Pages

Sunday, May 15, 2011

சிதறும் சில்லறைகள் - 16 ( செலவழியுங்கள்)


இன்றைய தினம்

"சர்வதேச குடும்ப தினம்"
குடும்பங்களில் ஏற்படும் உளப் பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே மருந்து குடுப்பத்வர்கள் சேர்ந்து கதைத்து பரஸ்பர தன்மையினூடு உல்லாச நிலையை மனதுக்குள் சேமித்துக்கொள்ளும் தன்மைதான்.
இதற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ஒரு கதை: "அம்மா வாங்கிய செல்போன்..."

"அவசர அவசரமாய் தேடிக்கொண்டிருந்தாள் சுமி செல்போனைக் காணல என்று தனது மகளும் கணவரும் அவளுமாய் மூலைமுடுக்கெல்லாம் தேடியும் செல்போன் கிடைக்கல. அந்த சீனத் தயாரிப்பான சிவப்பும் கறுப்புமாய் வர்ணம் பூசிய விலைகுறைந்த பார்க்க ஏதோ நல்ல மார்க்ட் உள்ள செல்போனாய் தனது அத்தனை அவசரங்களையும் வேகத்தையும் கொண்டுசெல்ல உதவிக்கொண்டிருந்த அது இப்ப அவசரமாய் தேவைப்பட்டது உயர்கல்வி நிலையத்திலிருந்து இப்ப உடனடியாக அழைப்பொன்று வரும் என்று பதறிக்கொண்டிருந்ததையெல்லாம் மெளமாய் பார்த்துக் கொண்டிருந்தான் தேசிகன்.

ஒரு தரமிக்க போனுக்கு இவ்வளவு கஸ்டப்படுறாங்களே... சே.. அம்மா உழைக்கிற உழைப்பில் ஏன் புதிசா ஒரு நல்ல தரம் கூடிய உடல்நலத்துக்கு பாதிப்பில்லாத ஒரு செல்போனை வாங்கினால் என்ன?? என்றெல்லாம் தனக்குள்ளே கேட்டுக்கொண்ட தேசிகன் நேற்று தனது அக்கா பாடசாலையில் செல்போன் சம்பந்தமாக நடந்த கருத்தரங்கில் சொன்னவற்றை அம்மாகிட்ட சொல்லும்போது கேட்டுக்கொண்டதை மீட்டுப்பார்த்துக்கொண்டான் மறுபடியும்.

அவள் " அம்மா இப்ப மிகவேகமாகவும் அதிமாகவும் பயன்பாட்டிலிருக்கும் செல்போனால் தான் வருத்தங்களும் பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. இப்பொழுது மலிவாகக் கிடைக்கும் செல்போன்களினால் உடல்நலத்துக்கு கேடும் காது மற்றும் பல உறுப்புக்களுக்கு பாதிப்பும் மூளையில் கட்டி இன்னும் புற்றுநோய் போன்ற பல நோய்கள் உருவாவதற்கும் காரணமாக இந்த தரமற்ற செல்போன்களே காரணமாய் அமைவதாய் .... என்று விரிவுரையில் நடந்த அத்தனை விடயங்களையும் சொல்லிக்கொண்டிருந்ததை கவனமாய் கேட்டுக்கொண்டிருந்த தேசிகன் அடிக்கடி அம்மாட செல்போனை பார்த்து அவள் சொன்னவற்றை பரீட்சித்துப் பார்த்துக்கொண்டே இருந்ததை வீட்டிலிருந்த யாரும் கவனிக்கல.

அப்படியே தேசிகன் வீட்டின் மேல்மாடியில் ஏறி பலமாக அம்மாவின் அந்த செல்போனை தரையை நோக்கி தனது பன்னீரெண்டு வயதுசக்திக்கேற்ப வீசி எறிந்தான் இனிமேல் அம்மாவோ யாரோ இதைப் பயன்படுத்தப்படக்கூடாதென்று...
அப்பா "தேசிகன் நீ ஏன் தேடல போனை நாங்கள் எல்லோரும் தேடும் போது நீ மட்டும் பேசாம இருந்தா "..
"அப்பா... அப்பா.... அம்மா.... நான் சொன்னா நீங்க என்னை அடிப்பீங்க..." கண்ணீரை பொலபொலவென விழுத்திக்கொண்டிருந்தான். "ஏன்டா என்ன.. என்ன பிழை செய்த"
"நான்.. நான் " . "சொல்லுடா".. " நான் அதை உடைச்சு எறிஞ்சிட்டேன்.. " அடிக்காதீங்கப்பா.. அப்பா"

என்று தான் அறிந்த அக்கா சொன்னவற்றையெல்லாம் சொல்லி " அம்மா எனக்கு நீங்க வேணும் அம்மா.. வீட்டில அதிக அழைப்புக்களும் தொலைபேசிக்கான அதிகமாகச் செலவழிப்பதும் நீங்க தானே அம்மா... உங்களுக்கு புற்றுநோய் அல்லது மூளைக்கட்டிகள் வந்தா நான் எப்படிமா வாழுற.. எனக்கு அம்மா என்று சொல்ல வேற யாரம்மா இருக்கிறா .. அம்மா .. அம்மா நான் பிழைசெய்யலம்மா... எனக்கு நீ வேணும்... "

வந்த கோபத்துக்கு அவனைத் திட்டித்தீர்த்துக்கொண்டு அந்த உடைந்த செல்போனைத் தேடி சிம்கார்ட்டை தேடிஎடுத்துட்டு அந்த இரவு கனமான இராத்திரியாகவும் வேனையாகவும் அமைந்தது அவர்கள் நால்வருக்கும்..
அடுத்த நாள் காலையில் தேசிகன் எழுந்து " அம்மா எனக்கு இரவெல்லாம் நித்திரையில்ல..என்னால நல்லா தூங்கிக்கொள்ள முடியல.. எனக்கு நீ வேணும்மா.."என்றவனை மீண்டும் ஏசிவிட்டு பாடசாலைக்கு கூட்டிக்கொண்டுவிட்டுட்டு அவளும் பாடசாலைக்கு போய் கண்கலங்கியவளாய்.. " அவன் செய்த அத்தனை செயல்களும் எனக்காகத் தானே என்வாழ்வு அவனோடு இருக்கவேணும் என்றுதானே இவன் அப்படிச் செய்திருக்கிறான்.. நான் மிகவும் அவசரமான விரைவான வாழ்க்கை நடத்தி உழைத்து வருகிறேன். யாருக்காக எல்லாம் எம்புள்ளைகளுக்குத் தானே.. அவன் யோசித்ததெல்லாம் என்னால் யோசிக்கவோ அவனோடு அளவளாவவோ நேரத்தை ஒதுக்கிக்கொள்ளாமல் நான்... என்ன வாழ்க்கை.. ஏன் அவ்வளவு ஏச்சு அவனுக்கு.. அவன் என்மகன்.. அவனுக்கு நான். அவன் ஆசை நான்.. .. "

பின்னேரம் தேசிகன் வந்து வீட்டிலே ஒரு பையில் அழகிய பெட்டி "அம்மா அம்மா" என்று பெருமிதத்தால் அவளைக்கட்டி அணைத்துக்கொண்டு அழுது இந்த போன் அழகானதும் பாதுகாப்பானதும்.. நீங்க என் அம்மா"... என்று அந்த புதிய போனை மீண்டும் பார்த்துக்கொண்ட தேசிகனை ஓரமாய் பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா....


செலவழியுங்கள்


பிள்ளைகளுக்காக நேரத்தை செலவழியுங்கள். குடும்ப உறவில் ஏற்படும் அத்தனை மனக்கஸ்டங்களுக்கும் காரணம் நாம் அனைவரும் மனம்விட்டு கதைப்பதில்லை. பணம், உழைப்பு, பொருளாதார பெருக்கம் அத்தனை சுகத்தைத் தராது நமது சுகபோக வாழ்க்கை என்கிற நினைப்பிலே அவை நிலைநிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் மனசு நலம்பெற அத்தனை குடும்ப உறவுகளோடும் ஒன்றிணைந்து கதைத்து பிரச்சனைகளுக்குத் தீர்வுகண்டு மகிழ்ந்து குலாவும் பொழுதிலே வாழ்க்கை இனிக்கும். எவ்வளவு செலவழித்தாலும் பணத்திலே நிம்மதி இல்லை. குறையுது என்ற நினைப்பே எண்ணத் தோன்றும். இல்லையே என்ற எண்ணமும் வாழ்க்கை வாழப்படாமல் போகும். ஆனால் அதற்கு பதிலாக பெற்றோர் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழித்து மகிழ்ச்சியை சேமிக்கலாம் இல்லையா..

"இன்றைய ஸ்டேடஸ்"

"அவசர யுகத்திலே மணித்தியாலங்களை செக்கன்களில் கடக்கும் வாழ்க்கை வாழும் நாம் ஆண்டுச் சந்தோசங்களை தவறவிடுகிறோம். "

எப்போதும் எதிர்காலத்துக்காக வாழுகிறோம் நிகழ்கால சுகத்தையும் இப்பொழுது கரைத்துக்கொண்டு வேதனைகளை தேக்கிக்கொண்டு.. வாழும் பொழுதுகளில் இனிய சொற்களையும் பரஸ்பர இன்பங்களையும் சேமியுங்கள் நேரத்தை செலவழித்து எதற்காக வாழ்கிறோம் என்பதன் அர்த்தமுணர்ந்து ...

குறும்படம்
last bell

5 comments:

நிரூபன் said...

குடும்பங்களில் ஏற்படும் உளப் பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே மருந்து குடுப்பத்வர்கள் சேர்ந்து கதைத்து பரஸ்பர தன்மையினூடு உல்லாச நிலையை மனதுக்குள் சேமித்துக்கொள்ளும் தன்மைதான்.
இதற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது//

நம்ம நாட்டிலை எங்க பாஸ் இப்படியான தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க.

நிரூபன் said...

பழையன கழிதலும், புதியன புகுதலும் இயல்பு என்பது போல பழைய தொலை பேசியை எறிந்து விட்டு,புதுத் தொலை பேசி வாங்க தேசிகன் போட்ட நாடகத்தினையும்,
தொலை பேசியால் ஏற்படும் விளைவுகளையும் உங்கள் சிறுகதை விளக்கி நிற்கிறது.

நிரூபன் said...

அவசர யுகத்திலே மணித்தியாலங்களை செக்கன்களில் கடக்கும் வாழ்க்கை வாழும் நாம் ஆண்டுச் சந்தோசங்களை தவறவிடுகிறோம். "//

அருமையாக இருக்கு சகோ, இக் கால யதார்த்தத்தை ஸ்டேட்டஸ் ஆக வடித்திருக்கிறீர்கள்.

நிரூபன் said...

Last bell- வன் முறைகளால் ஏற்படும் பின் விளைவுகளை அழகாகச் சொல்லும் ஓர் குறும்படம்.

ஹேமா said...

கைபேசியின் விளைவுகள் பற்றிய கதையும்,குறும்படமும் இன்றை காலத்தேவையான விஷயங்கள் !

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு