அம்மா: "தம்பி கடக்கரையில்(கடற்கரை)மீன் படுதாம் எழும்புடா மீன் வாங்கிட்டு வாடா... "
"என்னம்மா சும்மா நித்திரை கொள்ளவிட மாட்டியா??"... என்று முணுமுணுத்து... "ம்ம்ம்ம்மா ... அப்பா " எண்டு எழும்பி காலைக்கடனையெல்லாம் முடித்துக்கிட்டு கடற்கரைக்கு போனேன். "ஓடியா ஒரு கை பிடி.. ஏலோ...ஏலோ..."என்ற ஆர்ப்பரிப்புடன் வலை இழுக்க ஆரம்பித்தார்கள் நானும் பிடித்து இழுத்தேன்...
ஆமா.. எப்படி இது .........?
நம்ம ஊருல கடல் மீன்பிடித்தொழில் ஆத்து(நன்னீர்) மீன்பிடித்தொழில் என இருவகை தொழில்களிலும் பாரம்பரிய தன்மையே இன்னும் காணப்படுகிறது.
பாருங்க கரைவலை என்று அழைக்கப்படும் நம்ம ஊரு(தேற்றாத்தீவு) மீனபிடித்தல் முறை எப்படி என்று..
முதல்ல தோணியில்(canoe) கரைவலை ஏற்றப்படும் இது தான் கரைவலைத்தோணி அதன்மேல் கரைவலை உள்ளது.
பின்னர் மீன்கூட்டத்தைக் கண்டவுடன் "தோணி" தள்ளப்பட்டு வளைத்து கரைவலை போடப்படும்.(அதாவது தோணியின் மூலம் வலை கடலுக்குள் இடப்படும்) மீன்கூட்டத்தை (Schooling of fish) "சிகப்பு " எண்டு சொல்லுவர். "டேய் அங்கபாரு சிவப்பு தெரியுது ...." இப்படி சொல்லுவர்.
பின்னர் இழுக்கும் கயிறு இதனை "கம்பான்" கயிறு என்றழைப்பர். இது ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தோணியிலிருந்து கொடுக்கப்படும். பின்னர் இருபக்கமும் கயிறு இழுக்கப்படும் இதனையே வலையிழுத்தல் என்று சொல்லப்படும். கயிறு இழுக்க பெரிய கண் வலை இழுக்க பின்னர் சிறிய கண் வலை இழுக்கப்படும் அதன்பின் மிகச்சிறிய கண் உள்ள வலை அதாவது மடி என்றழைக்கப்படும் வலை கரையேறும். இதிலே தான் சிறைப்படுத்தப்பட்ட மீன்கள் இருக்கும். பின்னர் தோணி கரைக்குத் தள்ளப்படும்.
பாருங்க கரைவலை மீன்பிடிக் காட்சிகளை...
இதுதான் கரைவலையின் முழுத்தோற்றம்
கடலுக்குள் வலை போடப்படுகிறது
வலை இழுக்கப்படுகிறது
ம்ம் இதுதான் நம்ம மீன்பிடித்தொழில். இது நம்ம மக்களால் தொன்றுதொட்டு செய்யப்பட்டு வருகிற பாரம்பரியத் தொழில். ஆனால் இன்னும் நவீன முறைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இவர்கள் இப்பொழுதும் இத்தொழிலில் ஈடுபடுவது மிகவும் வேதனைக்குரிய விடயம். கடல்வளம் மனித வலு போதியளவு இருப்பதால் ஏன் தொழிநுட்பத் திறன் இன்னும் வளராமலும் இவர்களது பொருளாதாரமும் வளர்ச்சியுறாமலும் காணப்படுகிறது.??? ஆனால் தகுந்த முறையில் பயிற்சி வழங்கி இவர்களின் மீன்பிடித்தொழிலை விருத்தி செய்வதன் மூலம் இவர்களது வாழ்வாதாரத்தை அதிகரிக்கச் செய்யலாம் என்பது நம்ம கருத்து யாராவது பாருங்கப்பா...
29 comments:
good post, keep posting
Theepan said...
////good post, keep posting///
Thank u
பதிவு மிக அருமை
தொடர்ந்து எழுத வாழ்துக்கள்
ம்..ம்.. எப்போதுதான் இவர்களுக்கு விடிவு கிடைக்க போகிறதோ....???
அரசாங்கங்கள் தேர்தலுக்கு செலவிடும் பணத்தில் ஒருபகுதியாவது மீன்பிடித்தொழிலை அபிவிருத்தி செய்ய மிதலீடு செய்தால்..நாடும் உருப்படும் இவர்களும் உரப்படுவார்கள்
நல்ல சிந்தனை.
உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...
//
பதிவு மிக அருமை
தொடர்ந்து எழுத வாழ்துக்கள்
///
நன்றி தொடருவோம்
Balavasakan said...
///
ம்..ம்.. எப்போதுதான் இவர்களுக்கு விடிவு கிடைக்க போகிறதோ....???
அரசாங்கங்கள் தேர்தலுக்கு செலவிடும் பணத்தில் ஒருபகுதியாவது மீன்பிடித்தொழிலை அபிவிருத்தி செய்ய முதலீடு செய்தால்..நாடும் உருப்படும் இவர்களும் உருப்படுவார்கள்
///
அப்படிப் போடுங்க பாலா...
இனியாவது ...???
நன்றி பாலா
வானம்பாடிகள் said...
////நல்ல சிந்தனை.///
நன்றி அண்ணே
அரசியல் வியாதிகள் இருக்கும் வரை கஷ்டம் தான்... ஆண்டவந்தான் நல்லது செய்யனும்.. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.....
அண்ணாமலையான் said...
///
அரசியல் வியாதிகள் இருக்கும் வரை கஷ்டம் தான்... ஆண்டவந்தான் நல்லது செய்யனும்.. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்...
///
சரியா சொன்னீங்க அண்ணாமலை அண்ணே..
நன்றி
நான் மாறுபட்ட சிந்தனையாளன். எனவே தயாராகுங்கள்:
//கடல்வளம் மனித வலு போதியளவு இருப்பதால் ஏன் தொழிநுட்பத் திறன் இன்னும் வளராமலும் இவர்களது பொருளாதாரமும் வளர்ச்சியுறாமலும் காணப்படுகிறது.???//
எப்படிச்சொல்கிறீர்கள் கடல் வளம் அப்படியே இருக்கிறது என்று?
பல நாடுகளில் டுனா பிடிப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது. டுனாவின் பெருக்கங்கள் குறைந்துவருவதால்.
Overfishing கடல் வளத்தை அழித்துவருவதாக சொல்லப்படுகிறது.
கடல் உலகில் நிரந்தரமான ஒன்று. அஃது என்று பூமி தோன்றியதோ அன்றிலிருந்து என்று பூமி இல்லாதுபோகிறதோ அது வரையிருக்கும்.
கடல் வந்ததலிருந்து, மனிதன் தோன்றியதிலிருந்து, கடற்கரைகளில் வாழும் மக்கள் கடல் சார்ந்தே வாழ்கின்றனர்.
அக்கடல் இருக்கும் வரை அவர்கள் வேலையும் நிரந்தரம்.
எப்படி எக்காலமும் அவ்வேலையைப்பார்த்தார்களோ அப்படியே அவர்கள் அதைச்செய்து வரட்டும்.
அது அவர்களுக்கு மனமகிழ்ச்சியையும் உடல் ஆரோக்கியத்தையும் தந்தது; தந்து கொண்டேயிருக்கும்.
அம்மக்கள் வாழ்க்கையின் பொருளாதாரம் பிறமக்களின் பொருளாதாரத்தைச்சார்ந்தது; கடலைச்சார்ந்தது அல்ல.
வியப்பா? தேவையில்லை. பிடிக்கும் மீன்களை வாங்கும் மக்கள் யார்? அவர்களிடம் செல்வச்செழிப்பு, அல்லது பணப்புழக்கம் இருப்பின், மீன்களின் விலை கூட்டப்பட்டு மீன்வர்களுக்கு நல்ல வரும்படி கிடைக்கும்.
வாழ்க்கையில் பழமையான விடயங்கள் ஒவ்வொன்றாக மறைந்த்து வரும் தற்காலத்தில், மீனவர்கள் வாழ்க்கை நவீனமயமாக்கப்பட வேண்டாம்.
அவர்கள் செய்யும் தொழிலுக்கு இடைஞ்சல் தராமல் இருந்தால் போதும்.
பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத்தரம் என்று எதைச்சொல்கிறீர்கள்?
மாடமாளிகை, நவீன வாழ்க்கைக்கருவிகள், போன்றவை நிறைந்தனவையா?
கடற்கரையில் சிறுவீடுகளில் என்ன தவறு? மீனவர்கள் எளிய வாழ்க்கையே விரும்புவர்.
கோட்டும் சூட்டும் நித்தம் நித்தம் போடுவராயின், அவர்கள் மீன்பிடி தொழிலைக் கேவலமாகப்பார்ப்பர்.
அத்தொழில் பிறராலும் கேவலமாகப் பார்க்கப்படும்.
கடல் வளம்?
ஆம் இந்திய அரசு மீன்பிடி தொழிலில் ஒரு moratorium சிலநாட்களுக்குப் போட்டது. அதற்காக மாபெரும் போராட்டம். அது மீன்வளத்தைப்பெருக்கவே.
ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
////
நான் மாறுபட்ட சிந்தனையாளன். எனவே தயாராகுங்கள்:
////
வரவேற்கிறேன் மாற்றங்கள் தேவையல்லவா
//கடல்வளம் மனித வலு போதியளவு இருப்பதால் ஏன் தொழிநுட்பத் திறன் இன்னும் வளராமலும் இவர்களது பொருளாதாரமும் வளர்ச்சியுறாமலும் காணப்படுகிறது.???//
///////
எப்படிச்சொல்கிறீர்கள் கடல் வளம் அப்படியே இருக்கிறது என்று?
பல நாடுகளில் டுனா பிடிப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது. டுனாவின் பெருக்கங்கள் குறைந்துவருவதால்.
Overfishing கடல் வளத்தை அழித்துவருவதாக சொல்லப்படுகிறது.
////////
பல நாடுகளில் நம்ம நாடு சேர்க்கப்படவில்லையே... மனிதனுக்குத் தேவையான அளவு கூட இன்னும் பிடிக்கப்படாமலே இருக்குது. வாழ்வாதாரத் தொழில்களில் இதுவும் ஒன்றல்லவா.. ஆமா Overfishing தடுக்கப்பட வேண்டியதே ஒழிய fishing நிறுத்தப்படவேண்டியதல்ல நண்பரே
நன்றி முதல் வருகை பின்னூட்டலுக்கும்
ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
////
கடல் வந்ததலிருந்து, மனிதன் தோன்றியதிலிருந்து, கடற்கரைகளில் வாழும் மக்கள் கடல் சார்ந்தே வாழ்கின்றனர்.
அக்கடல் இருக்கும் வரை அவர்கள் வேலையும் நிரந்தரம்.
எப்படி எக்காலமும் அவ்வேலையைப்பார்த்தார்களோ அப்படியே அவர்கள் அதைச்செய்து வரட்டும்.
அது அவர்களுக்கு மனமகிழ்ச்சியையும் உடல் ஆரோக்கியத்தையும் தந்தது; தந்து கொண்டேயிருக்கும்.////
நமது வளர்ச்சி என்பது என்ன?? மாற்றங்கள் என்பது எதைக்கூறுகிறன??
கடல்சார்ந்தவர்கள் அத்தொழிலைச் செய்வது வழமை. தொழில் நிரந்தரம். அவர்களுக்கு பாதுகாப்பு இதுவரை இழந்த இழப்புக்களுக்கு அனர்த்த முன்னாயத்தம் என்பன பற்றி தெளிவு வேண்டுமல்லவோ. அதற்காக அவர்களின் தொழிலில் வினைத்திறன் வாய்ந்ததாக வேண்டும் என்பதற்காகவே தொழிநுட்பம் புகுத்தப்படவேண்டும்
/////
அம்மக்கள் வாழ்க்கையின் பொருளாதாரம் பிறமக்களின் பொருளாதாரத்தைச்சார்ந்தது; கடலைச்சார்ந்தது அல்ல.
வியப்பா? தேவையில்லை. பிடிக்கும் மீன்களை வாங்கும் மக்கள் யார்? அவர்களிடம் செல்வச்செழிப்பு, அல்லது பணப்புழக்கம் இருப்பின், மீன்களின் விலை கூட்டப்பட்டு மீன்வர்களுக்கு நல்ல வரும்படி கிடைக்கும்.
/////
நடைமுறைச்சிக்கல்கள் போட்டி வியாபார முறைகளில் மாற்றம் இருப்பதால் இது சிந்தனைக்கே .........
////
வாழ்க்கையில் பழமையான விடயங்கள் ஒவ்வொன்றாக மறைந்த்து வரும் தற்காலத்தில், மீனவர்கள் வாழ்க்கை நவீனமயமாக்கப்பட வேண்டாம்.
அவர்கள் செய்யும் தொழிலுக்கு இடைஞ்சல் தராமல் இருந்தால் போதும்.
/////
்ம்ம் பழமை பாரம்பரியங்கள் வளர்க்கபடவேண்டும் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களின் தொழிலில் ரசனைக்காக உயிரை மாய்க்கலாமா??வாழ்க்கை வாழ்வதற்கே
///
பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத்தரம் என்று எதைச்சொல்கிறீர்கள்?
மாடமாளிகை, நவீன வாழ்க்கைக்கருவிகள், போன்றவை நிறைந்தனவையா?
///
நீங்கள் அறிந்த பொருளாதார வளர்ச்சி இதுதானா???
அவர்கள் வீட்டு பொருளாதாரம் ஐயா.. அவர்கள் வீட்டு அடுப்பு கூட யோசித்தே அவ்வப்போது எரிகிறது. இவர்களின் வாழ்க்கை பற்றி பிறதொரு பதிவெழுதுகிறேன்
///
கடற்கரையில் சிறுவீடுகளில் என்ன தவறு? மீனவர்கள் எளிய வாழ்க்கையே விரும்புவர்.
கோட்டும் சூட்டும் நித்தம் நித்தம் போடுவராயின், அவர்கள் மீன்பிடி தொழிலைக் கேவலமாகப்பார்ப்பர்.
அத்தொழில் பிறராலும் கேவலமாகப் பார்க்கப்படும்.
////
எளிமை வாழ்க்கை ஏற்புடையது ஏழ்மை வாழ்க்கை தவிர்க்கப்படவேண்டும்
////
கடல் வளம்?
ஆம் இந்திய அரசு மீன்பிடி தொழிலில் ஒரு moratorium சிலநாட்களுக்குப் போட்டது. அதற்காக மாபெரும் போராட்டம். அது மீன்வளத்தைப்பெருக்கவே.
////
இங்கு எதுவுமில்லையே
நன்றி உங்கள் சிந்தனைக்கும் கருத்துக்கும் தொடர்ந்து வாருங்கள்.
கடல்மீன் கிடைப்பதும்
கருவாடு கிடைப்பதும்
கனவில்தான் ! வெறும் கனவில்தான் !!
தேவனோயன் (Devonian) காலத்தில் தேறி வந்த மீனம்
மனிதர் தம் காலத்தில் மாண்டு விடாமல் இருக்க
பொறுப்புடன் மீன்பிடிப்பது தான்
பொருத்தமானது எக்காலத்திற்கும்.
//கடல்வளம் மனித வலு போதியளவு இருப்பதால் ஏன் தொழிநுட்பத் திறன் இன்னும் வளராமலும் இவர்களது பொருளாதாரமும் வளர்ச்சியுறாமலும் காணப்படுகிறது.???//
நிலத்தில் பாடுபடும் விவசாயி பயிரின் வளர்ச்சியை கண்ணும் கருத்துமாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி முதலியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்கிறான். ஆக முதலீடு செய்து, பயிரை பராமரிப்பு செய்துதான் உணவு தானிய உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் மீன்பிடித்தொழிலில் முதலீடு என்பது மீன்பிடிப் படகுகள், கருவிகள் மற்றும் வலைகளுக்கு மட்டும்தான். கடலின் வளத்தைப் பராமரிப்பதற்கோ, கடலின் மீன் உற்பத்தியை அளவிடுவதற்கோ மீன்பிடித்தொழில் செய்வோர் செலவிடுவதில்லை. எனவே தான் மீன்பிடித்தொழில் ஆங்கிலத்தில் "Robbers’ economy" என்றழைக்கப்படுகிறது.
றமேஸ் ...எங்கள் நாட்டின் வளத்தில் இதுவுமொன்று.இன்று அதனை முழுமையாக அனுபவிக்கு முடிகிறதா தமிழர்களால் !
புகைப்பட கருவி நன்றாக வேலைசெய்கிறது றமேஸ்..:))
சிந்திக்க வேண்டிய பின்னூட்டங்கள், பதில்கள்.
வாழ்த்துக்கள். கேள்விகளை மீனவர்களிடம் வெய்யுங்கள். அவர்களின் கருத்தோடு, அடுப்பெரியும் பதிவையும் எழுதவும். நல்ல ஒரு பதிவை நோக்கி..
Atchu said...
எப்பவும் அப்படியே .இருக்கிறீங்க ம்ம்
///எனவே தான் மீன்பிடித்தொழில் ஆங்கிலத்தில் "Robbers’ economy" என்றழைக்கப்படுகிறது.////
இது எனக்குப் புதிசு நன்றி அச்சு
ஹேமா said...
////
றமேஸ் ...எங்கள் நாட்டின் வளத்தில் இதுவுமொன்று.இன்று அதனை முழுமையாக அனுபவிக்கு முடிகிறதா தமிழர்களால் !
/////
இந்தப்பக்கம் முடிகிறது என்றே சொல்லலாம். ஆனால் கொடுமை என்னவென்றால் கடலுக்கு போகும்போது அடையாள அட்டையைக் கொடுத்து விட்டுத்தான் போக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மாறவில்லை
நன்றி ஹேமா
ஷங்கர்.. said...
////
புகைப்பட கருவி நன்றாக வேலைசெய்கிறது றமேஸ்..:))
//
ம்ம்ம் கமெராக்கு நன்றி வெறும் 5.0 Mpxl
////
சிந்திக்க வேண்டிய பின்னூட்டங்கள், பதில்கள்.
////
எதிர்மறைப்பின்னூட்டங்கள் வந்தால் வெளுத்து வாங்கணும் இல்லையா
////
வாழ்த்துக்கள். கேள்விகளை மீனவர்களிடம் வெய்யுங்கள். அவர்களின் கருத்தோடு, அடுப்பெரியும் பதிவையும் எழுதவும். நல்ல ஒரு பதிவை நோக்கி..
////
அவர்களின் நேர்காணலுடன் பதிவிட எண்ணியுள்ளேன் முயற்சிக்கிறேன் விரைவில் வரும்
நன்றி ஷங்கர்
எனக்கும் ரொம்ப நாளாய் ஆசை
மீன் பிடிக்கும் போது பார்பதற்கு!
ஆசை இன்னும் நிறைவேறவே
இல்லை.
அதற்காக என்னைக் கூப்பிட
வேண்டாம்.....கடலைப் பார்த்தால்
ஒரு பயந்தான்!!
ஒரு சாண் வயிற்றுக்கு அவர்கள்
உயிரைப் பயணம் வைத்து
நடத்தும் தொழில்
ஒருபாடல் ஞாபகத்துக்கு வருகிறது...
தரைமேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் மிதக்க
வைத்தான்.....என..அருமையான
வரிகளுடன்!
முயற்சியுங்கள் அவர்கள்
அவலம் தீர...!
Kala said...
கலா உங்கள ஆசையின் சில இடைவெளிகளை நிரப்பி இருக்கும் என இந்தப் பதிவு பெருமூச்சு விடுகிறது..
////
ஒரு சாண் வயிற்றுக்கு அவர்கள்
உயிரைப் பயணம் வைத்து
நடத்தும் தொழில்
ஒருபாடல் ஞாபகத்துக்கு வருகிறது...
தரைமேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில் மிதக்க
வைத்தான்.....என..அருமையான
வரிகளுடன்!
முயற்சியுங்கள் அவர்கள்
அவலம் தீர...!
////
ஆம் அதற்காகத்தான் எழுதுகிறேன் இன்னும் எழுதுவேன்
நன்றி கலா
//ஆமா Overfishing தடுக்கப்பட வேண்டியதே ஒழிய fishing நிறுத்தப்படவேண்டியதல்ல நண்பரே//
நண்பரே!
அஃது உங்கள் கருத்து. பாமரக்கருத்து. Not that of an expert.
விஞஞானிகளின் கருத்தை ஏற்று அரசு இவ்வருடம் தடை செய்தது. நீங்கள் இலங்கையைப்பற்றி எழுதுகிறீர்கள். நான் இந்தியாவைப்பற்றி எழுதுகிறேன்.
சங்குகுளித் தொழில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் தொழில். அஃது அரசால் பத்து வருடங்கள் நிறுத்தப்பட்டு, மீண்டும் சிலவருடங்கள் திறக்கப்பட்டது.
ஏன்? விஞ்ஞானிகள் அரசிடம் சொன்னார்கள். சங்கு குளித்தொழில், முத்துக்குளித்தொழிலும் ஒன்றே. முத்து வளர ஆண்டுகள் தேவை. over fishing of pearls has depleted it thoroughly. So stop it or put a moratorium upon it.
தமிழக அரசு கேட்டது.
இதே வண்ணமே மீன்பிடித்தலிலும்.
‘நிறுத்தப்படவேண்டியதல்ல்’ என்பது பாமரர் கருத்தாகும்.
‘சில காலம் நிறுத்தியே ஆக வேண்டும் ‘ என்பது கடலியாளரின் கருத்தாம்.
இப்பதிவு அடுத்த ஆண்டு தமிழ்மணம் போட்டியில் ஏதாவது ஒரு பரிசு பெறும். புகைப்படங்கள் உணர்ச்சிகளோடு எடுக்கப்பட்டு, ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்காக போடப்ப்ட்டவை. வெறும் க்லையழகுக்காக.
முன்கூட்டிய எண்ணமோ?
கரைவலை மீன்பிடி என்பது எப்படி இருக்கும் என ஒரு கட்டுரையின் ஊடாக வெளிப்படுத்தி அத் தொழிலுக்கே ஒரு உயிர்ப்போட்டம் கொடுத்துள்ளீர்கள்.
கரைவலை மீன்பிடி என்பது எப்படி இருக்கும் என ஒரு கட்டுரையின் ஊடாக வெளிப்படுத்தி அத் தொழிலுக்கே ஒரு உயிர்ப்போட்டம் கொடுத்துள்ளீர்கள்.
Post a Comment