பூமி
புரட்டிப் புரட்டி மனம்
உழுதுவிடு
'நல்' விதைத்து விதைத்து
விளைந்து விடு
மகிழ்ச்சிப் பொங்கல்
இது தான்
கண்டுகொள் நீ
உழுதால் தான்
பூமிப்பெண்
தாயாகிறாள்
இல்லையேல்
தரிசு ஆகிறாள்
போர் முடிந்த பூமி - அங்கு
புதைந்தது மனிதங்கள்
புதையல் தேடு இனி
விதைத்து விடு
வியர்வை விதைகள்
உழைப்பு பயிர்கள்
பூத்துக் குலுங்கி
மனித எச்சங்களை
வாழவைக்கட்டும்
உன்னைப் பெற்றுத்தந்தது
தாய்ப்பூமி
நீ பெற்றெடுக்க வேண்டியது
தமிழ்ப்பூமி
அழுது அழுது காலம் கரைத்து
வாழ்க்கை நரைத்துவிடும்
வெறுமையாய்
நரை
வலிந்த வாழ்க்கையின்
முதிர்ந்த திவலை
ஞாலம் நீயாக
வாழ்க்கை வாழ்ந்துவிடு
கண்ணீர் விட்டுவிலகு
ஆக
மண்ணில் உன்
பிறப்பு
வளர்ப்பு
இருப்பு
இறப்பு
கண்ணீர்ப்பூ
எதற்கு???
நீ
கற்றாய்ந் தொழுகி
புத்தி பெற்று வாழ
அழுவதா சொல்!
காற்று
காற்றை நேசி
கவிதை கொண்டு வரும்
காற்று உன்
கவிதை மூச்சு
தென்றல் காதல் தூண்டல்
கொண்டல் பொங்கல்
மழைக்காற்று
விடியல் பொழுதுகளில்
குயிலோசை
குழலோசை அல்லவா
முட்டி முட்டி மண்ணைத்
தீண்டப்பார்க்கும் கடலோசை
கவியோசை அல்லவா
காற்றுப் பெருவழியில்
'அம்மா' என்று அந்தப்பசு
தட்டி உன்னை எழுப்பும்
தமிழோசை அல்லவா
காதுகொடு காற்றுப்
பொங்கல் வரும்
காதுகொடுங்கள் இங்கு
தமிழ்ப்பொங்கல்
அலைவரிசை கேட்கிறது
இன்னும் நீ
அழுவதா சொல்!
உன் கண்
விழிக்கவேண்டும்
கண்ணீர் விரிக்கவேண்டாம்!!!
Wednesday, January 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//உன்னைப் பெற்றுத்தந்தது
தாய்ப்பூமி
நீ பெற்றெடுக்க வேண்டியது
தமிழ்ப்பூமி//
படமும், கவிதையும் கொள்ளை அழகு...
Sangkavi said...
//படமும், கவிதையும் கொள்ளை அழகு...//
படமெல்லாம் நம்ம ஊருல பிடிச்சதுங்கோ..
கவிதை மனசுல வந்ததுங்கோ
நன்றி
கிராமத்துக்காரன்
/'நல்' விதைத்து விதைத்து
விளைந்து விடு /
/நீ
உழுதால் தான்
பூமிப்பெண்
தாயாகிறாள்
இல்லையேல்
தரிசு ஆகிறாள்/
/தமிழோசை அல்லவா
காதுகொடு காற்றுப்
பொங்கல் வரும்/
பிடித்த வரிகள்.
நல்லாயிருக்கு றமேஸ்:)
நல்லாயிருக்கு றமேஸ். வாழ்த்துகள்.
கலக்கி இருக்கீங்க தோழா...வாழ்த்துக்கள்..
வானம்பாடிகள் said...
//பிடித்த வரிகள்.//
எனக்கும் தான அண்ணே...
//நல்லாயிருக்கு றமேஸ்:)///
நன்றி :))))
ரோஸ்விக் said...
//நல்லாயிருக்கு றமேஸ். வாழ்த்துகள்.//
முதல் வருகை என்று நினைக்கிறேன்
நன்றி வருகை வாழ்த்துக்களுக்கு
தொடர்ந்திருங்கள்
கமலேஷ் said...
///கலக்கி இருக்கீங்க தோழா...வாழ்த்துக்கள்..///
நன்றி நண்பா
அடுத்து 99 வது ஹிஹிஹி
நல்லா எழுதுறீங்க றமேஷ்...!
புரட்டிப் புரட்டி மனம்
உழுதுவிடு
'நல்' விதைத்து விதைத்து
விளைந்து விடு
##சூப்பர் றமேஸ்... கலக்கீட்டீங்க
பிரியமுடன்...வசந்த் said...
நன்றி வசந்த்
Balavasakan said...
நன்றி பாலா
Post a Comment