Pages

Friday, October 16, 2009

சிந்தனையூற்று நூலகம்


சுற்றம் சத்தமில்லாமல்
கற்றலுக்கு ஒரு
வழி
நம் மன அமைதிக்கு
நல்லிடம்

புத்தகங்கள்
பத்திரிகைகளுக்கு
இங்குதான் உண்மையான
விமோசனம்
கிடைக்கிறது

நூல்களின்
அணிவகுப்பு
அவற்றின் தொகுப்பு
இலக்கங்களில்
பலவகுப்பு

இலக்கியங்கள்
இலக்கணமோ
எத்தனை புத்தகமோ
அத்தனையும் ஒன்று சேரும்
ஆலயம்


உண்மையில்
கவிஞர்கள், கலைஞர்களின்
ஏன்
படைப்பாளிகளின்
படையல்கள் எல்லாம்
முக்திப் பேறு அடைவது
இந்த
"சொர்க்க பூமியில்" தான்
அதனால் தான்
இது
நூல்களின்
இதயபூமி

பல நூற்றாண்டுகளின்
பாதைகளில்
நடந்து வர வேண்டுமெனில்
இந்த பொக்கிசத்தில் மட்டும் தான்
புதைந்து கொள்ள முடியும்
இந்த புத்தகபூமியில் தான்
புதையல் தேட முடியும்

புத்தகப் பயிர்கள்
செழித்து வளரும்
விளை நிலம்
இங்கு தான்
நல்ல புத்தகங்களுக்கு
அறுவடை


சிறுவர்களோ
பெரியவர்களோ
ஞானப்பால்
குடித்துக்கொள்ள
வேண்டுமெனில்
இந்த
நூலகத்தாயிடம் தான்
வரவேண்டும்
பருக வேண்டும்

நூல்களின்
அகம்
நூலகம்
சிந்தனையின் ஓர்
ஊற்று

2 comments:

முல்லை அமுதன் said...

அன்புடையீர்.
தங்களின் படைப்புகளை,வலைத்தளம் ஊடாக பார்க்கக் கிடைத்தது.
நானும் ஈழத்து நூல்களை சேகரிப்பதுடன்,அவற்ரை ஆவணப்படுத்தியும் வருகிறேன். கூடவே,
வருடா வருடம்'ஈழத்து நூல் கண்காட்சி'யினை நடத்தியும் வருகிறேன்.
தங்களின் நூலக வடிவமைப்பை பார்த்துப் பூரிப்படைந்தேன்.
வாழ்த்துக்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்.

Ramesh said...

நன்றி ஐயா.. நெகிழ்சி. மகிழ்ச்சி. இணையம் கொண்டு இதயம் செய்வோம். தமிழ் வளர்ப்போம்.
தொடர்க சேவை. உங்கள் முயற்சிகளுக்கு என்றும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு