பின்னணி திரையிசைப்பாடகி சுவர்ணலதா மறைந்த சேதி. மிகவும் வேதனையளித்தது. ஏதோ ஒரு வகையில் நம்மை பிடித்தவர்களின் இழப்பு மனதில் கனத்த இதயத்தை ஆக்கும். இறப்பு தவிர்க்க முடியாதது. அந்தவகையில் பாடகி சுவர்ணலதாவின் இழப்பும்.
போறாளே பொன்னுத்தாயி ...
எனது ஆழ்ந்த அஞ்சலி ... எப்போதும் உங்கள் ரசிகன் நான். பாடல்களின் உயிரில் வாழ்வீர்கள் இதயத்தில் அஞ்சலிக்கிறேன்
இவர் பாடிய பாடல்களில் இவருக்கும் ஏ.ஆர். ரஃமானுக்கும் வைரமுத்துவுக்கும் பெருமை சேர்த்து தந்த பாடல். கருத்தம்மா படத்தில் இவர் பாடிய பாடல் "போறாளே பொன்னுத்தாயி......". இந்தியாவில் தேசிய விருது பெற்ற பாடல். இந்தப்பாடல் அப்போதே எனக்கு பிடித்தாலும் அவ்வளவாக இப்பாடலை மனதில் வைத்திருக்க முடியவில்லை.
ஆனாலும் பாடல்கள் என்பது பொதுவாக அதன் இசையும் வரிகளும் சேர்ந்து எம்மை அதே பாடல்வரிகளிலும் இசையிலும் இருத்தி எம்மை அந்த பாடலின் சூழ்நிலைக்குக் கொண்டு செல்வது மறுக்க முடியாது. வழமையாக சோகப்பாடல்களை விரும்பாத எனக்கு இந்தப்பாடல் என்னை திசைமாறாமல் வழிப்படுத்தியது நான் உற்ற சோகத்தில் ஆழ்ந்தபோது சில வருடங்களுக்கு முன்னர் நண்பன் ஒருவனின் நட்பை இழந்த போது
"விழிகளின் ஓரத்தில்
ஈரத்தை இருத்தி
பாரத்தை இறக்கி வைச்ச
அந்தப் பாடல் ....."
போறாளே பொன்னுத்தாயி பொல
பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த
மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள
ஊரை விட்டு
சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா எந்தப் பூவம்மா?
அஞ்சாறு சேவல்
உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்டை போல
போறாளே பொன்னுத்தாயி..)
நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில்
ஊமையும் ஊமையும்
பேசிய பாஷையடி
தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னோட மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாக்கு ஒன்னு வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி
நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர்
வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா
சேமித்த காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு
ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா
(போறாளே பொன்னுத்தாயி..)
(சாமந்தி பூவா..)
(போறாளே பொன்னுத்தாயி..)
படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
(பாடல் வரிகள் தேன்கிண்ணத்திலிருந்து. நன்றி தேன்கிண்ணம் )
Sunday, September 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
கனக்கத்தான் செய்கிறது...பாடலைக்கேட்டுப் பின்னர் பாடிய்வர் எங்கே என்று தேடும்போது!
:-(
போறாளே பொன்னுத்தாயி ஓர் அருமையான பாடல்...
என்ன செய்வது... :-(
போர் வாள்
ம்ம்ம்... சிறந்த பாடகி இழப்பு வருத்தமளிக்கிறது...:(
அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்..:(
@ pillaiyaar said...
//கனக்கத்தான் செய்கிறது...பாடலைக்கேட்டுப் பின்னர் பாடிய்வர் எங்கே என்று தேடும்போது!///
நன்றி
முதல் வருகைக்கும் கருத்துக்கும்
@கன்கொன் || Kangon said...
/// :-(
போறாளே பொன்னுத்தாயி ஓர் அருமையான பாடல்...
என்ன செய்வது... :-(
///
இதய அஞ்சலி சொல்லுவோம் கோபி
நன்றி
@Bavan said...
///ம்ம்ம்... சிறந்த பாடகி இழப்பு வருத்தமளிக்கிறது...:(
அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்..:( ///
பிரார்த்திப்போமே..பவன்
நன்றி
எத்தனையோ சிறப்பான பாடல்களை பாடிய அவரது ஆத்மா சாந்தியடையட்டும்
@யோ வொய்ஸ் (யோகா) said...
///எத்தனையோ சிறப்பான பாடல்களை பாடிய அவரது ஆத்மா சாந்தியடையட்டும்///
அவரின் இறுதி உறக்கம் இனியதாக அமையட்டும் பிரார்த்தனைகள்
அண்ணா பிரபலங்களின் மறைவு ஒன்றை மட்டும் எங்களுக்கு சொல்லி வைக்கிறது!!!
அவர்கள் மறைந்த பின்பு அவர்களை நினைக்க அடையாளங்கள் இருக்கிறது எங்களுக்கு???
அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்திக்கிறேன்
@Anuthinan S said...
அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.
நெருங்கியவர்களின் மரணமும், பிரபலங்களின் திடீர் மரணங்களும் மனதில் ஒருவித பயத்தை உண்டாக்குகின்றது என்று நடிகர் பார்த்தீபன் முரளியின் மறைவுக்கு சொன்ன வசனம் யதார்த்தமானதுதான்.
மாலையில் யாரோ மனதோடுபேச, போறாளே பொண்ணுத்தாயி, எவனோ ஒருவன் வாசிக்கின்றான், ராஜராஜசோழன்போல வந்து நிற்கிறாய், நெச்தமிழ் தூழியிலே சிரிக்கும் வெண்ணிலவே (புயல் அடித்த தேசம்) ஆகிய சௌர்ணலதாவின் பாடல்கள் நெஞ்சில் நிற்கின்றன.
@ Jana said...
//நெருங்கியவர்களின் மரணமும், பிரபலங்களின் திடீர் மரணங்களும் மனதில் ஒருவித பயத்தை உண்டாக்குகின்றது என்று நடிகர் பார்த்தீபன் முரளியின் மறைவுக்கு சொன்ன வசனம் யதார்த்தமானதுதான்.////
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இன்று சாட்சியாய் இவர் பிரிவு.
//யாரோ மனதோடுபேச,
போறாளே பொண்ணுத்தாயி, எவனோ ஒருவன் வாசிக்கின்றான், ராஜராஜசோழன்போல
தூழியிலே
//
காதுகளில் இனிப்பவை இன்னும் உயிர்ப்பூட்டிக்கொண்டு
நன்றி அண்ணா
கணீரென்ற குரலோடு நிறைவான பாடல்கள் தந்தவர்.ஆழ்ந்த அனுதாபங்கள்.
Very nice song.
May her soul rest in peace.
@ஹேமா said...
//கணீரென்ற குரலோடு நிறைவான பாடல்கள் தந்தவர்.ஆழ்ந்த அனுதாபங்கள்.///
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம்
நன்றி ஹேமா
@ Chitra said...
//Very nice song.
May her soul rest in peace.///
ஆத்மா அமைதியாய் தூங்கிக்கொள்ள பிரார்த்திப்போம்
நன்றி சித்ரா
Post a Comment