இன்றைய நாள்
நத்தார் தினப்பண்டிகை
நமது வாழ்க்கையில் சில நாட்கள் மறக்கமுடியாத நாட்களாக இருக்கும் நாம் சிலவேளை சில செயற்பாடுகளையும் மறக்காமல் இருக்கவேண்டும் என்று ஒரு நினைவில் நிற்கக்கூடிய நாட்களைத் தெரிவுசெய்வதும் வழமை.
அதேபோல்தான் நானும் இதேபோன்ற கிறிஸ்மஸ்தின நாளில் தான் எனது (புதிய)கணணியை வாங்கினேன் இற்றைக்கு நான்கு வருடங்கள் முன்பு. எனக்கு உதவியாக அல்லது தொல்லையாக இது இன்னும் இருந்துவருகிறது...
கவிதை கடந்தவருட நத்தார் பண்டிகைக்காக
வைக்கோலில் ஒர் ஒளிப்பிளம்பு
உலகம் மீட்க பிறந்த
உத்தமரின்
இத்தினம் முதல்
மனமெங்கணும்
மகிழ்ச்சி மலர்கள்
பூக்கட்டும்...
பதிவர் சந்திப்பு
ஒவ்வொருவர் வாழ்விலும் சந்திப்பு எப்போதும் இனிமையாகவும் நினைவில் நிற்கக்கூடியவையாகவும் இருப்பது மகிழ்ச்சியையும் சில சந்தர்ப்பங்களில் அதற்கு எதிர்மறையாகவும் இருக்கும். ஆனாலும் பதிவர் சந்திப்பு என்பது முகம் தெரியா எங்கெங்கோ ஆனவர்களையும் வலைப்பின்னலினூடாக அரட்டைகளிலும் தொலைபேசிகளினூடும் பதிவுகளினூடும் இணைந்த இதயங்கள் முகம் கொண்டு பேசும் இனிய பொழுது இப்பதிவர்சந்திப்பு.
கடந்த 19 ஆம் திகதி இலங்கை தமிழ்வலைப்பதிவர்கள் நாம் ஒன்றிணைந்தோம் சந்திப்புக்காக. மகிழ்ச்சி. இதற்கு முன்னைய நாளிலும் கிறிக்கட் விளையாட்டில் ஈடுபட்டோம். தித்திப்பு.
முதலில் இதனை ஏற்பாடு செய்த மாலவன் நிரூஜா(ஏற்பாட்டுக்குழு முதல்வர்), அனு, ,கங்கோன் கோபி , வரோ, அஸ்வின், வதீஸ் ,பவன், அனைவருக்கும் முதலில் நன்றிகள். காரணம் வேலைப்பளு உலகத்தில் சந்திப்புக்கு அனைவரையும் இணைத்து ஒருமிக்கவைப்பது இக்காலகட்டத்தில் மிகவும் கடினமாகதாகவே இருக்கிறது. ஆனபொழுதிலும் நாம் ஒன்றிணைந்தது மகிழ்ச்சி.
இச்சந்திப்புக்காக அனுவின் அம்மாசெய்துதந்த உருளைகள்(ரோல்ஸ்), நீரூஜாவின் வீட்டிலிருந்து வந்த கேசரி, பக்கோடா(எங்கிருந்து என்று சொல்லமாட்டன்), பவன் குழைத்த அன்னாசி மென்பானம் அனைத்தும் நல்லா இருந்தது.
ரோல்ஸ்க்காக அருவக்கத்திகொண்டு உருளைக்கிழங்கு தோலுரித்த கங்கோன், வதீஸ், மற்றும் அதிகாலை 6 மணிக்கு ???? எழுந்து வந்து அன்னாசித் துண்டுகளாக்கிய வதீஸ், பல்வேறு உதவிகள் புரிந்த வரோ, பக்கோடாவை அடிக்கடி மென்றுவிழுங்கி தொப்பையை வளர்த்துக்கொண்டிருந்த நிரூஜா, மென்பானத்தை குடித்து முடிக்கவேண்டுமென்று உழைத்த மருதமூரான் மற்றும் கங்கொன், நேரலைசெய்த மது...இப்படியே நல்ல இனிமையான நினைவுகளுடன் இனிதான சந்திப்பில் பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
பதிவுஎழுதுதல் பற்றி பல்வேறு வாதங்கள் எழுந்தன.
அவற்றுக்காக நான். நேரலையின் அரட்டையில் நண்பர் நிமலபிரகாஷ் சொன்ன விடயம்
முதல்ல பதிவர்கள் என்றால் பதிவு அதிகமாக எழுதுங்க பிறகு அதை மேலும் விரிவுபடுத்தலாம்.
சில படங்கள்
இனிய அந்நாள்
இப்பதிவர் சந்திப்பிலே நினைவாக எனக்கு தேவைப்பட்ட ஒரு பொருளை வாங்கமுடிவு செய்தேன் இதற்காக எனக்காக உதவிய கெளபோய்மது என்றும் நெஞ்சினில். அதைவிட ஒரு நீங்கா நினைவுகளையும் என்னுடனும் பகிரந்தது பன்மடங்கு சந்தோசமும் நினைவுளும்.
மது உங்கள் அம்மாவுக்காக
ஒரு தாய்மையின் தன்மையை உறுதியை உருவாக்குதிறனைக்கண்டு நெகிழ்ந்தேன். தாயே உனக்கு நான் யாரோ ஆகலாம் உள்ளத்தில் எனக்கு ஏதோ ஒரு தீயை வளர்த்துவிட்டாய். எங்குற்றாலும் எனது வாழ்த்துக்களையும் உனது மக்களின் சந்தோசமாய் ஏற்றுக்கொள்க. நீ வாழீ...
ஒரு ஸ்டேடஸ்
உறவுகளுக்காக ஏங்கும் உலகிலே கிடைக்கும் நல்உள்ளங்களில் மகிழ்ச்சி விதைகளையும் அன்பு வேர்களையும் பயிரிடுக. அதை கவனமாக தொடர்ந்து வளர்க்க முயல்க.
ஒவ்வொரு உணர்வுகளுக்குள்ளும் அன்புறவு கொள்க. நட்பின் நீளம் வெல்க.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
பதிவர் சந்திப்பு: :-)))
ஆனால் சின்னத் திருத்தம்,
நான் ஏற்பாட்டுக்குழுவில் இல்லை. ;-)
// பக்கோடா(எங்கிருந்து என்று சொல்லமாட்டன்) //
:-o
கிறிக்கற்றும் மகிழ்ச்சியே.
நீங்கள் வாங்கிய அந்தப் பொருள் எனக்குத் தெரியுமே. ;-)
ஹி...ஹி...பதிவர்சந்திப்பும் பகோடாவும் ரொம்ம்ப பேமஸாயிட்டுது போல...ஹி...ஹி...
நீங்க என்ன வாங்கினியள் என்று எனக்கும்தான் தெரியுமே....ஹி
//நீங்கள் வாங்கிய அந்தப் பொருள் எனக்குத் தெரியுமே. ;-)//
எனக்கும் தெரியுமே!!!
//மது உங்கள் அம்மாவுக்காக//
உங்கள் சார்பில் நானும் சொல்லி கொள்ளுகிறேன் அண்ணா!!! கொவிக்கபடாது!!!
பதிவர் சந்திப்பு கணங்கள் மறக்க முடியாதவை. அதை பதிவர்களின் டவுசர் கலட்டி அழகாக பதிவில் தந்த உங்களுக்கு நன்றிகள்!! :P
என்னத்தை சொல்ல. ஒரு மாதிரி உங்களையும் பதிவு போட வச்சாச்சு. ;)
பதிவர்சந்திப்பு அனைவருக்கும் இனிமையைத் தந்ததில் மகிழ்ச்சி
முதலில் உங்களுக்கும் நத்தார் தின நல் வாழ்த்துக்கள்.
பதிவர் சந்திப்பு, கிரிக்கட் போட்டிகள்...சுவையான நினைவுகள்..
எப்பொருள் யார் யாருடன் போய் வாங்கினும்
அப்பொருள் சிறப்பாக அமைவது பெரிது.... ஹி...ஹி...ஹி..
பதிவர் சந்திப்பு. சில மறக்க முடியாத நிகழ்வுகள். . சந்தித்துக் கொண்டது மகிழ்ச்சி...
நத்தார் தின வாழ்த்துக்கள்..:)
அன்னாசி - கிர்ர்ர்ர் நான் கரைக்கவில்லை..:-o நான் ஊத்திக் குடுத்தது மட்டும்தான்..:P
கணனி வாங்கியதுக்கு பார்ட்டி இல்லையா?..:P
மிக்க நன்றி ரமேஸ், அம்மாவிடம் சொல்லிவிடுகிறேன்.
கோபி, வதீஸ், அனு, மாலவன், வரோ,பவன், மது, ஜனா அண்ணா
அனைவருக்கும் நன்றி
நல்லா இருக்குபதிவர் சந்திப்பு பற்றிய பதிவு.
Post a Comment