தோழர்களே...

மனசு
புதைந்த நாட்களை
மறப்போம்
அங்கு
அனுபவக்காற்றைச்
சுவைத்து
வாழ்க்கை வரம்புகளில்
வழுக்காமல்
நடப்போம்

வா
புதுவருடமே...



சுவாசிக்க
நல்ல காற்று தா
கடலோரம் காதல்
கவிதை வாங்க
தமிழலை கொண்டுவா


கிராமங்கள் தோறும்
மழலைகள்
மடியினில்
மடிக்கணணிகள்
கொண்டுவா..
இணையத்தில் கிராமத்து
தமிழ்ப்பூக்கள்
நிதம்பூக்க வேண்டுமல்லவா....

நிஜங்களைக் காணும்
கனவுகள் கொண்டுவா
நிம்மதியாய்
உறக்கம் கொள்ள
கவலைகள் மறந்த
நிலவு கொண்டுவா

கண்ணாடி வாழ்கையை
கவனமாய்
கொண்டுசெல்ல
வா
புது வருடமே...
உன்னை விட
எனக்குத் தெம்பு
இருக்கிறது
இருந்தாலும்
உன் வரவு நல்வரவாகட்டும்

மனதுக்கு வெள்ளையடித்து
உன்னை வரவேற்போம்

கண்களில் விளக்கேற்றி
உன்னை
வெளிச்சப்படுத்துவோம்



விடைபெறா கேள்விகளுக்கு
விடைகாண்போம்
வா புதுவருடமே...

என்னினிய புதுவருட
வாழ்த்துக்கள்..

18 comments:

Bavan said...

இனிய புதுவருட வாழ்த்துக்கள்..:)
இந்த ஆண்டின் முதலாவது படைப்பு ம்ம்... கலக்கல் ஆரம்பம்..:)

Ramesh said...

Bavan said...
நன்றி பவன்
உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

ஹேப்பி நியூ இயர் சே பழக்க தோஷம்

புத்தாண்டு வாழ்த்துக்கள் றமேஷ்...!

அட்டகாச கவிதையோட ஆரம்பிச்சுருக்கீங்க,,,,

Ramesh said...

பிரியமுடன்...வசந்த் said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் வசந்
வருடத்தின் முதல வருகை வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்வோம்...

Admin said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

Ramesh said...

சந்ரு said...
வாங்க சந்ரு.... உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்...

cheena (சீனா) said...

இதயங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் றமேஷ்

தமிழலை கடற்கரையில் காதல் செய்ய உதவும்

நல்ல கவிதை

balavasakan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் றமேஸ்....

கலக்கலா கவிதை ஒண்ணோட ஆரம்பிச்சிருக்கீக... தொடருங்க..தொடருங்க..

Ramesh said...

cheena (சீனா) said...
நன்றி சீனா ..
உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்
நம்மளயும அறிமுப்படுத்தியதற்கு நன்றிங்க..

Ramesh said...

Balavasakan said...
நன்றி பாலா..
உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்

கலக்குவோம் நாம் ஜெயிப்போம்...ஹாஹாஹா..

Subankan said...

WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR

Muruganandan M.K. said...

இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

"மனசு
புதைந்த நாட்களை
மறப்போம்"

மறப்பது மனித குணம். அதுவே அவனை மீள வாழவைக்கவும் செய்கிறது

Ramesh said...

Subankan said...

நன்றி சுபாங்கன்
உங்களுக்கும் வெற்றிகரமாக இப்புத்தாண்டு அமைய வாழ்த்துக்கள்

Ramesh said...

Dr.எம்.கே.முருகானந்தன் said...
//இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

நன்றி Drமுருகு
உங்களுக்கும் உரித்தாகட்டும்

//மறப்பது மனித குணம்.அதுவே அவனை மீள வாழவைக்கவும் செய்கிறது///
ம்ம்ம் மறப்போம்
மன்னிப்போம்...

"தவறிழைத்தல் மனிதப் பண்பு; மன்னித்தல் இறைமைப் பண்பு. - போப்"

Theepan Periyathamby said...

இனிய புதுவருட வாழ்த்துக்கள்

Ramesh said...

Theepan said...
நன்றி தீபன்
உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

//தமிழ் கொன்ற
2009 போகட்டும்
தமிழ் கொண்டு
2010 ஆளட்டும்//

அருமை..!
அருமை..!!

Ramesh said...

சே.குமார் said...
நன்றி சே.கு
புதுவருட வாழ்த்துக்கள்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு