Pages

Sunday, September 12, 2010

காதல் சாதல்

ஒரு ஆணாய்:
பதின்மவயது அந்தா இந்தா என்று ஆணாய் இருந்து அர்த்தம் தேடும் பருவம். காதல் என்றால் என்ன என்று விழுந்து புரள எண்ணும் மனது. காதல் பாடல்கள் பிடிக்கும் ஐட்டம் அல்லது பிகருகள் என்று எதிர்ப்பால் தேடும் பருவம்.

"பருவம் படர்ந்து
பார்வைகளில் சிதைந்து
காதல் மொழி
எதுவென தேடும் மனது"

எங்கோ பார்த்த அவளை இன்னும் எப்படி இந்த மனதால் வைத்திருக்க முடிகிறது கண்களுக்கு தான் எத்தனை மெமரி காட்டுக்கள். இப்படியெல்லாம் ஏங்கித் தவியாய் தவித்து காலம் கரையும் வாலிபர்களே!

ஒரு பெண்ணைப் பார்த்தால் காதல் வருகிறதென்கிறார்களே. அப்படி என்றால் பார்வைப்புலனற்றவர்களுக்கு காதல் எப்படி இருக்கும் என்று பார்த்தால் நாம் அந்த வயதுகளில் கொண்டது ஒரு மயக்கம் அல்லது மோகம் இதையும் விட சொல்லப்போனால் கண்மூடித்தனமான அன்பு (Infatuation).
காதல் என்பது
"இரு மனம்
எம் மனம்
என் மனம்
என தடுமாறும் வரம்"

(படம் முகநூல் நண்பர் Syed Tareq Rahman's Photos - Drawing இலிருந்து)

இந்தநிலை ஏற்பட வேண்டுமெனில் உணர்வு உள்ளம் வெள்ளமாய் பழகிப்பாருங்கள். இருவருக்கிடையில் இயைந்து போகும் பல இடங்கள் தெரிந்து கொள்ளப்படும். ஒன்றாய் இசைந்து பாடும் ஒரு சந்தம் தெரியும். இது பழகலும் பேசுதலும் உணரப்படும் இனிய பொழுது.

ஆக வெறுமனே பார்த்தால் அவளைக்காதலிக்க முடிகிறது என்றால் கண்ணில் தெரிந்தது காதல் என்பதை விட காமம் அல்லது தீவிர மோகம் என்றே சொல்லத்தோன்றுது. கேட்கலாம் காதல் என்பதன் அர்த்தப்படுத்தல் காமம் என்று. தவறு. காதல் என்பதன் ஒரு விளைபொருள் காதலில் காமம் அதாவது புணர்ச்சி இன்பம். காதலுக்கு முதல் எண்ணும் இதை காதல் எச்சரிக்கும்.
பல காதல்கள் கண்ணீரின் ஊர்வலத்தில் இருப்பதற்கு இதுவே முதன்மை பெறுகிறது.
காதல் பல புரிந்துணர்வுகளில் விட்டுக்கொடுப்புக்களில் வலம்வர வேண்டியது தவிர காவியத்துக்காகவும் கல்லறைகளுக்காகவும் இருப்பதற்கல்ல. காதலிப்பதற்காகவே காதல்.

இப்போதைய நமது பாரம்பரியங்களில் காதல் என்பதை விட வேண்டும் தவிருங்கள் என்றும் ஒரு பொதுவாக எல்லாப் பெற்றோர்களாலும் வெறுக்கப்படக் காரணங்கள் கல்யாணத்துக்கு முன்னான காதல் என்ற போர்வையில் கலைக்கப்பட்ட சிசுக்களின் சாபங்களே. அனேக காதல் கல்யாணங்கள் கல்யாண வாழ்க்கையில் தித்திக்காததும் இதற்கு காரணங்களே.
கல்யாணத்துக்கு முன்னரே இருவரும் ஒருவருக்கொருவர் முழுமையாக உணர்ந்த ??? பிறகு காதலில் கரைந்த பிறகு கல்யாண வாழ்க்கையில் அவர்களால் வாழ முடிவதில்லை என்பது பல அனுபவசாலிகளின் கருத்து. என்னைப் பொறுத்தவரையில் இவர்களிடையே சரியான புரிந்துணர்வு முறையாக கட்டிஎழுப்பப்படாததே அல்லது தொடர்பாடலில் எழும் தீர்க்கப்படாத சிக்கல் நிலைமையுமே காரணமாக இருக்கிறன எனலாம். காதலின் பெறுமதி உணரப்படாமல் மனித இனத்தின் எச்சம் நீடித்த தன்மை என்பதை விளங்காமல் காதலின் அர்த்தம் அறியாமல் இருப்பவர்களால் காதல் என்பது விரும்பப்படாமலும் ஆதரிக்கமுடியாமலும் இருக்கிறது என்பது உண்மையே.

கற்றுக்கொள்க
காதலை
சாதலுக்கு அல்ல
வாழ்வதற்கு
என்று பகர்க உலகே

உணர்வுகளின் எழுச்சிகளில் காதல் வாழ்கிறது என்பது உண்மையே. அது

உயிர்களின் ஆழத்தேடல்
பரிணாமத்தின் பருவத்தேடல்
இதயத்தின் இன்பத்தேடல்

என்பதை உணர்க உள்ளங்களில் தேக்கி நுகர்க.

தேவைகள் தீர்ந்த பிறகு உயிர் என்பது உடல் ஆகும். காதல் தீர்ந்த பிறகு(கல்யாண) வாழ்க்கை நரகமாகும். காதல் சாதல் வரை கொள்க. இறுதி மூச்சும் இனி காதல் மூச்சாகட்டும். கல்யாணம் ஆனால் காதல் சாவது இல்லை. இன்னும் வளர்க்கப்பட வேண்டியதே.

(தொடரும் இனமத மொழிகள் கொண்டு)

16 comments:

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது..

ம.தி.சுதா said...

தொடருங்கள் காத்திருக்கிறேன்...

Ramesh said...

@ம.தி.சுதா said...

////அருமையாக இருக்கிறது..///
நன்றி சுதா

Ramesh said...

@ம.தி.சுதா said...

//தொடருங்கள் காத்திருக்கிறேன்...///
ம்ம் தொடருவோமே.. பொறுத்தருள்க
நன்றி

Jana said...

மிக அருமையான பதிவு ரமேஸ். கருத்தாழம், எழுத்துநடை, விடயம் என அத்தனையும் பிரமாதம். பாராட்டுக்கள்.

-->ஒருவிடயம் இது பற்றி யார் எழுதினாலும் அவருக்கு திருமணம் முடிந்துவிட்டதா? இல்லையா? என்பதை அவரது எழுத்துக்களே காட்டிக்கொடுத்துவிடுகின்றது.<--

இன்னும் ஒருவிடயம். பால்யவயதில் வரும் காதலும், அந்திமகால காதலுமே மனதை நெருங்கித்தொட்டு உயிரில் கலக்கும் என்று ஒரு ஆங்கில எழுத்தாளர் (பிரித்தானியர்தான் பெயர் சரியாகத்தெரியவில்லை) சொல்லியுள்ளதையும் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முதலாவது கட்டம் காமம்பற்றி தெரியாது, இறுதிக்கட்டம் காமம் முடியாது!!

Ramesh said...

@Jana said...

/// மிக அருமையான பதிவு ரமேஸ். கருத்தாழம், எழுத்துநடை, விடயம் என அத்தனையும் பிரமாதம். பாராட்டுக்கள். ///

நன்றி அண்ணா
//ஒரு விடயம்: //
ம்ம் ஏற்றுக்கொள்கிறேன்

//இன்னும் ஒரு விடயம்://
காதலுக்கு வயதுகணக்கில்லை என்கிறார் போல.

நன்றி கருத்துக்கும் வருகைக்கும் தொடரலாம் என நினைக்கிறேன்.

sathya narayanan said...

nice....nalla iruku....

ஹேமா said...

அப்போ...காதல் சரியா தவறா றமேஸ்.சொல்லுங்கள் காத்திருக்கிறோம்.

Ramesh said...

@sathya narayanan said...

//// nice....nalla iruku....////
நன்றி சத்யா

Ramesh said...

@ ஹேமா said...

///அப்போ...காதல் சரியா தவறா றமேஸ்.சொல்லுங்கள் காத்திருக்கிறோம்.///

காத்திருங்கள் வந்து சேரும்
நன்றி ஹேமா

Bavan said...

//ஒரு பெண்ணைப் பார்த்தால் காதல் வருகிறதென்கிறார்களே. அப்படி என்றால் பார்வைப்புலனற்றவர்களுக்கு காதல் எப்படி இருக்கும் என்று பார்த்தால் நாம் அந்த வயதுகளில் கொண்டது ஒரு மயக்கம் அல்லது மோகம்//

அதே.. அந்தவயதில் அந்த உணர்வு வரவேண்டும் வராவிட்டால்தான் பிரச்சினை என்று படித்திருக்கிறேன். அதைஎதிர்பாலாரி்மான ஈர்ப்பு என்றால் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன், தவிர "காதல்" என்ற ஒன்றாக இருந்திருக்குமோ தெரியவில்லை.

ஆனால் அந்தப்பருவத்தில் அந்தசவாலைக்கடந்தவனுக்கு வாழ்க்கை பிரகாசம்தான், அதன்பிறகு காதலித்தாலும் கூட..

//காதலின் பெறுமதி உணரப்படாமல் மனித இனத்தின் எச்சம் நீடித்த தன்மை என்பதை விளங்காமல் காதலின் அர்த்தம் அறியாமல் இருப்பவர்களால் காதல் என்பது விரும்பப்படாமலும் ஆதரிக்கமுடியாமலும் இருக்கிறது என்பது உண்மையே//

ஆம்.. அதே..:)

Ramesh said...

Bavan said...

///
அதே.. அந்தவயதில் அந்த உணர்வு வரவேண்டும் வராவிட்டால்தான் பிரச்சினை என்று படித்திருக்கிறேன். அதைஎதிர்பாலாரி்மான ஈர்ப்பு என்றால் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன், தவிர "காதல்" என்ற ஒன்றாக இருந்திருக்குமோ தெரியவில்லை.///

எதிர்ப்பார் ஈர்ப்பு எப்போதும் இருப்பது. அந்த வயதுகளில் காதல் என்பதை நான் மறுக்கிறேன்.

////ஆனால் அந்தப்பருவத்தில் அந்தசவாலைக்கடந்தவனுக்கு வாழ்க்கை பிரகாசம்தான், அதன்பிறகு காதலித்தாலும் கூட..////

ம்ம்ம்..

நன்றி பவன் வருகைக்கும் நல்ல கருத்துக்கும்

யோ வொய்ஸ் (யோகா) said...

தொடருங்கள் ரமேஸ்

Ramesh said...

@யோ வொய்ஸ் (யோகா) said...

//தொடருங்கள் ரமேஸ்///
தொடருவோமே
ஏதாவது காதலைப்பற்றி கொஞ்சம் சொல்லிட்டு போயிருக்கலாமே

anuthinan said...

//உயிர்களின் ஆழத்தேடல்
பரிணாமத்தின் பருவத்தேடல்
இதயத்தின் இன்பத்தேடல் //

அண்ணா எனாகும் உங்கள் கருத்தில் வேறுபாடு இல்லை. ஆனால், இது பலருக்கு தெரிவது இல்லை என்ற என் கருத்தில் மாற்றமும் இல்லை !!!

அடுத்த பாகத்துக்காக WAITING

Ramesh said...

@Anuthinan S said...

///அண்ணா எனாகும் உங்கள் கருத்தில் வேறுபாடு இல்லை. ஆனால், இது பலருக்கு தெரிவது இல்லை என்ற என் கருத்தில் மாற்றமும் இல்லை !!!

அடுத்த பாகத்துக்காக WAITING////

அனு நன்றி கருத்துக்கும் வருகைக்கும்.
காத்திருந்தால் பதிவு நீளுமல்லவா.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு