நான்
உயர உயர வளர்ந்து
முட்டி மோதி - என்
பருவம் புடைத்து
புனல் பெருக்கி
பூமி நனைத்திட
அந்த மழைக்காடுகள்
எங்கே!
என்றது பெண் மேகம்
நான்
வரண்டு வரண்டு
என் தேகம்
பிளந்து வெடித்து
காய்ந்து இருக்கிறேன்
என் மேனி குளிர
மோகம் கொண்டு
மன்மதத் தாரைகள்
பொழியும்
மேகங்கள் எங்கே!
கேட்டுக்கொண்டது பூமி
என் வெள்ளை மனது
கொள்ளை அழகால்
குளிர்ந்து நிமிந்து
கல் மலையானேன்
அந்த சூரிய ஒளியால்
கருகிக் கருகி - இன்று
உருகி உருகி
கடலாகிறேன்
கண்ணீர் சொரிந்தது
துருவப்பனிக்கட்டிகள்
கரும்புகை - கடும்
பார வாயுக்கள்
பச்சை வீட்டு வாயுக்கள்
பெருக்கம் இவற்றால்
சூரியஒளி வெளியேற்றத்
தடுக்கம்
என் தேகம்
வெப்பத்தால் புழுக்கம் என்று
புழுங்கியது பூமி
முடியவில்லை - புற
ஊதாக் கதிர்கள்
என்னை ஊடுருவுகின்றன
தடுக்க முடியவில்லை
நான்
நலிவுறுகின்றேன் என்னைக்
காப்பாற்றுங்கள்
கதறியது
ஓசோன் படை
ஓ.....!
இதுதான்
கைத்தொழில் புரட்சியின்
கால வெளியீடுகளா..??
உலகமயமாதலின்
உன்னத விளைவுகளா....???
மனம் கொண்ட
மனிதனே!
உலக உருண்டையில்
உன் உயிர்ச்சுவடுகள்
எச்சப்படுமுன்
உலகில் உன்னை
நிச்சயப்படுத்திக்கொள்
உலகைக்காப்பாற்று
உன்னைத் தேக்கிக்கொள்ளலாம்...
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
good thought. nice. expose such concept and make them aware about global warming . thank u.
Madurai Saravanan said...
நன்றி சரவணன்
முதல் வருகை மற்றும் முதல் பின்னூட்டம்
தொடர்ந்திருங்கள்
//concept and make them aware about global warming///
ம்ம் அதற்காகத்தான்
good post. nice formation!
அருமையான சிந்தனைகள் றமேஷ்...!
ஏங்கப்பா. அசத்துறா றமேஸ். ஆனா ஓசோன் ஓட்டைக்கு பொல்யூஷன் காரணமில்லைன்னு ஒரு புது தியரியும் விரிவாக ஆராயப் படுகிறது தெரியுமோ? இது வளர் சிதை மாற்றம் மாதிரி இயற்கை தன்னையே மாற்றிக் கொள்ளும் வினை என்று சொல்லப் படுகிறது.
அருமையான கவிதை ... ஒவ்வொரு வரிகளும் அற்புதமாக பொருந்தி இருக்கின்றன வாழ்த்துக்கள்
sarvan said...
நன்றி சரவணா,
வருகை மற்றும் பின்னூட்டலுக்கு
பிரியமுடன்...வசந்த் said..
நன்றி வசந்த்...
வானம்பாடிகள் said...
///ஏங்கப்பா. அசத்துறா றமேஸ். //
நன்றிங்க
///ஆனா ஓசோன் ஓட்டைக்கு பொல்யூஷன் காரணமில்லைன்னு ஒரு புது தியரியும் விரிவாக ஆராயப் படுகிறது தெரியுமோ?
தெரியாம போச்சு
///இது வளர் சிதை மாற்றம் மாதிரி இயற்கை தன்னையே மாற்றிக் கொள்ளும் வினை என்று சொல்லப் படுகிறது.///
ம்ம்
இதைப்பற்றி இனித்தான் படிப்பேன். தகவலுக்கு நன்றி
Balavasakan said...
நன்றி மச்சோ...
Hi ramesh,
Congrats!
Your story titled 'பூமி நோகுது... காலநிலை மாறுது' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 5th January 2010 02:50:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/164553
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
நனறி தமிழிஷ் க்கும் ஓட்டுப்போட்டவங்களுக்கும்
கலக்கி இருக்கீங்களே நண்பா...எல்லா விசயமும் கவர் பண்ணிடீங்க...ரொம்ப நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்..ரமேஷ்....
kamalesh said...
நன்றி கமலேஷ்.
வருகை வாழ்த்துக்களுக்கு
//கரும்புகை - கடும்
பார வாயுக்கள்
பச்சை வீட்டு வாயுக்கள்
பெருக்கம் இவற்றால்
சூரியஒளி வெளியேற்றத்
தடுக்கம்
என் தேகம்
வெப்பத்தால் புழுக்கம் என்று
புழுங்கியது பூமி//
உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் ....
மகா said...
நன்றி மகா
வாழ்த்துக்களுக்கம் வருகைக்கும்
gud. continue
regards
ram
www.hayyram.blogspot.com
hayyram said...
Thanks Heyram
Post a Comment