இன்றைய நாள்
பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள் - 21-04-2011
இதை எனக்கு ஞாபகப்படுத்தியது முனைவர் மு. இளங்கோவன். நன்றி அவருக்கு. அவர் வலைத்தளத்தில் எழுதியதை இங்குபோய்க் காண்க முனைவர் மு. இளங்கோவன்
இதுகூட இப்பொழுதுகளில் ஞாபகத்துக்கு வருவதில்லை. அவ்வளவு தமிழ்ப்பற்றாளர்கள் நாம்.
அவர்கவிதையில் யாவரும் அறிந்த அந்த தமிழுக்கு என்ன பெயர்?
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணம் என்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
------பாரதிதாசன் கவிதைகள்
பிடித்த பாடல்
அண்மையில் ஒரு நண்பர் அண்மைய புதுப்பாடல்களில் நல்லபாட்டு எது என்று கேட்க வேறொரு நண்பர் பகிர்ந்தார் குள்ளநரிக்கூட்டம் திரைப்படத்தில் கார்த்திக் சின்மயி பாடிய பாடலை. கேட்டேன் பிடிக்குது அந்த மெல்லிசை. புதியதொரு இசையமைப்பாளர் செல்வகணேஸ் (எனக்கு புதுசு) இவரது இந்த விழிகளிலே என ஆரம்பிக்கும் இந்த பாடலின் வரிகளுக்கு அற்புதமான குரலால் வசியப்படுத்தியிருக்கிறார்கள் பாடகர்கள். இசை இனிமை.
விழிகளிலே
ஒரு ஸ்டேடஸ்
"எனக்குதவணும் என்று யாருக்கோவுக்காக கஸ்டப்படாதே.
யாருக்கோவாக உன்னை இழக்க நான் தயாரில்லை.
எனக்கான அன்பை நான் தவறிவிடுவேன்.
அன்பு நிரந்தரம்"
நாம் யாரோ ஒருவருடன் நட்பு வைத்திருப்போம். ஆயினும் சில நேரங்களில் குறித்த நண்பரிடம் யாரோ ஒருவருக்காக நாம் ஒரு உதவி கேட்போம். அவ்வுதவியை செய்ய ஒப்புக்கொள்வதா இல்லையா? ஒப்புக்கொள்ளாவிட்டால் நம்ம நண்பர் நம்மளை வெறுத்துவிடுவாரே அல்லது நட்பின் இடைவெளி கூடிவிடுமே என்றெல்லாம் யோசிக்கத்தோன்றும். சிலவேளை அதுவே நட்பின் முறிவுக்கு காரணம் கூட ஆகலாம். ஆனால் இடையில் வந்த யாரோ ஒருவருக்காக நாம் ஏன் நமது நண்பரின் நட்பை இழக்கவேண்டும். ஆதலால் நண்பர்களிடம் உதவிகேட்கும் போது கவனமாகவும் அவதானமாகவும் வெளிப்படையாகவும் இருத்தல் வேண்டும்.
தெளிவான மனதுடனும் சிந்தனையுடனும் நட்பின் முகவரிகளை அடயாளம் கண்டுகொள்ளவேண்டும். ஒரு முறை உதவிசெய்யாவிட்டால் ஒருமுறையேனும் உதவிசெய்யாமல் போய்விடுமா என்ன. பின்னர் நாம் கேட்ட உதவியைவிட பன்மடங்கு உதவி பரிமாறிக்கொள்ளலாம் இல்லையா.
அன்பு நிரந்தரம்.
புத்தகம்
இந்திரா பிரியதஷ்சினியின் இரண்டாவது நிழல் புத்தகம் வாசித்தேன்.ஒரு குடும்ப நாவல். நல்லதொரு எழுத்தாடல். வித்தியாசமாக இயல்பான விடயங்களை இலகுவாக சொல்லியிருக்கிறார். அங்கங்கே கொஞ்சம் அலசல். இன்னும் அழகாக நகர்த்தியிருக்கலாம் முடிவை. காரணம் முடிவில் அவசரமாக்கப்பட்ட உணர்வு. ஆனாலும் நெஞ்சில் நிற்கும் ஒரு கதைவடிவம். அன்பும் அரவணைப்பும் இல்லாதபொழுதுகளில் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி சொல்லும் நாவல். குற்றங்களில் கூடியது அடுத்தவரை துன்புறுத்தி இன்பம் காணுதல் என்பதையும் அன்பின் தேவையையும் சொல்லியிருக்கும் விதம் அழகு.
ஒரு குறும்படம்
நண்பேன்டா....
4 comments:
தமிழும், தமிழர்களும் சிறப்பாய் வாழ அரும்பாடுபட்ட பாவேந்தரை நினைவு கூறியமைக்கு நன்றி.
நல்லதொரு அலசல்...
நல்ல பகிர்வு. நன்றாக தொகுத்து தந்து இருக்கீங்க.
நன்றி தமிழுதயம்
நன்றி மொகமெட்
நன்றி சித்ரா
Post a Comment