கடந்த ஆண்டு எனக்கு பல விடயங்களை கற்றுத்தந்தது. சந்தோசச் சாரல்களும் சில வேதனைச் சுவடுகளும் என் மனதில்.. நன்றி சொல்வோம்.
நான் கடந்த வருடத்துக்கு முந்தைய வருட இறுதிப்பகுதியில் ஒரு நண்பனொருவனைச் சந்திக்க நேர்ந்தது. அவன் இப்ப நம்ம தம்பியாய் நமக்கு இருக்கான். கஸ்டம், உறுதி, உழைப்பு என்பவற்றை அறியலாம் பாருங்க...
ஒருமாதிரிக் கஸ்டப்பட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கிட்டன் இதை ஒழுங்காக சேர்விஸ் பண்ணணும் இல்லாவிட்டால் பெருஞ்செலவு வரும் என்று என் அண்ணன் ஒருவன் சொன்னான். எனக்கு சேர்விஸ எங்க பண்ணுறது என்று தெரியாமல் பயந்து கொண்டிருந்தேன். மட்டக்களப்பு கல்லடியில் ஒரு நல்ல கறாஜ் இருக்குன்னு சொல்ல அங்க என்ட மோட்டார் சைக்கிளைக் கொண்டுபோனன். எனக்கு அந்த சேர்விஸ் அப்போ பிடிக்கல்ல. கடந்த வருடம் தை மாதம் என நினைக்கிறேன் அடுத்த முறையும் அதே கராஜ்சுக்கே போனேன். அப்போது கறுத்த மெல்லிய ஒழுங்காக தலை சீவிய (அவனும் இன்னொருவனும்தான் அங்கு ஒழுங்கா தலைமுடியை ஒட்டவெடடியிருந்தார்கள்) ஒரு மோகனமான பொடியன் மிகவும் சுறுசுறுப்பாக வேலைசெய்து கொண்டிருந்தான். ஆனால் எனது சைக்கிளை வேறொருவன் தான் சேவிஸ் பண்ணினான். இந்த சுறுப்பான பொடியன் தனது வேலையை முடித்துவிட்டு அடுத்த சைக்கிளுக்காக காத்திருந்தபோது வழக்கம் போல (ஹிஹி...) நம்ம அரட்டையை ஆரம்பித்தேன். அப்போதுதான் எனக்கு அந்த ஆச்சரியம் அமானுசமான (வெற்றி எப் எம்மின் வெள்ளிஇரவு நிகழ்ச்சி) தகவல்கள் கிடைத்தது.
இவன் தனது 14 வயதில் இவ்வேலைக்கு தனது குடும்ப நிலைமை காரணமாக தந்தையின் உதவியால் வந்து சேர்ந்தான். அப்போது கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது பிரதான வேலையாட்கள் (வாஸ் என்று சொல்லுவர்) இருந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் உதவி வேலையாளாய் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பின்னர் இதில் மாற்றம். ஒரு பிரதான வேலையாளுக்கு ஒரு நிரந்தர உதவியாளர் என மாற்றம் கொண்டுவரப்பட்டது. என்று தனது வேலை வாழ்க்கையை சொல்ல ஆரம்பித்தான். நான் குறுக்கிட்டு ஏன் நீ இவ்வேலைக்கு வந்தாய் என்று கேட்டன். தனது சகோதர சகோதரிகளையும் படிக்க வைக்க வேண்டும் அதற்கு தனது தந்தையின் வருமானம் போதாமையினாலும் தனக்கு படிப்பு ஓடவில்லை இதன் காரணமாகவே வந்தேன் என்றுரைத்தான்.
பல கஸ்டங்களின் மத்தியில் இத்தொழிலைக் ஒருவாறு கற்று முன்னேற்றம் அடைந்து கடந்த இரண்டரை வருடங்களாக பிரதான வேலையாளாய்(வாஸ்) ஆக இருக்கிறான்.இவனுக்கு ஒரு கூலியாளும் இருக்கிறான்.
இங்கு வேலை செய்பவர்களுக்கு எத்தனை மோட்டார் சைக்கிளை சேர்விஸ் பண்ணுறார்களோ அதனைப் பொறுத்தே இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். அதனால் இவர்கள் தங்களுக்கு வாடிக்கையாளர்களைப் பிடிக்க வேண்டிய நிலைமையும் இருக்கிறது. வாடிக்காயாளர்கள் இல்லாதவிடத்தும் புதிதாக வருவபர்களை ஒழுங்கு முறையில் வேலையை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதனால் சில வேளைகளில் கொட்டாவி விட்டுக்கொண்டு ஒருவரும் வரவில்லையே என்று வீடு செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்படுவதுண்டு. இத்ற்காகவே கஸ்டமர்களைப் பிடிக்க வேண்டியுள்ளது.
இவன் கஸ்டப்பட்டு உழைத்தால் தான் இவன் வீட்டு அடுப்பு ஒவ்வொரு நாளும் எரியும். ஏனெனில் இப்போது இவன் தந்தைக்கும் கூலி வேலை கிடைப்பதில்லை வயதும் போயிற்று. அப்போதுதான் இவன் தம்பி, தங்கச்சுமார் படிக்கக்கூட முடியும் என்றதும் நம்ம கண்களின் ஓரத்தில் ஈரம். மனசுல பாரம்.
