Pages

Saturday, April 23, 2011

அபியும் அஷ்வினும் -01

அத்தனை வெப்பத்தையும் உள்வாங்கிக்கொண்டு எதை எதையோ யோசிச்சுக்கொண்டிருந்தான் அஷ்வின்.
அப்பொழுதுதான் புறஊதாக்கதிர்களைத் தடுக்கும் கண்ணாடியாய் அவள் அங்கு நடந்துகொண்டிருந்ததை அவனும் அவன் கண்களையும் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை என எண்ணி பெருமூச்செறிந்து ஏதோ உற்றவனாய் மரத்தடியில் சாத்தி வைக்கப்பட்டிருந்த தனது நீலச் சைக்கிளையும் கவனிக்காமல் எழுந்து நடக்க எத்தனித்துக்கொண்டிருந்தான்.

சட்டென்று அவள் உசுப்பிய பார்வையில் பக்கென்று சிக்கி அஷ்வின் சுருண்டுபோனான். "அவள் அழகி.
அவள் வேண்டும்.
அவள் எனக்காக வேண்டும்.
என்னைக்கொல்லும் சிறுக்கி.
எனக்கான காதல் கிறுக்கி..." என்றெல்லாம் சொல்லியவனாய் தனது நண்பனைத் தேடி ஹொஸ்டலுக்கு போனான்

"டேய் கதவைத்திறடா அரவிந்" என்ற ஆவலான தேவையை அவசரப்படுத்திய அஷ்வினின் குரல் தடுமாறாமால் வந்ததைக் கண்டு அரவிந் கதவைத்திறந்து " என்ன தொர ஓடி வாற"
"டேய் நான் இனி.... நேற்று நீ வாங்கிய அந்த ரீசேட் எங்கடா.. ஆ... அந்தா இருக்கு.. வெயிட் " என்று சட்டென அரவிந்தின் ரீசேட்டை போட்டுட்டு அந்த கறுப்பு கூலிங்கிளாசையும் போட்டுக்கிட்டு "ஹேய், டேய் ஷாருக்கான் எப்படி இருக்காரு. மன்மதன் அன்புக் கமல், ம்ம்ம்.... விக்ரம்.. எப்படிடா இருக்கன் சொல்லு. வடிவா இருக்கேனா இல்லை இன்னும் அழகாக..." என இழுத்துக்கொண்டிருக்க.
இதெல்லாம் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருந்த அரவிந் இவன் யாரோ ஒரு பொண்ண பாத்திட்டான். ம்ம்ம்.. இதுக்கு இன்னும் இவன் மொடலாகணுமே... சீ சீ இவனுக்கு இது தான் சான்ஸ். காதல்களையில் காளையிவன்.
" என்னடா மைண்ட் வொயிஸ் பலமா இருக்கு"

"மூஞ்சப்பாரு முதல்ல தலைமுடிய வெட்டு சேவ் பண்ணக்க பிறகு சாருக்கானா சகீர்கானா எண்டு யோசி, சிக்கிரட் பத்திறத கொறச்சிட்டு குடிக்கிறதையும் நிப்பாட்டு."
"அட்வைஸ்.. ம்ம்ம் நாளைக்கு அவள் பக்கதில போவாள், நீ பார்க்காம போவ...
பாரு கூல்பார்..
ஒற்றை ஐஸ்கிறீம்...
சுவைக்கும் இரண்டு உள்ளங்கள்
உருகும் காதல்" என்று சொல்லி காதல் எண்ணக்களை விளக்கிக்கொண்டிருந்தான் அஷ்வின்.
சொல்லிக்கொண்டிருக்கும் போதே அரவிந் "சரி முதல்ல அவள் பேரு என்ன? ஒன்றும் சொல்லாம மொட்டையா நீ மட்டும் லவ் பீலிங்ல இறங்கினா"
" பொறு பொறு நாளைக்கு காட்டுறன் இப்ப சலூனுக்கு(தலைமுடிவெட்டுமிடம்) போயிட்டு வாறன். இண்டைக்கு பார்ட்டிக்கு நான் வரல்ல" என்று அஷ்வின அவசர அவசரமாக ஓடினான்..
சைக்கிள் வேகமாக மிதித்தானோ என்னவோ அவன் மனம் மட்டும் சில்லுகளாய் சுழன்றுகொண்டிருந்தது. காதல் சாவாரி போவதாய் உணர்ந்தான். அங்கே அவனை என்னமோ ஏதோ செய்துகொண்டிருந்தது. இவனும் போக அவளும் அங்கே எங்கோ போவதற்காக வந்துகொண்டிருந்தாள்..இது குவியமில்லாத காட்சிப்பிழையா. இல்ல உருவமில்லாத உருவமா அவள் ஏனோ இங்கே. இந்தப்பாட்டு அந்த கூல்பாரில் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்ததை அவன் காதுகளை ஏனோ இன்னும் ஒரு இன்பநிலைக்கு கொண்டுபோனதை எண்ணி புன்சிரிப்பு அவனுக்குள்

5 comments:

ஹேமா said...

அருமையான பாட்டோட கதை தொடங்கியிருக்கு.அடுத்த பதிவு கெதியா போடுங்கோ றமேஸ் !

சென்னை பித்தன் said...

அந்தக் காலத்தில் ரேடியோ சிலோனில்”இசையும்,கதையும் “ என்று ஒரு நிகழ்ச்சி உண்டு.அது மாதிரி சுவையா இருக்கு!

david santos said...

Happy Easter!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

கதைக்கு பாட்டு தேடி எடுத்ததா
பாட்டுக்கு கதை எழுதினதா?

கதையும் நல்லா போகுது பாட்டைப் போலவே

Ramesh said...

@@நன்றி ஹேமா. - காத்திருங்கள்
@@நன்றி சென்னை பித்தன் - ம்ம்
@@நன்றி மது - கதைக்கு பாட்டு.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு