Pages

Sunday, December 26, 2010

கல்லறைகளில் கண்ணீர்ப்பூக்கள்

ஆண்டுகள் ஆறு
ஆனாலும்
நினைவுகளில் வழியுது
அந்த கோர முகம்.
நிகழ்வும் சேர்ந்து
வதைத்துக்கொண்டுதான்
இருக்கிறது

"அம்மா
அப்பா
அண்ணா
அக்கா
மகள்
மகன்
பிள்ள
மாமா
மாமி
தம்பி
தங்கச்சி
பாட்டி
தாத்தா"
உயிர் பின்னிய
உறவுகள்
"அது
உடல்"
என்று
கடைசியில்
எதுவுமில்லா...

'கண்டுபிடிச்சாச்சா'
'இன்னுமில்லையா'
'ஒரு கை இல்லை'
'முகம் இல்லை'
'ஏதாவது ஒரு துண்டு'

விசிறி அடிச்சு
விழுத்திவிட்டுப்போன
வார்த்தைகளும்

உங்களோடு
நாம்
இருக்கிறோம்
கண்ணீரையும் சேர்த்துக்கொண்டு
துடைக்கும் விரல்களாய்
உணர்வுகளாய்...
சாந்தப்படுத்திக்கொண்ட
உள்ளங்களும்....

இன்றும்
மனக்கல்லறைகளில்
பூக்கள் தூவிக்கொண்டு
இதயத்தை துவட்டிக்கொண்டு
கண்களை ஈரப்படுத்திக்கொண்டு
அஞ்சலிக்கிறோம்....




எங்கெல்லாம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோ அவர்களுக்காக அஞ்சலிக்கிறோம்.. உங்கள் உயிர் அவதியாய் பிரிந்தாலும் ஆத்மா சாந்திஅடையட்டும். சுனாமியின் சுவடுகளாய் மனதில், கல்லறைகளில் பூக்கள் சொரிகிறோம்

7 comments:

sinmajan said...

இன்று சுனாமி பாதித்த மணற்காடு பகுதிக்கு சென்றுவந்தேன்..சில குடும்பங்களையே கல்லறைகளாய்க் கண்டு மனது கனத்து வந்திருந்தேன்..எனது கண்ணீர்ப்பூக்களையும் காணிக்கையாக்குகின்றேன்..

Kiruthigan said...

நல்லாருக்கு...

Jana said...

மனம் அன்றுபோல் இன்றும் கனக்கின்றது.

ஹேமா said...

மனம் வலிக்கும் பதிவு றமேஸ்.இயற்கைகூட எங்களோடுதானே கோபம்கொள்கிறது !

vanathy said...

very sad to read.

Unknown said...

மறக்கமுடியா வடுக்கள்..மனங்களிலே!!

Ramesh said...

@@sinmajan said...
நன்றி சின்மயன்

@@நிரூஜா said...
நன்றி மாலவன்

@@Cool Boy கிருத்திகன். said.
நன்றி கூல்

@@Jana said...
நன்றி அண்ண

@@ஹேமா said...
நன்றி ஹேமா
வலிகள் ஆழம்

@@vanathy said...
நன்றி வானதி

@@மைந்தன் சிவா said...
நன்றி சிவா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு