Pages

Thursday, March 31, 2011

வெப்பத்தில் வளரும் விதைகள்

தாய்க் குழல்ப் பிட்டு
ரூபாய்கள்

வெளிநாட்டு பணிப்பெண்ணின்
வியர்வைகள்

வலைகளில் சிக்கும் மீன்களில்
நிரப்பிக்கொள்ளும்
உண்டியல்கள்

பாட்டு, பட இறுவட்டுகளில்
சில்லறைகள்

தந்தை அகற்றும் - நகரத்
திண்மக்கழிவுகள்

கதிரை மேசை செய்யும்
மரக்குற்றிகள்

சாமிக்கு பூசைசெய்யும்
பூக்கள்

துணிகளை வெட்டி
கலையாக்கும்
தையல்கள்

மரக்கறிகளை தேடிவாங்கி
கடைகளுக்கு கொடுக்கும்
கால்கள்

நிறுவக கதவு திறந்து
காவல்காக்கும்
கால்கள்

செங்கல்களை அடுக்கி
கையைச் சுட்டுக்கொள்ளும்
சீமெந்துகள்

புகையிரத தண்டவாளத்தின்
பழுதுபார்க்கும் சிலிர்ப்பர்
கட்டைகள்

அத்தனை கண்ணீரின்
தொப்புள் கொடிகளில்
படிக்கும் எனது
பள்ளி மாணவர்கள்
வெப்பத்தில் வளரும்
விதைகள்

ஒவ்வொருநாளாய்
இறந்துகொண்டு
நான்..

12 comments:

விஜய் said...

மிகவும் ரசித்தேன் உங்கள் சொல்லாடலை

வாழ்த்துக்கள்

விஜய்

Chitra said...

அத்தனை கண்ணீரின்
தொப்புள் கொடிகளில்
படிக்கும் எனது
பள்ளி மாணவர்கள்
வெப்பத்தில் வளரும்
விதைகள்

ஒவ்வொருநாளாய்
இறந்துகொண்டு
நான்..



..... வலி .....

நிரூபன் said...

பாட்டு, பட இறுவட்டுகளில்
சில்லறைகள்//

வணக்கம் சகோதரம், எப்படி நலமா?
உடல் உபாதைகள் எல்லாம் மாறி விட்டனவா?

பாட்டு பாட என்று வந்தால் இன்னும் அழகாக இருக்கும்.

நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...
This comment has been removed by the author.
ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஎனது
பள்ளி மாணவர்கள்
வெப்பத்தில் வளரும்
விதைகள்ஃஃஃஃ

ஆம் அண்ணா அவர்கள் விருட்சங்களாய் நிழல் தருவார்கள் அப்போது பல் ஆறிக் கொள்ளலாம்...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

Anonymous said...

நல்லதொரு கவிதை முயற்சி பெரும்பாலும் குறைகள் எதுவும் கண்ணுக்கு புலப்படவில்லை. பொருள் புரிதல் ஆங்காங்கு இடருகிறது.. நல்ல கவிகள் பல எழுத வாழ்த்துக்கள் ...

ஈழத்தமிழ் சொற்கள் இயல்பாக வந்துள்ளன... அவற்றை கீழே விளக்கிவிட்டால் மேலும் பயன்பாட்டுக்கு வரும்.. புரியாதவர்களுக்குப் புரியும்

Jana said...

nICE RAMESH:)

Ramesh said...

நன்றி விஜய்
நன்றி சித்ரா
நன்றி நிரூபன்
நன்றி சுதா
நன்றி இக்பால்
நன்றி அண்ண

அத்தனையும் எனது வகுப்பு மாணவர்களின் பெற்றோரின் குடும்பம் வருமானம் அல்ல வாழ்க்கையை ஓட்டிக்கொள்ளும் தொழில்கள் நண்பர்களே.
* பிட்டு அவித்து விற்கும் தாய்
* லெபனானில் பணிப்பெண்ணாய் தாய்
* மீன்பிடித்தொழில் செய்யும் தந்தை
* வீடியோ சீடி கடை வைத்திருக்கும் தந்தை
* மாநகர சபை திண்மக்கழிவகற்றும் தொழிலாளியாய் தந்தை
* ஓடாவி (Carpenter)யாய் தந்தை
* ஐயராய் அப்பா
* தையல்காரியாய் அம்மா
* மரக்கறி வாங்கி கடைகடையாய் கொடுக்கும் தாய்
* காவலாளி (Security Guard)ஆக அப்பா
* மேசன் (Meson) ஆக அப்பா
* Railway Sleeper Checker ஆக அப்பா

வேதனையில் நான் ஐயா....

Kannan said...

நிறுவக கதவு திறந்து
காவல்காக்கும் கால்கள்
//

Excellent!

Anonymous said...

//அத்தனையும் எனது வகுப்பு மாணவர்களின் பெற்றோரின் குடும்பம் வருமானம் அல்ல வாழ்க்கையை ஓட்டிக்கொள்ளும் தொழில்கள் நண்பர்களே. //

தங்களின் கருத்து எனது இதயக் குழாயை அடைத்துவிட்டது.

காலம் மாறும்,
உதவும் கரங்கள்,
வலுவாகும் சிந்தனைகள்,
பசிக்கும் வயிறு
ஆற்றும் ஒரு நாள்,
கனவில் கரையும்
இன்றைய நினைவுகள்,
மகிழ்ச்சிப் பொங்க
ஒற்றுமை ஓங்க,
வெற்றிகள் பல
கைத்தட்டல்கள் பல,
கிடைக்கும் நாளில்
எனது செபம் உங்களுக்காக
என்றுமே
தோழரே !!!

கவலைப்பட வேண்டாம் காலம் மாறும் ...................... !!!

நிரூபன் said...

வணக்கம் றமேஸ், உங்களின் கவிதை மீதான சரியான புரிந்துணர்வின்றி எனது பின்னூட்டத்தை அனுப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். இரு தடவைகள் படித்தேன், ஆனாலும் அதன் பின்னர் தான் ‘’மற்றவர்களைக் காயப்படுத்தி வாழத் துடிக்கும் உள்ளங்கள்’ எனும் தொனியில் என் கருத்தினை வழங்கினேன்.

என் பார்வையில் கவிதையில், இவ்வாறு அன்றாடம் வேலை செய்யும் உள்ளங்களைப் பார்க்கும் போது அந்த உள்ளங்களை வைத்து முதலாளிகள் வேலை வாங்கி நல் வாழ்க்கை வாழ்கிறார்கள் எனும் தவறான புரிதலில் எனது பின்னூட்டத்தை அனுப்பியிருந்தேன். மன்னிக்க..

நீங்கள் விளக்கிக் கூறும் வரை அடியேனுக்கு அத்தனை கண்ணீரின்
//தொப்புள் கொடிகளில்
படிக்கும் எனது
பள்ளி மாணவர்கள்
வெப்பத்தில் வளரும்
விதைகள்//

இவ் வரிகளைப் பிரித்தறியும் பக்குவம் வரவில்லை, மன்னிக்கவும்.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு