Pages

Saturday, September 19, 2009

நவராத்தி விரதம் ஆரம்பம்



"ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை
தூய உருப்பளிங்கு போல்வாள் என்
உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்


படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரைபோற் கையும் துடியிடையும்
அல்லும் பகலும் நவரத முந்ததித்தாற்
கல்லுஞ் சொல்லாதோ கவி"


விரதங்களோடு சேர்ந்த வழிபாடுகளில் வீட்டில் வழிபடச் சிறந்தது நவராத்ரி விரத வழிபாடு.
இவ்வழிபாடு புரட்டாதி மாத வளர்பிறையில் ஆரம்பமாகும். ஒன்பது இராத்திரிகளில் வழிபாடு. நவ என்றால் புதுமை என்ற பொருள். இதனால் புதுமையான விரத இரவுகள் என்றும் சொல்லலாம்.
"சிவனுக்கு ஒரு ராத்திரி சக்திக்கு ஒன்பது ராத்திரிகள்" என்று கூறுவர். வீடிலே நவராத்திரியைத் தவிர எந்த சக்தி விரத விழாவும் கொண்டாடப்படுவதில்லை. இதுவே இதன் மகத்தான சிறப்பு.இதனால் தான் கொண்டாடப்படும் வீடு "பிரமோற்சவம்"என்று ஒரு நூல் கூறுகிறது.

ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்களும் துர்க்கைக்கும் அடுத்துவரும் மூன்று நாட்களும் இலக்குமிக்கும் இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியவை
பத்தாம் நாள் "விஜயதசமி" இதுவே வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால் கர்நாடகா மாநிலத்தில் இதை "தசரா" என்றழைப்பர்.
"இறைவனை அறிந்து உணர்வதே உண்ண்மையான கல்வி" என்று இந்து மதம் கூறுகிறது.

கிரேதா தீவில் தமிழர் முதலில் வாழ்ந்ததாக வரலாறு சான்று பகர்கிறது. தங்களுக்கு மேலான சக்தி ஒன்று இரிப்பதாய் உணர்ந்த இவர்கள் அதற்கு உருவம் தேட முற்பட்டனர். தாயே நமக்கு முதன்மையானவள் என்பதை உணர்ந்து அச்ச சக்திக்கு பெண் வடிவம் கொடுத்தனர்.
இதனால் உலகை இயக்குபவள் சக்தியாகிறாள். ஆதலால் சக்தி வழிபாடு மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது.

இச்சக்தி வழிபாட்டில் தலையானது இந்நவராத்திரியாகும். சக்தியை சித்திரை மாதம் வழிபடும் போது "வசந்த நவராத்திரி" என்றும் புரட்டாதியில் வழிபடும் போது "பாத்திரப" நவராத்திரி என்றும் அழைப்பர்.
இந்த புரட்டாதி மாத நவராத்திரி உலக மாதாவாகிய சக்தியை வழிபட்டு ஈடேருவதற்கு புண்ணிய காலமாக கருதப்படுகிறது .
மூலக்கதை:
தேவர்களை துன்புருத்திய மகிடாசுரனை அழிக்க சக்தியானவள் தன அம்சங்களாகிய ஆதிலக்ஷுமி,மகாலட்சுமி,தனலட்சுமி, தானியலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி, எனும் அட்ட இலக்சுமிகளையும் அனுப்பி ஒவ்வொரு நாளும் போர்புரிந்தாள். இவர்கள் தோல்வியைத் தழுவ ஒன்பதாம் நாள் தானே "பராசக்தியாக" போர்களம் நின்று மகிடாசுரனை அழித்தாள். இதனால் சந்தோசமடைந்த தேவர்கள் தேவியை வழிபட்ட தினங்களே இந்த நவராத்திரிகாலமாகும் என்று ஓர் வரலாறுண்டு.

துர்கை வழிபாடு:


துர்க்கையானவள் நெருப்பினழகு, ஆவேசப்பார்வை, சிங்க வாகனம் கொண்ட சிவப்பிரியை.இவள் ராட்சத குணத்தோடு இச்சாசக்தியாக முதல் நாள் மகேஸ்வரியகவும் 2 ஆம் நாள் கௌமாரியாகவும், 3 ஆம் நாள் வராகியாகவும் அருள்பாலிப்பாள்.
செல்வம், கல்வி பெறுவதற்கு வேண்டிய முயற்சிகள் மேற்கொள்ள பயமின்மை,துணிவு, உறுதி, விடாமுயற்சி, வீரம் தந்து முடிவில் வெற்றி புகழ் கௌரவத்துடன் வாழ துர்கையை வழிபடுவோம்.
இதனால் தான் முற்காலத்தில் அரசர்கள் போருக்குச் செல்ல முன் துர்க்கை வழிபாடு செய்ததாக அறியப்படுகிறது.

இலக்குமி திருநாள் பூஜை :














"பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்ற வள்ளுவனின் வாக்குப்படி லெளகீக வாழ்க்கைக்கு இன்றியமையாத நிலையில்லாச் செல்வங்களை வேண்டி இலட்சுமியை வழிபடல் ஒழுங்கு.
திருமகள் ஆனவள்; மலரின் அழகு, அருட்பார்வை, பொன்நிறமேனி, செங்கமலப்பார்வை, செங்கமல ஆசனம் கொண்ட விஷ்ணுப்பிரியை. இவள் தாமத குணத்தோடு கிரியாசக்தியாக 4 ஆம் நாள் இலக்குமியாகவும், 5 ஆம் நாள் வைணவியாகவும், 6 ஆம் நாள் இந்திராணியாகவும் அருள்பாலிப்பாள்.

3 comments:

ganesh said...
This comment has been removed by the author.
ganesh said...

ithu onnum thiruppithaaga illa sarasvathi patri ondraiyum kaanavillai

Ramesh said...

ஆமாம் கணேஸ் இதன் தொடர்ச்சியாக அடுத்த பதிவில் இட எண்ணியிருந்தேன் தவறிவிட்டது.. இருந்தாலும் அவை அனைவருக்கும் தெரிந்த விடயம். உங்களுக்கு தேவையெனில் மின்னஞ்சலிடுங்கள் தகவல் திரட்டி அனுப்புகிறேன்.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு