Pages

Monday, June 13, 2011

சடங்கும் வழக்குரையும் 01

கண்ணகை அம்மன் என்றாலே மட்டக்களப்புக்கு மிகவும் சிறப்பும் பெருமையும் அமைவது மகிழ்ச்சி.
கண்ணகி என்று சிலம்பினுள் வரும் இங்கே கண்ணகை என்ற சிறந்த பொருளாக திரிபுற்றது காண். கண்- நகை என்ற இரு சொற்களின் சேர்க்கையான கண்ணின் ஒளி கண்ணுக்கு அணிகலன் ஆக பொருள்பொதிந்து வழிபாட்டுக்கும் சடங்கு என்ற பதங்களால் ஆன கிராமத்து மண்ணின் பெருமையும் சிறப்புமாய் அமைகின்றது. "சடங்கு" என்றுரைத்தல் அம்மன் கோயில்களில் நடக்கும் பூசையினைக் குறிக்கும் இதனால் கண்ணகையம்மன் சடங்கு என்று அழைக்கப்படும் இவ்விழா வருடந்தோறும் வைகாசி வளர்மதி நாட்களில் இடம்பெறும்.
கதவு திறத்தல், என்ற சொற்பதத்தால் ஆரம்ப விழா முதல்நாள் சடங்காக அமையும். நாள்தோறும் மதியம்(பகல்), இரவு பூசைகள் சடங்குப்பூசையாக கொள்ளப்படும். உடுக்கு வாத்தியங்கும் சிலம்பு ஓசையும் சேர்ந்து அம்மன் காவியம் உடுக்குச் சிந்து பாடுதல், கல்யாணக் கால் சடங்கு, என்பனவும் இங்கு சிறப்பானவை. சடங்கு நாட்களில் நேர்த்திக்கடனாக பல சிறப்பான பக்திபூராக அடியார்கள் வழிபடுவர் அம்மனை.
செட்டிபாளையம் அம்மன் கோயில் என்றாலே எங்கள் பிரதேசத்தில் ஊரில் வெகு சிறப்பாக ஒரு கொண்டாட்டம். இங்கு கண்ணகை அம்மன் காவியம் சிறப்பு இங்கு போய் காண்க இந்த பாடல்
இப்பாடல் எமது மண்ணின் சிறப்புப் பொருந்திய ச.இன்பராஜன் அவர்கள் பாட இசைச்சேர்க்கை ஒலிப்பதிவை தணிக சீலன் அவர்கள் உருவாக்கத்தில் அமைந்தது சிறப்பே..
















3 comments:

ஹேமா said...

படங்களைப் பார்க்க ஊர் ஞாபகம் வந்து கண்கலங்கிவிட்டேன் றமேஸ் !

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாடல் தொகுப்புக் கேட்டேன்.மிகத் துல்லியமான ஒலிப்பதிவு இனிய குரல், நறுக்கென்ற உச்சரிப்பு
அருமை.
இப்பாடல் இசை கேரளாவின் புகழ் பூத்த சோபன சங்கீத மெட்டில் உள்ளது.
நிச்சயம் தொடர்பு இருக்கும், யுருயூப்பில் HARIGOVINDAN,SOPANASANGEETHAM,ASHTAPADI -http://www.youtube.com/watch?v=9Glqf9zouPA&playnext=1&list=PL0F0E9325E484CE33 இத் தொடர்பில் கேட்டுப்பாருங்கள், ஒற்றுமையை உணர்வீர்.
அரிய கலாச்சாரப் பகிர்வு.

Ramesh said...

@@ நன்றி ஹேமா..: ம்ம் எங்களால் முடிஞ்சளவு
@@ நன்றி யோகன் பாரிஸ் : ஆரிய கலாச்சாரம் உண்மை.
நன்றி தகவலுக்கும்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு