"உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா??" எதுக்கு அது பருந்தாகணும்? பருந்து ஒரு மாமிசமாய் ஆன மிருகப்பறவை. அழகிய நெல்மணிகளை பொறுக்கி கீச் என்ற சத்தங்கள் அரவிக்கொண்டு ஊர் அழகு ரசித்துக்கொண்டு ஊர் சுற்றித்திரியும் சுறுசுப்பான அந்த ஊர்க்குருவி ஏன் பருந்தாக ஆக எண்ணணும். ஓ.. உயரப்பறந்தால் ஒசந்திரலாமா(உயர்ந்திடலாமா)?????. இல்லை நீ ஊர்க்குருவியாய் இரு. போதும்.
ம்ம்ம்.........
(ஊர்க்குருவியின் கூடு தனது குஞ்சுகளை பொரிப்பதற்காக காத்திருக்கும் பொழுது)
ஏதேதோ அலறுகிறேன் என்று அல்ல. இந்த ஊர்க்குருவி சிறகுகளை உலர்த்திக்கொண்டு 150 ஆவது சில்லறைகளை சிதறிவிடுகிறது இன்றுடன்.
பதிவுலகம் வந்து இத்தனை பதிவு என்பது சொற்பளவு. என்னைவிட எத்தனையோ பதிவர்கள் பல நூறு ஆயிரம் கடக்கிறார்கள். நானும் இங்கு நூற்றம்பதைத்தாண்டுகிறேன் என்பதில் மகிழ்ச்சி.
இதுவரை
பல பதிவுகள் உங்களை வந்தாலும் சில பதிவுகளே சில் என்று சிலிர்த்துக்கொண்டு அல்லது சிவப்பாய் சினத்துக்கொண்டு இருக்கும். என் பதிவுகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் பலபேரை மாறுதலடையச் செய்துள்ளது என்பது சிதறலின் ஒரு வெற்றி. பல நண்பர்களையும் எனது கிராமத்து உறவுகளையும் பல புலம்பெயர் உறவுகளையும் மனச்சிதறல்களினூடு பெற்றிருப்பது அளவுகடந்த சந்தோசம். தொழிநுட்ப மற்றும் பல்வேறு உதவிகளையும் பல மனதுக்கு ஆறுதலாக நிம்மதியாக பல உணர்வுகளையும் நட்புக்களையும் பெற்றிருக்கிறேன். நன்றி பதிவுலகமே.
மண்வாசனை எமது கிராமத்தின் பல நிகழ்வுகள் இணையவழி கொண்டு உலகெலாம் ஆர்க்க சிதறிய சில்லறைகளாய் ஆன இச்சிதறல்கள் உங்கள் எண்ணங்களில் எங்கோ ஒரு மூலையில் சில வண்ணங்களை பூசிக்கொள்ளும் என நினைக்கிறேன்.
"இந்த சிதறல்கள் வெறும் ஏட்டில் எழுதப்பட்டவை அல்ல
உணர்வுகளின் உயிர்களின் ஆழத்தில் எழுதப்படும் எழுத்துக்கள்"
"எனது பலமும் பலவீனமும் எனக்குத்தான் தெரியும்
என்னைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டவன் நானே ஆதலால்"
ஆதலால் இந்தவெற்றிப்பதிவு எழுதுகிறேன்.
"இனி"
"உங்கள் துயரத்தின் பாதியையேனும் குறைக்காவிட்டாலும் நான்
வழிகின்ற கண்ணீரின் ஈரத்தை துடைக்கின்ற கைகளாய் இருக்கவேண்டும்" என்று ஆசைப்படுகிறேன்.
"தபுசங்கரின்" "எனது கறுப்புப்பெட்டி" என்ற கவிதை தொகுப்பிலிருந்து..........
எத்தனை முறை வீழ்த்தினாலும்
கடைசியில்
நடக்கக் கற்றுக் கொடுத்தவிட்டது
நடைவண்டி
எத்தனை முறை கவிழ்த்தாலும்
கடைசியில்
ஓட்டக் கற்றுக் கொடுத்துவிட்டது
மிதிவண்டி
எத்தனைமுறை வீழ்த்தினாலும்
எத்தனைமுறை கவிழ்த்தாலும்
கடைசிவரை
வாழக் கற்றுக் கொடுக்கவில்லை
வாழ்க்கை
அற்புதமான வைரங்கள் அந்த கறுப்புப் பெட்டிக்குள்ளே புதைந்துகிடக்கிறது கவிதை வரிகள். இது பதிவுலகத்துக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
எனது பதிவைப்பார்த்து எனது உறவுக்கார அண்ணா தொலைபேசி அழைப்பெடுத்து அதிக புத்தகங்களை வாசியுங்கள் இன்னுமின்னும் அழகாக எழுதமுடியும் வாழ்க்கையையும் என்றார். இந்த விடயம் என்னுள் சேருமுன்னர் நான் சொற்பளவே புத்தகங்களை வாசித்திருக்கிறேன். பின்னர் எங்கு பயணம் செய்தாலும் ஏதாவது புத்தகங்களை வாங்க மறுப்பதில்லை. நன்றி அண்ணா.
அழகியது கிராமம்
அலைகிறது மனம்
இன்னும் கண்டுகொள்ளாமல்
எப்போதும் எனது கிராமத்தை நேசிப்பவன் அதன் எழில் கொஞ்சும் அழகுகளை அடிக்கடி ரசிப்பேன். அதே போல் நிகழ்வுகளின் நிஜப்பதிவாய் இருக்கப்பார்ப்பேன் அதனால் ஊரில் நிகழ்வுகளையும் உங்கள் கண்முன் கொண்டுவர முயற்சி எடுப்பதில் மகிழ்ச்சிகொள்ளும் இந்த சிதறல்கள். இன்னும் சிதறிக்கொள்ளும்.
ஆனாலும் இன்னும் பல விடயங்கள் எழுதப்படவேண்டும் என்று.........
எமது பாரம்பரிய விழுமியங்கள் இதுவரை இணையத்தரவேற்றம் செய்ப்படாத விடயங்கள், நாம் அறிந்து இன்னும் எழுதப்படாத விடயங்கள், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நல்லபல தகவல்கள் மொழிபெயர்த்து அதன் இருப்பிடங்கள் சொல்லிக்கொண்டு, இன்னும் நமது பழைய அனுபவசாலிகளின் படைப்புக்கள், எமது பிள்ளைகளின் திறமைகள்....... என்று பல்வேறு சில்லறைகளை சிதறவேண்டும் என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டு முடிந்தளவு எழுதவேண்டும் என்று இந்த ஊர்க்குருவி உயரப்பறக்கிறது சிதறல்களாலே.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
வாழ்த்துக்கள் ரமேஸ்…!
ஒவ்வொருவரும் தேடல்களுடன் பயணிக்கிறோம். தேடல்கள் இல்லாத மனிதர்கள் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. அந்தத் தேடல்களில் நேர்மையும், ஆரோக்கியத்தனமும் இருக்கின்றது என்றால் சமூகத்துக்கு நல்லது செய்கின்றோம் என்று பொருள். நீங்கள் நேர்மையான தேடல்களைச் செய்கின்றீர்கள். 150க்கு வாழ்த்துக்கள். 150…..! தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைக்கட்டும்.
வாழ்த்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பயணத்தை...
150க்கு வாழ்த்துக்கள் தோழா...
இன்னும் இன்னும் எழுதுங்கள், 150 என்பது ஒரு இலக்கம் மாத்திரமே இது போன்ற இன்னும் எத்தனையோ எண்களை எதிர்காலத்தில் கடந்து செல்ல வாழ்த்துகிறேன்
எப்போதும் எனது கிராமத்தை நேசிப்பவன் அதன் எழில் கொஞ்சும் அழகுகளை அடிக்கடி ரசிப்பேன். அதே போல் நிகழ்வுகளின் நிஜப்பதிவாய் இருக்கப்பார்ப்பேன் அதனால் ஊரில் நிகழ்வுகளையும் உங்கள் கண்முன் கொண்டுவர முயற்சி எடுப்பதில் மகிழ்ச்சிகொள்ளும் இந்த சிதறல்கள். இன்னும் சிதறிக்கொள்ளும்.
.....அழகிய எண்ணங்களுடன் வலம் வந்து, 150 பதிவுகளை தந்து இருக்கிறீர்கள்! தொடர்ந்து எழுதி, மென்மேலும் உயர வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்
தேடல்களும் எண்ணங்களும் சிறக்கட்டும்,
150வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. இன்னும் இன்னும் பல மைல் கற்களைக்கடந்து பயணிக்க வாழ்த்துக்கள்..:)
வாழ்த்துக்கள் ரமேஷ் அண்ணா!!!
தொடரட்டும் உங்கள் சேவை!!! அதுவே எங்களது தேவை!!!
அருமையான பகிர்வு. கவிதை பகிர்வுக்கு கூடுதலாக வாழ்த்துக்கள்.
//எத்தனை முறை வீழ்த்தினாலும்
கடைசியில்
நடக்கக் கற்றுக் கொடுத்தவிட்டது
நடைவண்டி//
வாழ்த்துக்கள். உங்கள் நடை அழகு.
வாழ்த்துக்கள் ரமேஸ்..
"உங்கள் வாசிப்பு உயர"
வாழ்த்துக்கள் அண்ணே.
தங்களது 150 பதிவுக்கு வாழ்த்துக்கள்... சும்ம எத்தனை மாடி கட்டினாலும் எம் ஊரின் அருமைக்கு வருமா..? தங்களின் அருமையான பதிவுகளுக்காய் காத்திருக்கிறேன் சகோதரா...
@மருதமூரான்.
நன்றி மருதம்ஸ்
தேடல்கள் தீராது தொடருவோம்
@சந்ரு
நன்றி சந்ரு நான் என்பதற்குப்பிறகு தான் நாம் என்று வரும் என நினைக்கிறேன்
@யோ வொய்ஸ் (யோகா)
நன்றி
உண்மைதான் இலக்கங்களைக் கடப்பதை விட இலக்குகளையே கடக்க வேண்டும் முயற்சிக்கிறேன்
@Chitra
நன்றி சித்ரா.
உணர்வாக எழுதணும் என நினைக்கிறேன்
@முத்துலெட்சுமி/muthuletchumi .
நன்றி
@Bavan .
நன்றி பவன்
கடக்க முயற்சிக்கிறேன் மைல்கல் என்று தேடிக்கொண்டு
@Anuthinan S
நன்றி அனு
தேவைக்காகவே சேவை
@மதுரை சரவணன்
நன்றி நண்பா
கவிதைப்பதிவுகள் வந்து சேரும்
@Jana
நன்றி அண்ணா
வாசிப்பு உயர
பாதிப்பு உயரும்
பதிவு உயரும்
@ஜாவா கணேஷ்
நன்றி கணேஷ்
@ம.தி.சுதா.
நன்றி சுதா
அருமையான பதிவுகள்??? ஹாஹா முயற்சிக்கிறேன்
றமேஸ்...உங்களுக்கு எழுத்துத் திறன்,சமூக அக்கறை,அன்பு எல்லாமே கலந்த மனமும் திறனும் இருக்கு.இன்னும் எழுதுங்கள் சகோதரனே.அன்பு வாழ்த்துகள்.
@ ஹேமா said...
/// றமேஸ்...உங்களுக்கு எழுத்துத் திறன்,சமூக அக்கறை,அன்பு எல்லாமே கலந்த மனமும் திறனும் இருக்கு.இன்னும் எழுதுங்கள் சகோதரனே.அன்பு வாழ்த்துகள்////
நன்றி ஹேமா.
எழுத்துக்களாலே உங்களைப்பார்க்க முடிகிறது என்னையும் எழுதிக்கொண்டு.
சந்தோசமாக இருக்கிறது.நன்றி
150வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ரமேஷ் அண்ணா.....
@Atchu said...
நன்றி அச்சு
Post a Comment