இதற்குப்பிறகு இவனின் தொழில்த் திறமை காரணமாகவும் மனசுல இவன் குடும்ப நிலைமை காரணமாகவும் நான் கடந்த ஒரு வருடமாக இவனிடம் தான் எனதும் எனது உறவினர்களினதும் மோட்டார் சைக்கிள்களை கொண்டு செல்வதோடு இவன் வாடிக்கையாளனானேன்.
இவனின் குடும்பப் பொறுப்புணர்ச்சி, மற்றவர்களுக்கு நல்லா உதவும் தன்மை (இது இவனின் பலமா பலவீனமா என்பது இன்னும் விளங்கல்ல எனக்கு) பெற்றோருக்குப் ஒரு நல்ல பிள்ளை, அன்பான நல்லவன் என்பன இவனின் இவனோடும் இவன் குடும்பத்தாரோடும் பழகும் போதுதான் அறியமுடிந்தது. இதனை விட இவன் எந்தவித குடிப்பழக்கத்துக்கோ ஏனைய எந்தக் கெட்டபழக்கத்துக்கோ இதுவரை ஆளாகவில்லை என்பது மனதுக்கு பிடிச்சிருக்கு. ஏனெனில் இவனைப்போன்ற 21 வயது வாலிபர்கள் இப்போது நம்ம ஊரில குடிப்போதைகளுக்கு இணைங்கிப்போதல் பார்க்க சகிக்க முடியல்ல (சீரழியும் வாழ்க்கை தேவைதானா??? இதில் பார்க்கலாம்)
எது எப்படியோ,கடந்த ஆண்டு இவன் எனக்குக் கிடைத்த நல்ல நண்பன் இதை விட நல்லதொரு தம்பி என்றே சொல்வேன் (எனக்கு தம்பியோ தங்கச்சியோ இல்லை நான் கடைக்குட்டியானபடியால்).
ஆக, இநத வருடத்தின் முதல்நாள் எனது சைக்கிளைத் திருத்தும்போது.. (உண்மையில் அதுல பிழை இல்ல சும்மா இவன் சங்கிலி ஒயில் காணாதென்று பில்டப் பண்ணும்போது....)
இவன் போன்றவர்களை நினைக்கையில் நம்ம ஊரில எவ்வளவோ படிக்க வசதிகள் இருந்தும் பல பிள்ளைகள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி கெட்டுபோவது மிக மனவேதனைக்குரியது.
12 comments:
புத்தாண்டு வாழ்த்துக்கள்
நல்ல மனம் உங்களுக்கு றமேஷ்.. உங்களை போன்றவர்கள் நல் வழிகாட்டுதலும், உதவியும் பிற் காலத்தில் நலதொரு வாழ்க்கையை இவர்களுக்கு தரும்..:) நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் ::)
அஸ்பர் said...
நன்றி அஸ்பர்
வாழ்த்துக்கள் உங்களுக்கும்
பலா பட்டறை said...
நன்றி பலா பட்டறை.
ம்ம்....
நம்மளால முடிஞ்சதை செய்யணும். அதான்..
நல்ல மனம் உங்களுக்கு ,வாழ்த்துக்கள்
Theepan said...
நன்றி தீபன்
உங்களுக்கு விளங்கிட்டு...
சந்தோசமா இருக்கு றமேஸ். இது தொடரணும்.:)
வானம்பாடிகள் said...
///சந்தோசமா இருக்கு றமேஸ். இது தொடரணும்.:)///
நன்றிங்க...
ம்ம் முடிந்தது செய்வோம்
நீங்க எங்கயோ போய்டீங்க, மிச்சம் சந்தோசமா இருக்கு. உண்மையில் நம்மூர்ல இருக்கும் எனக்கே இப்படி புல் அரிக்குது எண்டால், நம்ம ஊரு மண்வாசனையே இல்லாம வேற நாடுகளில வாழிற ஆக்களுக்கு நீங்கள் எல்லாம் ஒரு "கோகினூர் வைரம்" தான்....
வாழ்த்த நன் ஒன்னும் உன்ன வாழ்த்தும் அளவுக்கு ஒண்ணுமே இல்லாத ஒன்னுதான்..... இருந்தும் உன் பணியை மெச்சாமல் இருக்க முடியாதவனாய் பனி தொடர வாழ்த்துக்கள்... Seelan
Seelan said...
நன்றி அண்ணே...
மனசு குளிருது....
முடிந்ததை செய்வோம்
வாழ்க்கையில் வாழும் காலம் சிறிது தானே.
ரமேஷ் மனிதம் உங்க கிட்ட அதிகமா கொட்டி கிடக்கு... இந்த பதிவை படிக்கும் பொது மிகவும் நெகிழ்ச்சியா இருக்கு...வாழ்த்துக்கள். ரமேஷ்...உங்களின் இந்த பகிர்வுக்கும் புது வருடத்திற்கும்...
kamalesh said...
நன்றி கமலேஷ்
புது வருட வாழ்த்துக்கள்
நம்மளால முடிஞ்சது செய்துகிட்டே இருப்போம் இல்லையா..
Post a Comment