.........................
ஒரு மாய உலகத்தின் நவநாகரிக வளர்ச்சியின் பால் கெட்டுப்போகும் பரிதாப மாணவர்களின் வரிசை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
இப்போது நம்ம ஊரைப்போன்ற பல கிராமங்களில் போதை பொருள் விசேஷமாக கஞ்சா மற்றும் மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கட்டுப்படுத்த முடியாமல் பெற்றோர் தவித்துக் கொண்ருக்கின்றனர். பாவம் அவர்கள்.. ஊரில் மிக இலகுவாக உழைக்க வேண்டுமெனில் சாராயம்(மது) விற்கலாம். விரைவில் பணப்பை நிரம்பும். ஆனால் அதை விற்றவர்கள் நிம்மதியாக நல்ல நிலையில் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை. (இப்போது இதனைக்கட்டுப்படுத்த பல முயற்சிகள் சிவில் நிர்வாக ரீதியல் மேற்கொண்டு வருகிறார்கள்.எல்லாம் கண்துடைப்பமாவே உள்ளது)
இது பல பிரச்சனைகளை ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்படுத்துகிறது. உருப்பட வேண்டுமென்று பிள்ளைக்கு ஏதும் ஏசினால் (திட்டினால்) போதும் இண்டைக்கு பிள்ளையால சிவராத்திரிதான்.. குடிச்சிக்கிட்டு குதறிவிடுவான் பெற்றோரை.. பால்யப்பருவம் படர்ந்தவன் தானே ஏதாச்சும் சொன்னா தாறுமாறா பண்ணிடுவானே என்று பயந்து வாழவேண்டிய நிலைமை இவன் பெற்றோருக்கு...ம்ம..
எங்க ஊருல ஒரு கஸ்டப்பட்டு வளர்ந்தவன் நல்லா படிச்சவன் படிச்சிக்கொண்டிருப்பவன். அவன் அப்பா ஒரு விவசாயி. மட்டக்களப்பில் இவனை கணித விஞ்ஞான பிரிவில் படிக்க விட்டு வெற்றியும் கண்டவர்.(அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன்...)
இவன் கால கஸ்டமா இல்லை, விட்டில் பூச்சி விளக்கில் விழுந்ததா தெரியவில்லை. நான் அறிந்தவரையில் இவன் நல்லவன் ஆனால் இவன் ஏன் இப்படி மாட்டினான் என்று தெரியவில்லை.
ஒருவன் கூடுகிற கூட்டத்தைப் பார்க்கையில் "இவன் உருப்பட்டமாதிரி தான்" என்று சொல்லுவர். அதேபோல் இவனும் சேர்ந்த கூட்டம் அப்படித்தான். அந்த கஞ்கா,பீடி, சாராயம், பியர் என்று... அதுக்கு அவர்கள் குழுக்குறி கூட ம்ம் நாய் கெட்ட கேட்டுக்கு இப்படியெல்லாம் அழியுதுங்க. இவனிடம் பல தடவைகள் சொல்லியிருக்கேன் அவன் கேட்டபொழுது தலையாட்டுவான். ஆனால், நிறைய பொய் சொல்லுவான் குடிப்பதற்காக புகைப்பதற்காக இப்படியெல்லாம் செய்யவில்லை என்று சத்தியம் பண்ணுவான் ஆனால் எல்லாம் தலைகீழா செய்யுவான். இவன் கெட்டுப்போவதைப் பற்றி அவன் பெற்றோருக்கும் தெரியும் ஆனால் கதைக்க முடியாத நிலைமை, ஏனெனில் இவன் எதிர்காலத்தில குடும்பத்துக்கு உதவவேணும் இல்லா விட்டா இப்பவே எங்கேயும் பொண்ணக் கூட்டிக்கிட்டு ஓடிருவான் என்ற பயம்.
இனி இவன் திருந்த இடம் வேண்டும் ஏனெனில் இவனின் இதயம் மெல்லியது. நுரையீரல் கருகப்பாக்கும். நாங்களும் குடித்தோம் கும்மாளமடித்திருக்கிறோம் பல்கலைக்கழத்தின் காற்றோடு மட்டும் இருந்தோம். ஊரில் பயப்பட்டு வளர்ந்தோம் வளர்கிறோம்.
ஆகால் இந்தப் பிள்ளைகள் குடிப்பழக்கத்துக்கு 18,20 வயதுகளிலே அடிமையாகிறதென்பது நமது பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாவதோடு இவர்கள் பெற்றோருக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பது கவலைக்கிடமாக இருக்கிறது. தான் பாழ்பட்டு ஊர் பாழ்பட்டு நாடு பாழ்படுகிறது.
