Pages

Monday, November 2, 2009

ஏறு கெளுத்தி ....

நம்மட ஊருல (தேற்றாத்தீவில்) இப்ப ஏறு கெளுத்தி சீசன். என்னடா இது புதுசா இருக்கு எண்டு நினைபவர்களுக்கும் அந்த அழகிய மழைக் கால நாட்களை மீட்டிப் பார்க்கும் நம்மவர்களுக்காகவும் இந்த பதிவு..
பருவ கால முதல் மழை ஆரம்பித்தாலே ஊரெல்லாம் "ஏறு கெளுத்தி" என்ற பேச்சு.
மிக ருசியானது ஏறு கெளுத்தி நம்ம அம்மாட சமையலில் வந்தா....இந்த மீன் கறியில் விசேசம் என்னண்டா அதன் சினை தான் (பாவம் அதன் இனப் பெருக்கத்தின் முட்டைகள் தான் இந்த சினைகள்). அதனை வேறாக எடுத்து குழம்பு சமைக்க (உண்மையில் ஆணம் பேச்சு வழக்கில் குழம்ப்புக் கறி) ச்சோ .... வாய் ஊறும் நாக்கில் அதாவது எச்சில் ஊறும்.....

கெளுத்தி என்பதன் ஆங்கில பெயர் Cat fish.

ஆம் நமக்கு பக்கத்தில தான் நமது மட்டக்களப்பு வாவி இதுவே மட்டக்களப்பின் பெரிய நன்னீர் ஏரி. இதுலதான் பாடுமீன்களும் (நீரர மகளீர்) கச்சேரி நடத்துவதும் நீங்கள் அறிந்ததே.

நிற்க, நம்மட மக்களுக்கு நல்ல மீன் இனங்களை வாரி வழங்கும் இங்கு தான் இந்த கெளுத்தி இனங்களின் படைஎடுப்பு.
மழைக் காலங்களில் ஊர்களில் இருந்து வாய்க்கால் வழியே பெருக்கு நீர் வாவியை சென்றடைய, அந்த ஓடும் நீரில் இந்த கெளுத்தி மீன்கள் வாவியிலிருந்து வரம்புகளுக்கு எதிர் நீச்சல் போடும் அப்போது தான் அவை ஏறும் கெளுத்தி "ஏறு கெளுத்தி" என்று பொருள்படும். அப்படி ஏறும் பொழுது அவற்றை ஒரு வலையில் பிடித்து எடுப்பர்.(அந்த வலையை "அத்தாங்கு" என்று சொல்லுவர்)

அத்தாங்கில் சிக்கும் கெளுத்திகள்












பிடித்த மீன்கள் ஒரு பார்வைக்கு






ஆனா நம்ம பிள்ளைகள் இப்போ சற்று வித்தியாசமாக அவற்றை எப்படி பிடிக்கிறாங்க எண்டு பாருங்க.







இப்படி வாவி நீரை வயல் வரம்புகளில் கட்டி வைத்து அத இரவுப் பொழுதுகளில் திறக்க விடும் போது இந்த கெளுத்தி மீன்கள் வரம்புகளுக்கு ஏறும் போது அவற்றை பிடித்துக் கொள்ளுவார்கள்.

சரி இப்ப பாப்போம், நம்ம மட்டக்களப்பு வாவி + கண்டல் தாவரங்கள் + மீன் பிடித்தல் + அழகு


















5 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த மீனை யாழ்ப்பாணத்தில் கெழுறு என்பர்.
நாக்குப் பயிற்சிக்கு "கிணறு நிறை கிணறு-கெழுறு நெளி கெழுறு " என வேகமாகக் கூறும்படி
சின்ன வயதில் கூறுவார்கள்.
மீன்பாடும் நாட்டின் அழகான படங்களுக்கும்;செய்திக்கும் நன்றி

விவிக்தா said...

சிறந்த பதிவு. மட்டக்களப்பின் இயற்கை வனப்பையும், மழைக்கால சிறப்பம்சங்களையும் அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். புகைப்படங்களும் அருமை!

Ramesh said...

நன்றி யோகன் .
///இந்த மீனை யாழ்ப்பாணத்தில் கெழுறு என்பர்.///
ஆம் நானும் இதை கேள்விப்பட்டிருக்கேன்

கெளுத்தி - http://ta.wiktionary.org/wiki/cat_fish
பாருங்க இந்த செய்தியை : http://groups.google.com/group/minTamil/msg/fdc85f94c1d80e1e?pli=1

*** மயிலை குளத்தில் செத்த மீன்கள் "கிளாரிடே" என்ற இனத்தைச் சேர்ந்தது. இந்த
மீன்கள் மற்ற மீன்களை உண்டு வாழக்கூடியது. தமிழில் "கெளுத்தி மீன்" என்றும்,
ஆங்கிலத்தில் "கேட் பிஷ்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கெளுத்தி மீன் எட்டு
மாதத்திலேயே 10 அங்குல அளவுக்கு வளர்ந்துவிடும். மக்கள் சாப்பிடக் கூடிய மீன்
வகை தான்

நன்றி முரளி அண்ணா.

சொந்த மண்ணின் வனப்புகள் இயற்கை தரும் அழகு எப்போதும் ரசிக்க கூடியவை.
உங்கள் கவிதைகளும் சிற்பங்களும் பிடிச்சிருக்கு

கிறுக்கன் said...

nice ramesh

Ramesh said...

நன்றி கிறுக்கன்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு