Pages

Thursday, January 21, 2010

"அழுவதா சொல்..." கவியரங்கில் நான் - 03

புதியவர்களுக்காக
"அழுவதா சொல்..." கவியரங்கில் நான் - 01
"அழுவதா சொல்..." கவியரங்கில் நான் - 02

அடுத்து
கிராமத்து "நீர்"

ஏறுகெழுத்தி உன் வலையில்
சிக்கவில்லையா?
ஏலோ ஏலோ
கரை வலை உன்கை
இழுக்கவில்லையா?
கடற்கரையில் நண்டு
அடிக்கவில்லையா?
தோணியில் தண்டு
வலிக்கவில்லையா?
வங்கக்கடலில் நீ
குளிக்கவில்லையா?
குளத்தில் கட்டுவலை நீ
கட்டவில்லையா?
குட்டையில் தூண்டல்
போடவில்லையா?
மட்டக்களப்பு நன்னீரில்
உன்கால் கழுவவில்லையா?
பாடுமீன் சத்தம் நீ
கேட்கவில்லையா??

நாட்டுவசந்தன் கூத்து
பார்க்கவில்லையா?
வடமோடி தென்மோடி
களரி காணவில்லையா?

மரணப்படுக்கையிலும்
மறக்காது தித்திக்கும்
மண்வாசனை நுகரவில்லையா??

இல்லையெனில்
அழுதுவிடு அழுதுவிடு
செத்துவிடு
உண்டு எனில்
நீ
அழுவதா சொல் !!!



காலம் உன்
காலில் விழும்போது
கண்ணீரில் ஏன் கரைகிறாய்???

மனவீட்டைத் தூசிதுடைத்து
அழுக்குகளை கழுவிவிடு
வெள்ளையடித்து வெள்ளையடித்து
உள் மனதை
வெளிச்சப்படுத்து
சூரியன் வந்து
உன் வீட்டு வாசலில்
பொங்கல் படைக்கும்
இதற்குப்பின்னும்
அழுவதா சொல்!

அப்பாடா ஒருமாதிரியா அழுவதா சொல் முற்றுப்பெற்றது. ம்ம்ம்... என்று யாரோ பெருமூச்சு.........
கவியரங்கில் கால்கோள் இட்டுவிட்டேன் ஆனாலும் நமக்கு இது கொஞ்சம் ஓவர்தான் இல்லையா..இதுல ஆகவும் நகைச்சுவை என்ன எண்டா கவியரங்கு அழைப்பிதழில் நம்ம பெயருக்கு முன் கவிஞர் எண்டு போட்டுவிட்டாங்க..ஹிஹிஹி..
இது எனது 99 வது பதிவு அடுத்து மற்றுமொரு வெற்றிப்பதிவு வரும்..

14 comments:

vasu balaji said...

நல்லாருக்கு கவிஞரே:)) நூறாவது இடுகைக்கு முன் வாழ்த்துகள்

Ramesh said...

வானம்பாடிகள் said...

///நல்லாருக்கு கவிஞரே:))///
அண்ணே ! நீங்களுமா
வலிக்குது..

//நூறாவது இடுகைக்கு முன் வாழ்த்துகள்///
நன்றிகள் கோடானகோடி

balavasakan said...

கவிஞ்ஞர் ன்னு உண்மையத்தானே போட்டிருக்காங்க ...
அத்தனையும் நன்றாக இருந்தது நண்பா..
100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்...

Ramesh said...

Balavasakan said...

//கவிஞர் ன்னு உண்மையத்தானே போட்டிருக்காங்க ...//

ஐயோ அதுக்கு நாம இன்னும் வளரணுமே.. இப்பதானே ஆரம்பம்

//அத்தனையும் நன்றாக இருந்தது நண்பா..100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்...//
நன்றி பாலா...

கமலேஷ் said...

ம்ம் வாழ்த்துக்கள் நண்பா...ஊரறிந்த பெரிய கவிஞர் அகிடிங்க...வாழ்த்துக்கள்...உங்களுடைய கமிங் சென்ட்சுரிக்கு வாழ்த்துக்கள்...நடத்துங்க...

Ramesh said...

கமலேஷ் said...

//ம்ம் வாழ்த்துக்கள் நண்பா...ஊரறிந்த பெரிய கவிஞர்

ஐய
நீங்களுமா??

//அகிடிங்க...வாழ்த்துக்கள்...உங்களுடைய கமிங் சென்ட்சுரிக்கு வாழ்த்துக்கள்...நடத்துங்க...//

நன்றி நன்றி

அண்ணாமலையான் said...

வணக்கம் கவிஞரே, (எல்லா பெரியவங்களூம் சொல்லிட்டதால நானும் ஃபாலோ பன்றேன்) வாழ்த்துக்கள்...

Ramesh said...

அண்ணாமலையான் said...

///வணக்கம் கவிஞரே, (எல்லா பெரியவங்களூம் சொல்லிட்டதால நானும் ஃபாலோ பன்றேன்) வாழ்த்துக்கள்...//
ஓகே..
ஒண்ணும் பண்ணேலாது...
கவிஞன் என்பதில் தன்னடக்கமாய் தவிர்க்கல தகுதி வரல அதுக்காகத்தான் யாராவது கவிஞர்கள் கண்டார்கள் என்றால் எட்டி அடித்துவிடுவார்கள் அதான்

நன்றி வருகை வாழ்த்துக்களுக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

றமேஷ் பிறவிக்கவிஞரா நீங்க?

கவிதைவரிகள் ஒவ்வொன்றும் பேசுது ராஸா...

Ramesh said...

பிரியமுடன்...வசந்த் said...

//றமேஷ் பிறவிக்கவிஞரா நீங்க?
கவிதைவரிகள் ஒவ்வொன்றும் பேசுது ராஸா...///

உங்களை விடவா கத்துது இது உளறல் மட்டுமே..
நன்றிப்பா

ஹேமா said...

மட்டக்களப்பு - மண்வாசனை றமேஸ்.ஒரு கிராமத்தயே எங்கள் ஊர்க்காற்றையே சேமித்து அனுப்பிய பிரமை கவிதையில்.வாழ்த்துக்கள் நூறுக்கும் சேர்த்து.

Ramesh said...

ஹேமா said...

///மட்டக்களப்பு - மண்வாசனை றமேஸ்.ஒரு கிராமத்தயே எங்கள் ஊர்க்காற்றையே சேமித்து அனுப்பிய பிரமை கவிதையில்.வாழ்த்துக்கள் நூறுக்கும் சேர்த்து.///

வாங்க ஹேமா...
முதல் வருகை வாழ்த்துக்களுக்கும் நன்றி

ம்ம்
மரணப்படுக்கையிலும் மறகாத மண்வாசனை அல்லவா...
தொடர்ந்திருங்கள்

Kala said...

பல வருடங்களாக....{நான்}.மறந்து போகின்ற
சொற்களையும்,,இடங்களையும் நினைத்துப்
பார்க்க வைத்தன உங்கள் கவிவரிகள்
நன்றி.

Ramesh said...

Kala said...

////
பல வருடங்களாக....{நான்}.மறந்து போகின்ற சொற்களையும்,,இடங்களையும் நினைத்துப்பார்க்க வைத்தன உங்கள் கவிவரிகள்
நன்றி.
////

நன்றி கலா முதல்வருகை மற்றும் பின்னூட்டலுக்கும் சேர்த்து.
மண்மணம் என்றும் தித்திக்கவேண்டும் அல்லவா...
தொடர்ந்திருங்கள்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு