Pages

Tuesday, September 15, 2009

கண்ணன் காதல்

ராதையர் கூட்டத்தில் அவன்
கண்ணன்
கருப்பு மன்னன்
விரும்பிச்சுவைக்க வேண்டுகிறான்
காதல் கரும்பு
காற்றுக்கு கூட தெரியாது
என நினைத்தான்
காட்டுத்தீயாய் ஆனது அவன்
காதல் தான்

புல்லாங்குழல் ஏந்திய
அவன் விரல்கள்
அந்த அழகிய புல்லாங்குழலை
மீட்ட முடியாமல் தவிக்கிறான்
காற்று புகாவிட்டால்
விரல்களை அசைத்தும்
புல்லாங்குழல்
பாடல் இசைக்காது
அவளுக்கு
காதல் வராவிட்டால்
கட்டழகு கண்ணனுக்கு
கவிதை வராது


எத்தனை துளைகள் இருந்தும்
என்ன பயன் புல்லாங்குழல்
அவள் பெயரை இசைக்காமல் இருந்தால்

ஊர் சுத்தி திரியும்
வாலிபன் தான்
அவன்
உள்ளத்தில் காதல்
நெருப்பு

ஆனாலும்
அவன் நெஞ்சில்
ஈரம் துளிக்கும்
காதல் இனிக்கும்

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு