Pages

Saturday, January 9, 2010

தீ வளர்த்த தோழர்களே .....

என் பழைய தோழர்களே!
உங்களுக்குள் மரணித்த
மனிதங்கள்
எனக்குள் மட்டும் தான்
இருக்கிறதா?
உங்களுக்குள்
ஜனனிக்கவில்லையா??


நட்பு நமக்கு
கற்பு
மறவாதீர்கள்
அது நம்
மனதை வளர்க்கும்
அன்பின்
உலோக வார்ப்புக்கள்

வாழ்க்கையின்
உண்மைப்புத்தகத்தை
ஒவ்வொருநாளும்
புரட்டிப்பார்க்கிறேன்
என் வாழ்க்கையில்
'பொருட்பிழை'
ஏதும் இருக்கிறதா
என்று!

தோழர்களே!
எனக்குள் மனிதம் கொன்று
மிருகம் வளர்க்காதீர்கள்

உள்ளுறை கொண்டு
முகம் நகைக்கும்
உன்னத நட்பின்
உறவுப்பிழை
உங்கள்
உயிர்ப்பிழை

நட்புத் 'தீ' வளருங்கள்
நட்புக்குத்
தீ வைக்காதீர்கள்

நட்பிளக்கம்
நட்புழக்கமாகட்டும்
இளக்காரம் இல்லாதிருக்கட்டும்

அன்பு - நம்மனதில்
அடகு வைக்கப்பட வேண்டியது
நட்பில்
அவமானப்படக்கூடாது

இப்போதும்
என் வாழ்க்கையின்
ஏட்டுச்சுவடுகளைப் பார்க்கிறேன்
நட்பில்
எங்காவது எழுத்துப்பிழை
இருக்கிறதா என்று
வாழ்க்கை பிசகு
விடவில்லை


அங்கு
ஓட்டை விழுந்திருக்கிறது
உங்களால்
காயம் காயப்பட்டிருக்கிறது
நட்பில்

இனியாவது திடமாக
இருக்கப்பார்க்கிறேன்
இதுவரை
நலிந்து நலிந்து
விழுந்து விழுந்து
வலிந்து வலிந்து...

ஓ..!
முற்றிப்போகிறேன்
முற்றிப்போயிருக்கேன்

இனி
என் வாழ்க்கையை
கவனமாக
வைத்திருக்கிறேன்
நழுவலும் தழுவலும்
வழுக்கியும் விழாமலும்
ஒட்டி ஒட்டாமலும்
விழுந்தாலும் எழுந்திருக்கப்
பார்க்கிறேன்
கவனமாக.....

15 comments:

Chitra said...

நட்புத் 'தீ' வளருங்கள்
நட்புக்குத்
தீ வைக்காதீர்கள்
.........நட்பு தீ இன்னும் வளரட்டும், நண்பனே.

அண்ணாமலையான் said...

நட்புத்தீயில் இன்னொரு நெருப்பு ...

மீன்துள்ளியான் said...

நட்புக்கு தீ வைத்தவர்களை விடுங்கள் நாங்கள் இருக்கிறோம் தண்ணீர் ஊற்றி பேண

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Ramesh said...

Chitra said...

///........நட்பு தீ இன்னும் வளரட்டும், நண்பனே.//

வளரும் சித்ரா
நன்றி வருகைக்கு

Ramesh said...

அண்ணாமலையான் said...
//நட்புத்தீயில் இன்னொரு நெருப்பு //
ம்ம்
அண்ணாமலையிலும் எரியுது இப்ப
நன்றி

Ramesh said...

மீன்துள்ளியான் said...

///நட்புக்கு தீ வைத்தவர்களை விடுங்கள் நாங்கள் இருக்கிறோம் தண்ணீர் ஊற்றி பேண
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்///

நன்றி செந்தில்
ஊற்றினாப் போச்சு

Theepan Periyathamby said...

மிக அருமையான வரிகள் , மிக நன்றாக உள்ளது , ஆனால் எங்கேயோ சில ஞாபக வலிகள்

Ramesh said...

Theepan said...
//மிக அருமையான வரிகள் , மிக நன்றாக உள்ளது , ஆனால் எங்கேயோ சில ஞாபக வலிகள்///
நன்றி டா
என்னடா எங்கயோ...???

vasu balaji said...

இது எல்லாருக்காகவும் எழுதப்பட்டது றமேஸ். படிக்கும் ஒவ்வொருவரையும் உலுக்கும் வரிகள்.க்ரேட்.

Ramesh said...

வானம்பாடிகள் said...
//இது எல்லாருக்காகவும் எழுதப்பட்டது றமேஸ். படிக்கும் ஒவ்வொருவரையும் உலுக்கும் வரிகள்.

ஆமாம் உண்மைதான்

//க்ரேட்.//
நன்றிங்க

ப்ரியமுடன் வசந்த் said...

அருமை றமேஷ்...!

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடம் நண்பனாக அல்ல தங்கள் கவிதையின் வாசகனாக...!

Ramesh said...

பிரியமுடன்...வசந்த் said...
//அருமை றமேஷ்...!//
நனறி வசந்த

//இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடம் நண்பனாக அல்ல தங்கள் கவிதையின் வாசகனாக...!//

இன்னுமின்னும் வளருவோம்
நானும் கவிதையும்
நண்பனாகவும்

balavasakan said...

ம்..ம்... வார்த்தைகளில் வலிகள் தெரிகின்றன...
நட்பு நமக்கு
கற்பு
மறவாதீர்கள்
அது நம்
மனதை வளர்க்கும்
அன்பின்
உலோக வார்ப்புக்கள்

...உண்மைதான்...றமேஸ்..

Ramesh said...

Balavasakan said...
//ம்..ம்... வார்த்தைகளில் வலிகள் தெரிகின்றன...//
ம்ம்
எல்லோருக்காகவும் எழுதினேன்
மனசு வலித்ததால்
நன்றி பாலா

anuthinan said...

அண்ணா கவிதையை அருமை!!!

//நட்புத் 'தீ' வளருங்கள்
நட்புக்குத்
தீ வைக்காதீர்கள்//

பிடித்த வரிகள்!!! உங்களுக்கும் எனது நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு