Pages

Wednesday, April 13, 2011

சிதறும் சில்லறைகள் - 14

இன்றைய நாள்:
இந்தியத் தமிழக சட்ட சபைத் தேர்தல் இன்று. இதற்காக நண்பரொருவர் முகப்புத்தகத்தில் எழுதிய குறிப்பு எனது எண்ணத்தையும் ஏற்றுள்ளதால் இங்கு பகிர்கிறேன்.(நன்றி மரூ)

"அடுத்த ஐந்தாண்டுக்கான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் தமிழக வாக்காளர்களுக்கு மனவருத்தத்துடனான வாழ்த்துக்கள். பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில் கோடிகளில் ஊழல் செய்தால் யார் மதிப்பது, பில்லியன்களிலேயே ஊழல் செய்வார்கள் வருகிற ஆட்சியாளர்களும்."

இன்றைய குறும்படம்:
தற்போது வேலையில்லாப் பிரச்சனை அதிகரித்துச்செல்கிறது. இந்தக் குறும்படம் எதை எதையே ஏதோ பல விடயங்களை கூறிச்செல்கிறது.
பாருங்கள்.


மாற்றம் ஒன்றே மாறாதது
நாம் பேசும் பேச்சிலும் நடையிலும் மாற்றம் வேண்டும். இல்லையேல் வாழ்க்கையின் பல பகுதிகளை வாழாமல் போகும் வெறும்பக்கங்கள் அதிகரித்துவிடும்.

நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு உண்மையில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பது நமக்கு தெரிவதில்லை. அதேபோல் அதுவே நமக்கு எவ்வளவு விபரீதமான தன்மையை ஏற்படுத்தும் என்பதும் தெரியமறுப்பது இயல்பு. நமக்கு தெரிந்த எத்தனையோ சொற்களை பேசாமல் விடுவதும் பேச வேண்டிய விடயங்களை தவிர்த்து வேண்டாத விடயங்களை அலசுவதும் நமது வழக்கமாகியிருக்கிறது. ஆயினும் ஒவ்வொரு படியிலும் எம்மால் மாற்றம் கொண்டுவரமுடியும் அதுவே நமது முன்னேற்றத்திலும் வெற்றியிலும் வாழ்க்கையில் கொண்டுவரும். இதுவும் நமது நண்பரொருவர் பகிர்ந்த குறும்படம் ஹாய் அரும்பாவூர் நன்றிங்க.



கவிதை:


நான் இருட்டில்
வாழ்கின்ற போதும்
பகல்களாய் இருக்கும்
உன்
கடைசி சிரிப்பு

நன்றி
அண்மையில் நமது சகோதரம் புலம்பெயர் உறவு நமக்கு ஒரு புகைப்படக்கருவியை(Camera)அனுப்பிருந்தார். மிகவும் மகிழ்ச்சி. நன்றி அண்ணா. இயற்கையை ரசித்து புகைப்படம் பிடிப்பதில் ஒரு ஆர்வம். இததை எப்போதும் என்மனம் விரும்பும். இதற்கு துணைநிற்கும் இக்கமெரா.


சித்திரைப் புத்தாண்டு
உண்மையில் எனக்கு இருக்கும் நீண்டகால சந்தேகம் இந்த சித்திரைப் புத்தாண்டு "தமிழ் சித்திரைப் புத்தாண்டு" என்று சொல்லுவர். உண்மையில் இது சமய சம்பந்தமான பண்டிகையா இல்லை இனம் அல்லது மொழி சார்ந்ததா? ஏனெனில் சமய சம்பந்தமானதென்றால் இது " இந்து அல்லது சைவ சித்திரைப் புத்தாண்டு" என்று வரவேண்டுமே. தமிழ் என்று வருவதனால் யார் யாரால் கொண்டாடப்படவேண்டும்.?? விவாதிக்கும் நோக்கில் அல்ல. இதையும் சேர்த்து அரசியல் லாபம் கொள்வோருக்காக கேட்டுக்கொள்வது.
என்னைப்பொறுத்தவரையில் இதை சித்திரைப் புத்தாண்டு என்று ஏற்று ஒரு இன்பநிறைப் பண்டிகையாக கொண்டாடவேண்டியதே. இதற்காக புது ஆடை புது பானை பொங்கல் என்று ஏராளமான ஏற்பாடுகள் இருந்தாலும், கொண்டாடும் போது பக்கத்து வீட்டிலும் அடுப்பெரிகிறதா என்று சற்று பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மகிழ்ச்சியில் மற்றவர்களையும் மகிழ்வுற செய்வதில் பன்மடங்கு சந்தோசம் வரும் என்பது உண்மை.

"அனைவருக்கும் இனிய சித்திரைப் புதுவருட நல்வாழ்த்துக்கள்"
இந்நாளையும் இனிய நாளாக்குக.

மற்றொரு ஆரம்பம்
எனது நண்பனொருவன் சிங்கப்பூரில் வசித்துவரும் இந்திய நண்பன். வெறும் வலைப்பதிவில் இதயம் இணைந்தவன். நல்லவன். வல்லவன். கிராமத்துக்காரன். இதுபோதும் இவனுக்கு.
கருப்புசாமி என்னும் கருப்பு, நமது கிராமத்து மாணவனொருவனுக்கு பணஉதவிமூலம் அவரது கல்விக்கு ஒரு உந்துசக்தியாக இருப்பதாக உதவுவதற்கு முன்வந்துள்ளான். இம்மாதம் முதல் இதை ஆரம்பிக்கவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறோம். நன்றி நண்பனே.
"நீ யாருக்கோ செய்யும் உதவி உனக்கு யாராலோ வந்து சேரும்"

8 comments:

Mohamed Faaique said...

//நீ யாருக்கோ செய்யும் உதவி உனக்கு யாராலோ வந்து சேரும்" //
நிச்சயமாக...

Chitra said...

Power of Words and Job - Both Videos are very good. :-)

நிரூபன் said...

அடுத்த ஐந்தாண்டுக்கான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் தமிழக வாக்காளர்களுக்கு மனவருத்தத்துடனான வாழ்த்துக்கள். பில்லியன் சனத்தொகை கொண்ட நாட்டில் கோடிகளில் ஊழல் செய்தால் யார் மதிப்பது, பில்லியன்களிலேயே ஊழல் செய்வார்கள் வருகிற ஆட்சியாளர்களும்."//

இது இனி வரும் காலங்களுக்கான எதிர்வு கூறலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நிரூபன் said...

நான் இருட்டில்
வாழ்கின்ற போதும்
பகல்களாய் இருக்கும்
உன்
கடைசி சிரிப்பு//

கவிதையில் சிரிப்பின் பிரகாசத்தில் வாழும் ஜீவனின் உணர்வுகள் தெரிகின்றது..

நிரூபன் said...

"அனைவருக்கும் இனிய சித்திரைப் புதுவருட நல்வாழ்த்துக்கள்"
இந்நாளையும் இனிய நாளாக்குக.//

உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் சகோ.

நிரூபன் said...

"நீ யாருக்கோ செய்யும் உதவி உனக்கு யாராலோ வந்து சேரும்" //

வாழ்த்துக்கள் அந்த நண்பனிற்கு.

நிரூபன் said...

வேலையில்லாத கஸ்டத்தில் என்ன வேலையாவது செய்து வயிற்றுப் பிழைப்பினைப் போக்கி விடலாம் எனும் நோக்கத்தில் கிடைத்த வேலையினைத் தவற விடாது பாய்ந்தடித்து ஓடும் நண்பர்களைக் காட்டியுள்ளார்கள்.. காலத்திற்கேற்றாற் போல மாறு எனும் வகையில் குறும்படம் அமைந்துள்ளது.

Ramesh said...

@@Mohamed Faaique
நன்றி
@@ நன்றி சித்ரா
@@ நன்றி நிரூபன்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு