வெளிநாடு போகணும்
கொத்துக் கொத்தாய் உழைக்கணும்
எண்டாலே போதுமே
பெத்தமனுசு உன் நெஞ்சம்
விடவில்லையே என்னை
வெளியூருக்கும் வேலைக்கு
அனுப்பலையே
முந்தானையில வச்சிருக்கே
முடிச்சுக்கட்டி...
பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் உன் சொத்து
இடப்பக்கம் வலப்பக்கம்
எண்டாலும் நான்
நீ வரும் பக்கமே
என் தலைப் பக்கம்
தானம்மா
வேகார வெயிலிலும்
செவரோரம் தூங்காம
உன் மடி வேண்டி
நான் தூங்க - கண்டு
என் நெனப்பில் நீயும்
சற்று கண்ணயர...
உம்மேல கால் போட்டு
ஒருக்கணிச்சு நான் படுக்க
நித்திரையிலும் நீ
காலாட்ட என்னை
தாலாட்ட
நீ அயர நான் துயில
சொர்க்கமே உன் மடியில
உன்ன தூக்கி பிடிக்கையில
"விடுடா இடுப்பெலும்பு
நோகுது" எண்டு
சத்தம் நீ போடயில
வலிச்ச நெஞ்சு
கையிறக்கி நம்ம
இருவரும் போடுற
முத்தம்
போதுமம்மா நானும்
உனக்கு தாயயம்மா..
வயசுக்கு வந்தவுடன்
தலையணையோடு
தள்ளி வச்ச
தலையில் சின்ன வலி
எண்டாலே
தவிச்ச உன் நெஞ்சு
வந்து தடவிடுமே
உன் கை ரெண்டு
தலைப்பாரம் இறங்கிடுமே
வந்த வலி போயிடுமே
என் தங்கப்பொன்னே
என் தங்க பெண்ணே
அம்மா
இந்தா இன்னுமொரு
முத்தம்..
5 comments:
நல்லா இருக்கு ,
வாழ்த்துக்கள்
நன்றி ஜெ தீபன்
உன்ன தூக்கி பிடிக்கையில
"விடுடா இடுப்பெலும்பு
நோகுது" எண்டு
சத்தம் நீ போடயில
வலிச்ச நெஞ்சு""
அசத்தல் போங்க !! உள்ள என்னமோ பண்ணுது !! அப்புறம் நன்றி" மச்சான்ஸ்" பதிவ உங்க தளத்துல சேர்த்ததுக்கு !!
http://machaanblog.blogspot.com/
நிஜமா என் அம்மா சொலுறது வரிகளில் வந்தது. என் அம்மா கூட சந்தோசப்பட்டார்
நன்றி அருண்
Post a Comment