கவியரங்கில் அழுவதா சொல் முதல் வரிகள் வலிக்கும் குரல்
இன்று உன் வீட்டு
எறும்புகளின்
வயிறு நிறைய
வாசலில் அரிசிமாக் கோலம்
இல்லையா?
மூட்டிய அடுப்பில்
வெற்றுப்பானை
ஏற்றப்படுகிறதா??
இதற்காகவா அழுகிறாய்
உன் நரம்புகளில்
வாழ்வை உசிப்பிவிடு
வாழ்க்கைச் சூரியன் - வழுக்கி
உன் தலையில் விழ
நீ ஏன் தடக்கி
கவலையில் துவள்கிறாய்!
ஐம்பூதங்கள் உனக்காக
நீயாக -நீ
அழுவதா சொல்....
வானம்
கைவிரித்து நீ
அண்ணாந்து பார்க்க
கடவுள் காட்டும்
வானம்
உன்னைச் சூடேற்றி சூடேற்றி
உள்மனதை வெளிச்சப்படுத்தி
சூரியப்பொங்கல் கொண்டுவரும்
சூரியன் - நீ
செத்துவிடலாகாது
உன்னால் தான்
உன் குடும்பத்தாமரைகள்
முகம் மலருகிறது
ஓ...
மலர்ச்சிப் பொங்கல்
உன்மேனியில்
மழைப்பூக்கள் தடம் பதிக்க
உன் மனப்பூக்கள்
சிலிர்த்து சிலிர்த்து
சிரிக்க வேண்டுமே....
ஏர் உழுது எரு இட்டு
களை பிடுங்கி விதை நட்டு
செழிக்கும் பயிர் கண்டு
உலகம் சிரிக்க
கார்மேகம் கொண்டுவரும்
ஈர விழுதுகள்
மழைப் பொங்கல் - இன்னும்
அழுவதா சொல்....
நெருப்பு
உன் கலக்கம் வேதனை
அது
வாழ்க்கைச் சோதனை
நீ
தீமையை எரிக்கும்
"தீ"
உன் எண்ணத்தில் - நல்ல
முயற்சி எண்ணெய் ஊற்று
தீர்ந்துபோகாத
தீப்பந்தம்
நீதான்.....
உன் உழைப்பின் வெப்பத்தில்
இரத்தத்துளிகள்
வியர்வைத்துளிகளாகட்டும்
இனி
உன் விழிகளின் ஓரத்தில்
கண்ணீர்த்துளிகள் எதற்கு...?
கிளைவிட்டு கிளைவிட்டு
வறுமை வளர்க்காதே..
மனம் விட்டுப்போகும்
வாழ்க்கை ரணகளமாகும்.
Wednesday, January 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
உன் உழைப்பின் வெப்பத்தில்
இரத்தத்துளிகள்
வியர்வைத்துளிகளாகட்டும்
இனி
உன் விழிகளின் ஓரத்தில்
கண்ணீர்த்துளிகள் எதற்கு...?
............அருமை. .... ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்!
Chitra said...
நன்றி சித்ரா
இன்னும் வரும்
நல்லாருக்கு றமேஸ். தொடருங்கள்.
உன் உழைப்பின் வெப்பத்தில்
இரத்தத்துளிகள்
வியர்வைத்துளிகளாகட்டும்
இனி
உன் விழிகளின் ஓரத்தில்
கண்ணீர்த்துளிகள் எதற்கு...?
கலக்கிட்டீங்க றமேஸ்...
நச்சுன்னு இருக்கு தோழரே.... தொடர்ந்து பட்டைய கெளப்புங்க...
வானம்பாடிகள் said...
நன்றி அண்ணே.... தொடருவேன்
Balavasakan said...
நன்றி பாலா
Sangkavi said...
கிளம்பிட்டோம்ல
நன்றி
Post a Comment