எனவே இப்பிள்ளைகளின் இந்தப்போக்கிலே மாற்றம் கொண்டுவர அனைவரும் நல்ல சிந்தனைகளை வளர்க்க வேண்டும். இதற்கு அடிமையாக முக்கிய காரணம், இம்மாணவர்களுக்கு குடும்பப் பொறுப்புணர்ச்சி வளர்க்கப்படாமையும் அவர்களின் நேரம் அதிகமாக வீணாக கழிவதாலும் நேரம் கடத்துவதற்கு சரியான திட்த்தை இவர்களிடம் வளர்க்க முடியாமல் போவதாலும் இவர்களுக்கு உரிய விழிப்புணர்வு வழங்கப்படாமையுமே.
இவன் போன்ற படித்த உயர் தொழிக்குப் போக வேண்டியவர்களைக் கண்டு இப்போது வளரும் இளம் பிள்ளைகளும் இக்கெட்ட பழக்கங்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது.
மிகவும் கவலையான மன வேதனைக்குரிய விடயம் இது என்னைப் போன்ற பல பேர் பார்த்த அல்லது பார்த்துக்கொண்டிருக்கின்ற சம்பவங்கள் தான் என்ன செய்வது எனறு தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் விடயமும் தான் ஏனென்றால் இவர்களைத் திருத்துவதற்காக சொன்னால் இவர்கள் இவ்வாறு கேட்கக்கூடும் "எல்லோரும் தம்மை விட்டுவிட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயல்கிறார்கள்" என்ற தாகூரின் வாக்கியத்தை...
இருந்தாலும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவது பிள்ளைகளாகிய நீங்களே.....
10 comments:
திருத்தலாம் ஆனால் ஆலயம் சார்ந்த ஈடுபட்டில் கூடிய அழுத்தத்தினை படித்த உங்கள போன்ற ஆக்கள் அவர்களிடம் செறிவாக்க வேண்டும், அதோடு தாங்கள் படித்து முடித்து மற்றவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் கூட்டத்தை கட்டவிழ்த்து பாருங்கள் தானாக திருந்துவர் ....
இப்ப பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் பாவனை ஒரு கொளரவ கலாச்சராமாக மாறியுள்ளது.. எதற்க்கெடுத்தாலும் போத்தல் எங்கிற நிலமைதான் இருக்கு.
இளைய சமுதாயத்தின் மீது மிகவும் அக்கறை உள்ள பதிவு...உங்களின் இந்த பதிவு யாரையாவது மாற்றுகிறதோ இல்லையோ...நிச்சயமாக அது போன்றவர்களை யோசிக்க வைக்கும் என்று நம்புகிறேன்...புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
சிந்திக்க வைக்கும் கட்டுரை..
நல்ல பதிவு ...என்ன சொன்னாலும் யாரும் திருந்த மாட்டாங்க சார் தண்ணி அடிச்சு சிகரெட்டு புடிச்சாதான் யுத்து... கேட்டா என்ஜொய் பண்ணுறாங்களாம்.. என்ன கொடுமை சார்..
///திருத்தலாம் ஆனால் ஆலயம் சார்ந்த ஈடுபட்டில் கூடிய அழுத்தத்தினை படித்த உங்கள போன்ற ஆக்கள் அவர்களிடம் செறிவாக்க வேண்டும், ///
ஆலயம் அமைதிப்படுத்துமென்றால் ஓகே.. அதென்ன உங்களைப்போன்ற....ஹிஹிஹி்்
///அதோடு தாங்கள் படித்து முடித்து மற்றவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் கூட்டத்தை கட்டவிழ்த்து பாருங்கள் தானாக திருந்துவர் ....///
விரைவில் இதுபற்றி ஒரு பதிவெழுதுகிறேன்
(நீங்கள் யாரைச் சொல்லுகிறீர்கள் என்று தெரியும்.. )
அஸ்பர் said...
உண்மைதான் அஸ்பர் களவும் கற்றுமற என்று சொல்லுகிறதோ தெரியல்ல....
ஆனால் அங்கு குடிப்பழக்கம் மிக கடுமையாகத்தான் உள்ளது
நன்றி அஸ்பர் :)
kamalesh said...
அது போன்றவர்களுக்காகவே உதாரணத்துக்காக நிஜத்தை எழுதியிருக்கேன்.
நன்றி கமலேஸ்
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
முனைவர்.இரா.குணசீலன் said...
வாங்க குணசீலன்
முதல்வருகை மற்றும் பின்னூட்டலுக்கு..
வேர்களைத்தேடிப் போகும் போது கூட சிதறலில் சிக்கிவிட்டீங்க போல..
Balavasakan said...
உண்மைதான் பாலா...
என்ன கொடுமை சார் இது எதுக்கு...(ஹிஹி யா)
Post a Comment