Pages

Wednesday, January 20, 2010

கால்கோள் கவியரங்கில் "களரி"யின் பொங்கல் படையல்

பொங்கல் அன்று பிற்பகல் பொங்கலின் இரண்டாம் பாதி (ஹிஹி..) மட்டக்களப்பு மாவட்ட பாரம்பரிய கலை கலாசார மேம்பாட்டுக்கழகம் "களரி" நடாத்திய "தைப்பொங்கல் விழா 2010" நிகழ்வுக்கு சென்று முதன் முதலாய் கவியரங்கிலே பங்குபற்றக்கூடிய வாய்ப்பு கிட்டியது.
"தைப்பொங்கல் விழா 2010"
தலைமை: திரு மு.சதாகரன் (தலைவர்,களரி மேம்பாட்டுக்கழகம்)
இடம்: மட் / களுதாவளை மகா வித்தியாலய பிரதான மண்டபம்

இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் சி்.மெளனகுரு அவர்களும் கெளரவ அதிதிகளாக இ.வை.எஸ். காந்தன்குருக்கள் (ஏரூரான்),  மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி மங்கள விளக்கேற்றலுடனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடனும் களரி கீதமுடனும் ஆரம்பிக்கப்பட, வரவேற்புரை எமது பிரதேச கலாச்சார உத்தியோகர்த்தர் திரு.த.பிரபாகரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.தொடர்ந்து நிகழ்ச்சிகள்.
எமது பிரதேச பாடசாலை மாணவர்களின் பல வெற்றி நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. இதில் தேற்றாத்தீவு மகாவித்தியாலய மாணவர்களின் சிறுவர் நடனம் முதல் நிகழ்ச்சியாக தொடர்ந்து களுதாவளை மகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலய மாணவர்களின் கிராமிய நடனம் சிறப்பாக அரங்கேறியது. கிராமத்தின் பண்பாடு வெளிச்சம் போட்டுக்காட்டிய நிகழ்வாக இந்நடனங்கள் விளங்கியது, ரசிக்கத்தக்கதாக இருந்தது. தொடர்ந்தது கவியரங்கு "அழுவதா சொல்..." என்ற தலைப்பில். கவிஞர் "ஏரூரான்" தலைமையில் இது நடைபெற்றது. கட்டியம் கவிஞர் தேனூரான் சொல்ல மரபுக்கவிதையில் கவிஞர் தணிகாசலம்(தணி) அழுவதா சொல் கவிதை இயம்ப நான் புதுக்கவிதையில் கவியரங்கில் கால்கோள் இட்டேன். தொடர்ந்தார் திரு.திருநாவுக்கரசு அவர்கள்.
பின்னர் பேராசிரியர் சி. மெளனகுரு அவர்களின் உரையில்,
"பின்வரும் மூன்று விடயங்களில் களரி களைகட்டியது மனசுக்கு பிடித்தது மாணவர்களின் மண் சார்ந்த காடசிகளின் வெளிப்பாடு சிறுவர் நாடகம் நடனம் என்பன கண்ணுக்கு ரசனை என்பதை விட அவர்களின் மணவாசனை தான் பாராட்டப்படவேண்டியது.
அடுத்து வெகுசன ஊடகங்களில் புதைந்துள்ள மாயையில் விழுந்துள்ள மாணவர்களுக்கு "களரி" ஒரு முன்மாதிரியாக களம் அமைத்துக்கொடுத்துள்ளது.
மற்றையது நீண்ட காலத்துக்குப்பிறகு ஒரு வித்தியாசமான தலைப்பில் நிழ்ந்த கவியரங்கு கண்டது மனதுக்கு மகிழ்ச்சி. அதுவும் மரபில் மாறாமல் புதியதுக்கும் களம் அமைத்து இக்கவியரங்கு பழையதுக்கும் புதியதுக்கும் பாலமாக அமைந்தது பிடிச்சிருக்கு....
களரி இன்னும் பல மாணவர்களை வளர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு உளவியல் சிகிச்சையளிக்கக் கூடிய நிகழ்வு இது போன்ற பண்பாட்டு கலை கலாசார நிகழ்ச்சிகளே.. சினிமா மாயையிலிருந்து அவர்களை மீட்டெடுத்து மாணவர்ளைக் கொண்டே மாணவர்களை உருவாக்க வேண்டும்...." என்று சொல்லி முடிக்க..

தொடர்ந்து தேற்றாத்ததீவு மகா வித்தியாலய மாணவர்களின் "அழிகிறது அரக்கர் படை எரிகிறது லங்காபுரி" என்ற நாட்டிய நாடகம் சிறப்பாக அரங்கேறியது. பார்த்தவர்கள் மெய் மறந்து நிற்க மயிர்க்கூச்சலுற வைத்த நாடகமாய் அமைந்தது, மனதை விட்டு மறக்க முடியாத நெஞ்சில் தித்திக்கும் பொங்கலானது. இறுதியாக களுதாவளை மாணவர்ளின் வில்லுப்பாட்டுடன் பொங்கல் விழா நிறைவுற்றது.

நிகழ்வுகளின் நிழல்படங்கள்

12 comments:

கமலேஷ் said...

பொங்கல் திருநாள் உங்களுக்கு மிகவும் அர்த்தம் உள்ளதாக அமைந்திருக்கிறது , உங்களின் பகிர்வுக்கு நன்றிகள் மற்றும் உங்களின் கவிதை அரங்கேற்றத்திற்கு வாழ்த்துக்கள் ரமேஷ்...

vasu balaji said...

நல்ல பகிர்வு. கவிதை அரங்கேற்றத்திற்கு பாராட்டுகள். கவிதை எங்கே?

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பகிர்வு, படங்கள் அனைத்தும் அருமை...

Chitra said...

களரி இன்னும் பல மாணவர்களை வளர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு உளவியல் சிகிச்சையளிக்கக் கூடிய நிகழ்வு இது போன்ற பண்பாட்டு கலை கலாசார நிகழ்ச்சிகளே.. சினிமா மாயையிலிருந்து அவர்களை மீட்டெடுத்து மாணவர்ளைக் கொண்டே மாணவர்களை உருவாக்க வேண்டும்...." ...........பயனுள்ள கருத்து.

உங்கள் கவிதை எப்பொழுது வருகிறது. வாழ்த்துக்கள்.

balavasakan said...

பாராட்டுக்கள் றமேஸ்... விரைவில் கவிதையை எதிர்பார்க்கிறேன்

Ramesh said...

கமலேஷ் said...

//பொங்கல் திருநாள் உங்களுக்கு மிகவும் அர்த்தம் உள்ளதாக அமைந்திருக்கிறது , உங்களின் பகிர்வுக்கு நன்றிகள் மற்றும் உங்களின் கவிதை அரங்கேற்றத்திற்கு வாழ்த்துக்கள் ரமேஷ்...///

ம்ம்
நன்றி கமலேஷ.
வாழ்க்கை அர்த்தப்படுகிறதுஃ...

Ramesh said...

வானம்பாடிகள் said...

//நல்ல பகிர்வு. கவிதை அரங்கேற்றத்திற்கு பாராட்டுகள். கவிதை எங்கே?//

நன்றி அண்ணா
இன்று முதல் அந்தக் கவிதை வரும்

Ramesh said...

Sangkavi said...

///நல்ல பகிர்வு, படங்கள் அனைத்தும் அருமை...//
நன்றி சங்கவி கிராமத்து படையல்தான் இதுவும்

Ramesh said...

Chitra said...

///..........பயனுள்ள கருத்து.///
இது பேராசிரியர் சி.மெளனகுரு அவர்களின் உள்ளக்கிடக்கையிலருந்து தானே....

/உங்கள் கவிதை எப்பொழுது வருகிறது. வாழ்த்துக்கள்.//
இன்று வரும்
நன்றி

Ramesh said...

Balavasakan said...

//பாராட்டுக்கள் றமேஸ்... விரைவில் கவிதையை எதிர்பார்க்கிறேன்///
நன்றி பாலா
இன்று வரும்

Theepan Periyathamby said...

உங்களின் கவிதை அரங்கேற்றத்திற்கு வாழ்த்துக்கள்

Ramesh said...

Theepan said...
நன்றி டா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு