இன்று முதலாம் திகதி "சர்வதேச சிறுவர் தினம்".
இவ்வாண்டின் தொனிப்பொருள் “நமது சிறுவர்களுக்காக விடுதலை பெற்ற பூமியை கட்டியெழுப்புவோம்” என்பதாகும்.
நமது நாட்டில் சிறுவர்கள் தமது உரிமைகளை அனுபவிக்கக் கூடியதானதும் துஷ்பிரயோகங்கள் இல்லாததுமான ஒரு சூழலை நமது சிறுவர்களுக்காக நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை இந்த தொனிப்பொருள் வலியுறுத்துகிறது.சிறுவர்களுக்காக இவ்வாறானதொரு சூழலை கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கம் உட்பட அனைத்து வளர்ந்த வயதுவந்தவர்களுக்கும் உள்ளது.
"கல்வி கற்பது" சிறுவரின் உரிமை என்ற கருத்தும், சிறுவர்களை வேலைக்கு அனுப்புவது அல்லது அமர்த்துவது சிறுவர் உரிமை மீறலாகும் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தப்பட வேண்டும்.
உலக நாடுகளில் இடம்பெறும் யுத்தங்கள், கலவரங்கள், இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றில் அதிகமாக பதிக்கப்படுபவர்கள் நம்ம சிறுவர்களே!
எனவே தான் ஒவ்வொரு நாடும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து "சிறுவர் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்" என்ற அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாக பல்வேறு பிரகடனங்களும் சட்டங்களும், காப்பீடுகளும் எழுதப்பட்டிருக்கின்றனவே ஒழிய நடைமுறையில் சிறுவர் வாழ்க்கை பெரும் சவாலாகவே உள்ளது என்பது மிகவும் கவலைப்பட வேண்டிய விடயம். ஏனெனில் அன்றாடம் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களின் போக்கு அதிகரித்து கொண்டே வருகின்றன.
ஐ. நா. சிறுவர் உரிமைகள் சாசனத்தில் "18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள்" என்றும் உறுப்புரை 28 இல் "சிறுவர்களின் கல்வி உரிமையையும்" வலியுறுத்துகின்ற போதிலும் நம்ம நாட்டில் 5 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி வழங்கப்பட்ட போதிலும் கூட, நடைமுறையில் பல பிரச்சினைகளை சிறுவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.
யுத்த சூழ்நிலையற்ற எமது நாட்டில் இனி சிறுவர் நல்வாழ்வுக்கு ஒரு விதி செய்வோம்.
இதோ இந்த சிறுவர் பாடுகிறார்கள் இங்கு:
ஓலை குடிசையில் எம் படிப்பு - அன்று
வீழ்ந்து கிடந்தது நம் எதிர்வு
ஓங்கி எழுந்திடுவோம் கல்வியில் -இன்று
ஒன்றாய் தேசத்தை எழுப்புவோம் நல்வழியில்
ஆடிப் பாடி விளையாடுவோம் ஆனந்தமாய்
அன்பைப் பெருக்கி ஒன்றிணைவோம்
கூடி மகிழ்ந்திடவே நம் தேசம் -வெள்ளைப்
பூக்கள் கொண்டு வளர்த்திடுவோம்
இனி ஒரு யுத்தம் வேண்டாம் - நமக்கு
சமாதான சத்தம் வேண்டும்
நாளைய தலைவர்கள் நாம் -வெற்றி
தேசத்தில் வீறுநடை பயில்வோம் வா
நேற்றைய பொழுது முடிந்து விட்டது
இன்றைய பொழுதும் உதித்துவிட்டது
நாளைய பொழுது நமக்காய் ஆகட்டும்
எழுந்துவிடு இனி எல்லாம் கிழக்கு.........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment