எமது மண்ணின் மகிழ்ச்சியில் விழைந்த உறவு, கனடாவில் வசிக்கும் திரு. இரா.இராஜேந்திரா அவர்களின்
திருநிறைச் செல்வன் இராஜேந்திரா நிதர்சன் அவர்களின்
மிருதங்க அரங்கேற்றம்
திருநிறைச் செல்வி. நிலக்ஷனா இராஜேந்திரா அவர்களின்
பரத நாட்டிய அரங்கேற்றம்
ஆகிய அரங்கேற்ற நிகழ்வுகள் கனடா 'றிச்சமண்ட கலையரங்கத்தில் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற எமது வாழ்த்துக்களையும் நல் ஆசிகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.புலம் பெயர் உறவுகள் நமது கலாசாரத்தின் நெறியின்பால் நிற்பதற்கு இவ்வாறான அரங்கேற்றங்களைச் சிறப்பாக நிகழ்த்துவது தமிழர்களாகிய எமக்கும் எமது மண்ணின் சிறப்புக்கும் பெருமையான விடயம்.
'தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.'
என்ற வள்ளுவனின் குறளுக்கேற்ப எமது மண்ணின் பிள்ளைகளுக்காக அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பெருமளவில் உதவிசெய்கின்ற திரு.இரா.இராஜேந்திரா அவர்கள் தமது பிள்ளைகளுக்கு உரிய கடமையை செய்திருக்கிறார்.
அதேபோல் இந்த மாபெரும் அரங்கேற்ற நிகழ்வில் 'இவன் தந்தை என்னோற்றான் கொல்' என்று புகழுமாறு இப்பிள்ளைகள் தங்களது திறமைகளை செவ்வனே செய்வார்கள் என்று நம்புகிறோம். அத்தோடு எமது பிள்ளைகளின் கல்விதேவைகளுக்காக சேவைகளை திறம்பட செய்வதற்கு அரும்பாடுபடும் செல்வன் இரா.நிதர்சன் அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றியையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி. இவர்களுக்கு எல்லாம்வல்ல கடவுளின் ஆசிர்வாதமும் அருளும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.
'சிறுவர்களே எதிர்கால தலைவர்கள்'
6 comments:
நானும் வாழ்த்துவதில் இணைகிறேன்.
பல சமூகப் பணிகளில் தன்னலம் கருதாமல் மற்றவரின் துயர் துடைக்க இயங்கி வரும் ரமேஷுக்கும் நல்வாழ்த்துக்கள்.
LOSHAN said...
/// நானும் வாழ்த்துவதில் இணைகிறேன்.
பல சமூகப் பணிகளில் தன்னலம் கருதாமல் மற்றவரின் துயர் துடைக்க இயங்கி வரும் ரமேஷுக்கும் நல்வாழ்த்துக்கள்.
///
நன்றி லோலஷன்.
நம்மளால முடிஞ்சதை மற்றவர் நலனுக்காக செய்யணும் இல்லையா. அதான்
எம் கலைகளை அழியவிடாமல் தொடரும் இந்த இளையவர்களை வாழ்த்துவதில் நானும் இணைந்துகொள்கிறேன் றமேஸ்.
றமேஸ் இப்போ அப்பா எப்பிடி இருக்கிறார்.சுகம்தானே !
நம் கலைகளை காப்போம்.
வாழ்த்துவதில் இணைகிறேன்.
@ஹேமா said...
///எம் கலைகளை அழியவிடாமல் தொடரும் இந்த இளையவர்களை வாழ்த்துவதில் நானும் இணைந்துகொள்கிறேன் றமேஸ்.///
நன்றி ஹேமா
///றமேஸ் இப்போ அப்பா எப்பிடி இருக்கிறார்.சுகம்தானே !///
சுகமாக இருக்கிறார் ஹேமா நன்றி நலம் விசாரித்ததற்கு
@Karthick Chidambaram said...
///நம் கலைகளை காப்போம். வாழ்த்துவதில் இணைகிறேன்.////
நன்றி நண்பா
Post a Comment