""நீ மலை உச்சியின் உயர்ந்த சைபிரஸ் மரங்களாக இருக்காவிட்டாலும்
மலையடிவாரத்தின் புற்களாய் இருக்கலாம் . அதிலும் சிறந்த புல்லாய் இரு..""
(பாடசாலை பரிசளிப்பு விழாவில் பெற்றது )
""நண்பர்களை உற்றுநோக்குபவன் எதிரியை நேசிப்பவன்.
இருவருமில்லையேல் என் பாதையில் சறுக்கல்கள் ஏற்படலாம். ஆனாலும் இவர்கள்
இருவரையும் விட குடும்பத்தில் வாழ்பவன்.""
"நட்பின் நீளங்கள் புரியாவிட்டாலும் அதன் தாகம் உணர்வாய் ஒருநாள்"
"ஓ.. உயிரில்லா உயிர்க்கலத்திணிவு ஆண்டுகொள்கிறது.. ஈரவலய உடல்வெப்பம் உலர்வலயமாகிறது. பல நாட்களின் பின் இப்படி ஒரு கஸ்டம் ##வைரஸ் காய்ச்சல்#"
"மனக்குழப்பத்தில் மனஅழுத்தத்தில் ஒரு நல்லுறவு மரணத்தை வாங்கிக்கொண்டது என்னை இன்று அழுத்திவிட்டது. கண்ணீரைச் சொரிந்து தள்ளியது.:'((""
"காத்திருக்கிறேன் ஒரு மாறுதலுக்காக. மாற்றம் எனக்குள் ஆயிரமாயிரம் விதைகளை வளர்க்க காத்திருக்கிறேன். விருட்சங்களே பொறுத்திருங்கள். வேராகிறேன்""
""நான் "சேறு" தாமரைகளே! வளர்ந்து மலர்ந்துகொள்ளுங்கள். காத்திருக்கிறேன் உங்களுக்காக""
""மீண்டும் பாடசாலையில் உருவாக இல்லை உருவாக்க""
""இன்பமும் துன்பமும் நிறைந்த வேதனையில்.... அழதாலும் சிரித்தாலும்... வாழ்க்கை என்றே முற்றுப்புள்ளி...""
""இன்று மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம் புனரமைப்பு நானும் செயற்குழு உறுப்பினரானேன். விரைவில் தமிழால் தமிழுக்கு எப்போதும் போலவே உரமூட்ட ஆரம்பம்
20 Nov ""
""எந்த இடத்தில் எதைச் சொல்லவேண்டும் என்பதில் உள்ள தெளிவு எந்த இடத்தில் எதைச்சொல்லக்கூடாது என்பதிலும் இருக்கவேண்டும்##பிடித்திருக்கு""
""எமது ஊர் பாடசாலையிலிருந்து வாழ்த்துக்களைக் கேட்டதாக தகவல் வீட்டிலிருந்து காதுகளை இனிதாக்கி உறவுகளுக்கு நன்றி கூறுகிறோம்.""
""மண்ணில் வாழ்வதை விட மற்றவர்களின் மனதில் வாழ்வதில் தான் உண்மை வாழ்க்கை இருக்கிறது.##இன்று கிடைத்த குறுஞ்செய்தி##""
""நேற்றைய பொழுது ஒரு தாய்மையின் தன்மையை உறுதியை உருவாக்குதிறனைக்கண்டு நெகிழ்ந்தேன். தாயே உனக்கு நான் யாரோ ஆகலாம் உள்ளத்தில் எனக்கு ஏதோ ஒரு தீயை வளர்த்துவிட்டாய். எங்குற்றாலும் எனது வாழ்த்துக்களையும் உனது மக்களின் சந்தோசமாய் ஏற்றுக்கொள்க. நீ வாழீ....""
""சில சந்தோசங்கள் என்னைச் சலவைசெய்தாலும் அழுக்கை மனது கழுவப்படமுடியாமல் தவிக்குது ............"'
நமது பதிவர் சந்திப்பின் ஒரு உன்னத படம்.
Friday, December 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இவை ஸ்டேடஸ் மட்டும் அல்ல. ரமேஸ் சித்தரின் அற்புதமான அருள்வாக்குகள்.
correct Jana anna.. Ramesh Sidhar weldone..
ஆஹா! பதிவர் சந்திப்பு படத்துடன் நிறைவாகக் கலக்கிவிட்டீர்கள்.
super get together!
@@Jana said...
//இவை ஸ்டேடஸ் மட்டும் அல்ல. ரமேஸ் சித்தரின் அற்புதமான அருள்வாக்குகள்.//
ஏனிந்த கொலைவெறி... நன்றி அண்ண
@@Ashwin-WIN said...
// correct Jana anna.. Ramesh Sidhar weldone..///
நீங்களுமா??
நன்றி அஷ்வின்
@@KANA VARO said...
///ஆஹா! பதிவர் சந்திப்பு படத்துடன் நிறைவாகக் கலக்கிவிட்டீர்கள்.///
ஏற்பாடுகளில் உங்கள் பங்களிப்புஇருந்ததல்லவா பாராட்டுக்கள்
நன்றி வரோ
@@vanathy said...
//super get together!//
நன்றி வானதி
Post a Comment