காற்று நுரைக்கும்
ஈரப்பொழுதுகள்
காதல் தடவும்
பார்வைவீச்சுகள்
உயரக்குடை பிடித்த
நீ
தேகம் நனைத்த
சாரல்
நேர்கோட்டு வீதியில்
பயணித்தேன்
குறுக்கு கோடுகளில்
நிறுத்திவிட்டாய்
கரடுமுரடான தார்வீதியை
கார்பட் விரித்த
தளமாக்கிவிட்டாய்
நீ சாலையைக் கடக்கும்
பாதசாரி
நான் நிறுத்திய
சைக்கிளோட்டி
பச்சைவிளக்கு
எரிகிறது
காதல்
கடந்துசெல்கிறது
Thursday, December 15, 2011
காதல் கடந்துசெல்கிறது
Labels:
கவிதைச் சில்லறைகள்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
வணக்கம் சகோ நலமா?
@Kana varo
நலமே நலமே. தாங்கள் நலமா?
மிகசிறந்த வர்ணனை இகசிறந்த ஆக்கம் காதல் ஏழை பணக்காரன் என பார்த்து வருவதில்லை வெல்லட்டும் வெல்லட்டும் இரமேசின் காதல் வெல்லட்டும் ...
நல்ல கவிதை....
@மாலதி
நன்றி மாலதி
@john danu
நன்றி டனு
Post a Comment