என் உடன் பிறவா சகோதரியின் திருமணத்துக்காய் எழுதப்பட்ட வாழ்த்துக் கவிதை....
இருமனம் என் மனம்
எம் மனம் என
தடுமாறும் ஒரு தினம்
திருமணம்.
வாழ்த்துக்கள் சோதரியே
பல்லாண்டு வாழ்க
பலதும் பெற்று வாழ்க
அழகிய உள்ளம்
அறிவான நெஞ்சம்
பழகிய வார்த்தைகள் சொல்லும்
உன்
அன்பான மனசு
நீதி தெரிந்தவள்
உனக்கா கீரன்
நீதி சொல்ல வேண்டும்???
அரசியலில் முதல் தரம் பெற்றவள்
நீதானே .....
உன் தன்னடக்கம்
உன் புன் சிரிப்பு
சில சோகங்களை
மறக்கச் செய்யும்...
நீ மௌனம் காத்த போது
உனக்கு "தலைக்கனம்"
என்றனர்
உண்மைதான்
தலையில் அறிவு கனம்
என்பதை புரிந்து கொள்ளாத
உண்மையில் அவர்கள்..
எங்கிருந்து கற்றாயோ
தெரியவில்லை
ஆறுதல் மொழிகள்
அடுக்கடுக்காய்........
நன்றி
எப்போதும் அவை
துணை வரட்டும் உனக்கு
அன்பு மை கொண்டு
நட்புக் கவி வரைந்தவள்
அதைவிட
எனக்கு மூன்றாவது
சகோதரியானவள்
கற்றுத்தந்தவள்
தொழிலில் நுட்பங்கள்
பல திட்டங்கள்
அதுவே இப்போதும்
எனக்கு
துணைக்கரங்கள்
நீ ஒரு தமிழ்ப் பெண்
தலை குனிவாய் குற்றங்களுக்கு
நிமிர்வாய் நீதிகளுக்கு
வெற்றி எப்போதும்
உன் பக்கமே இருக்கும்
வாழ்த்துக்கள்
விரத காலங்களில் ஜுஸ்
ஸ்ட்ரோவுடன் நீ
சிறிய கோப்பைகளில்
உப்புமா
உன் அம்மாவின் சமையல்
கரண்டிகளோடு நீ
இப்போதும்
அழகிய ஞாபக டயரிகளில்
அவை வெல்லாவளியில்....
வாழ்த்துக்கள் சோதரியே
இனி உன்
மன நியாயங்களுக்காய்
நெற்றிக்கண் நீதி சொல்ல
கொற்ற நக்கீரன்
துணையாவான்
உன் திருமணத்துக்கு
நான் வரவில்லை என்றாலும்
என் வாழ்த்துக்கள் வரவில்லை
என்று பொருள் இல்லை
பொருள் இல்லாததால்
வருகைதர முடியவில்லை
தருவதற்கு அன்புப்பரிசு
நிறைய உண்டு....
இணைந்து கீரனோடு
எங்கு சென்றாலும்
இணையத்தளத்தோடு என்றும்
தொடர்பிலிருக்க வேண்டும்
எம்மோடு....
வாழ்த்துக்கள் சோதரியே
பல்லாண்டு வாழ்க
பலதும் பெற்று வாழ்க
வாழ்த்துக்கள்....
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
உன் தன்னடக்கம்
உன் புன் சிரிப்பு
சில சோகங்களை
மறக்கச் செய்யும்...
என்னைக் கவர்ந்த வரிகள் இவை,,,,,,
உன் தன்னடக்கம்
உன் புன் சிரிப்பு
சில சோகங்களை
மறக்கச் செய்யும்...
என்னைக் கவர்ந்த வரிகள் இவை....
நன்றி கஜன்
உங்கள் இனிய கவிதைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
நான் உங்கள் இருவரையும் சந்திக்க கிடைக்கல
Post a Comment