Pages

Tuesday, December 28, 2010

நீ உதித்து உதிர நான் உயிர்ப்பித்து

ஒவ்வொரு முறையும்
ஒவ்வொன்றாய் ஆனாய்

பூக்களாய்
சிரிப்புக்கள்
இலைகளாய்
சிலிர்ப்புக்கள்
தளைகளாய்
உயர்வுகள்
பழங்களாய்
வெற்றிகள்

ஒவ்வொரு முறையும்
ஒவ்வொன்றாய் உதிர்ந்தாய்

உதிர்ந்த பூக்களாய்
எண்ணங்கள்
இலையுதிர்வுகளாய்
தோல்விகள்
வாடிய தளைகளாய்
மனவெழுச்சிகள்



ஒவ்வொருமுறையும்
ஒவ்வொன்றாய்
உதித்துக்கொண்டன
உயிர்த்தெழுந்து கொண்டேன்
கிழிக்கப்பட்டன
உயிர்ப்பிழிந்து கொண்டேன்

நீ போகிறாய்
நான்
காத்திருக்கிறேன்
இருட்டிலும்
விண்மீன்களுகாய்
இதுவரை
ஆனதுக்காக
நன்றி சொல்லுக்கொண்டு



நீ
உதித்து
உதிர்ந்தாய்
நான்
உயிர்ப்பித்திருக்கிறேன்

9 comments:

ம.தி.சுதா said...

ஃஃஃஃநீ போகிறாய்
நான்
காத்திருக்கிறேன்ஃஃஃ

தொட்டுச் சென்று விட்டது...
போனாலும் மனதில் பதித்துச் செல்வது ஒரு பெரும் நினைவல்லவோ...

ஷஹன்ஷா said...

அருமையான பிரியாவிடை....வரவேற்புக் கவிதை....

ம.தி.சுதா said...

அருமைமயான வரிகள்... தங்கள் பதிவிலும் எனது மனதிலும்...

Jana said...

ம்ம்ம்...
god bye 2010 and Welcome 2011

KANA VARO said...

எல்லாரும் இந்த ஆண்டு முடியுது எண்டு கவலைப்பட்டா அடுத்த ஆண்டை யார் வரவேற்கிறது. வரிகள் மனதை தொட்டுச் செல்கிறது.

ஹேமா said...

வார்த்தைகள் வரவில்லை றமேஸ்.அத்தனை அற்புதம்.நான் ஏதும் எழுதுவதாயில்லை.வருவதும் போவதும் இயல்பாகிவிட்டது.எங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் எதிர்பார்ப்புக்களும் அந்த இடத்திலேயேதான் !

Unknown said...

அருமை தல!!

ம.தி.சுதா said...

தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்

Ramesh said...

@@ம.தி.சுதா
@@“நிலவின்” ஜனகன்
@@ஜனா அண்ண
@@வரோ
@@ஹேமா
@@மைந்தன் சிவா
@@சங்கவி - சங்கமகேஸ்

அனைவருக்கும் நன்றிகளும்
புத்தாண்டு வாழ்த்துக்களும்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு