இன்றைய தினம்
எமது இஸ்லாமிய நண்பர்களின் ஈகைத்திருநாளாம் நோன்புப்பெருநாள். அனைத்துலக எமது இஸ்லாமியர்களுக்கு சிதறல்களின் நல்வாழ்த்துக்கள். "ஈத் முபாரக்"
பாடல்களில் சிதறல்கள்
'மதராசபட்டினம்'-
மெல்லிய இசைகளில் என்றும் இதயம் இயைந்து போவது இயல்பு. அப்படியே "பூக்கள் பூக்கும் தருணம் " என்று ரூப் குமார் (Roop Kumar Rathod) மற்றும் ஹரிணியின் குரல்களோடு இணையும் ஜிவி பிரகாஷ் அன்ரா ஜெரமி என்று அழகிய தித்திக்கும் பாடல் கேட்டும் போதே மனதில் ஏதோ ஆகிறது. ஆனாலும் தமிழ் உச்சரிப்பில் சில சறுக்கல்கள் இருந்தாலும் இசை மறுபடியும் அசைக்க வைக்குது உதடுகளில் பாடலை. எப்போதும் ஹரிணியின் குரல் பிடிக்கும் முந்திரியம் பழம் உண்டால் ஏற்படும் ஹ ஹ ஹ என்ற கரகரக்கும் இனிமை ஹரிணியின் குரலுக்கு வலிமை சேர்ப்பது போன்ற உணர்வு.
".........
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே...."
'பாஸ் என்கிற பாஸ்கரன்'-
ஹிரிச்சரனின் " யார் இந்தப் பெண்தான் ........" என்று யுவன்சங்கர்ராஜாவின் இசையில் அற்புதம். புதிதாக படிக்கணும் போல "... என்னை ஏதோ செய்யுது...." பாடல்
"......
மனம் நொந்த பிறகு முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்........"
அழகிய வரிகள் என்னை இன்னும் ஏதோ செய்கிறது...(நா முத்துக்குமார் என்று நினைக்கிறேன்)
'எந்திரன்'
வழமையாக இசைப்புயல் என்னை எப்போதும் பிடித்து வைத்துவிடுவார். நான் எப்போதும் ரசிகன்.. அதனால் மட்டும் இந்த எந்திரன் பாடல்கள் பிடிக்கும் என்று அல்ல. வைரவரிகள் வணங்கி விழுவதும் தவிர்க்கமுடியாது. ஆனாலும் பாடகர்களின் காந்த குரல்கள் வலிமை சேர்க்கும் இசைக்கோர்வை பாடல்களில் மிளர்வது ரசிக்கக்கூடியதாக இருக்கும். தமிழ் உச்சரிப்பு இடறுபடுவுது உண்மை. அதற்காக பழமைவாதியாய் அப்படியே பாடல்கள் இருக்கணும் என்று நான் இல்லை.
"கணக்கு (Mathematics) விளங்கல என்றால்
அது எனது பிழை அதே போல் தான் கவிதைகளும்" என்று கவிஞர் அறிவுமதி சொல்வதாய் நான் கேள்வியுற்றேன். அதேபோல் தான் இவர் பாடல்களும். எப்போதும் துல்லிய இசையையும் துள்ளிய இசையையும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். எந்திரன் இயந்திர இசைக்கலவை.
"... கிளிமாஞ்ராரோ..மலைக்கனி பாஞ்சாரோ..." முதலில் பதிவிறக்கம் செய்த பாடல் "அப்பப்போ பின்னிக்கொள்ளுது.." பிடிச்சபாடல்.
எங்க வைரம் என்று தேடல்களில் சிக்கியது. "அரிமா அரிமா " ஹரிகரனின் பாடல் உச்சம்.
".... நான் அட்லாண்டிக்கை ஊற்றிப்பார்த்தேன் அக்னி அணையலயே
உன்பச்சைத் தேனை ஊற்று..........." இது இதுக்குதான் ம்ம்....வைரமுத்து
"புதிய மனிதா பூமிக்கு வா..
மாற்றம் கொண்டுவா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று
எல்லா உயிரிக்கும் நன்மையாயிரு
எந்த நிலையிலும் உண்மையாயிரு.........." என்று முதன் முதலாய் ஏ.ஆர்,ரஃமானின் புதல்வி கதீஜா பாடி ஆரம்பித்திருக்கிறார் திரையிசையில். எஸ்.பி. பாலுவுக்கு இன்னும் உயர்வாய் பாடல் கொடுத்திருக்கணும் இது போதாது.இது அவருக்கு இலகுவாக இருந்திருக்கும் ஆனாலும்
"...ரோபோ பன் மொழிகள் கற்றாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா...." ஆனந்தமாய் பாடியிருக்கிறார்.
இதய அஞ்சலி
மறைந்த நடிகர் முரளிக்கு எமது பதிவுலகம் சார்ந்து சிதறல்களின் இதய அஞ்சலி.
கண்ணீரை வரவழைப்பதில் உன் நடிப்புத்திறன் என்றும் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.
இதய அஞ்சலி
பாலம் போடுவாங்களா
இந்தப்படம் மட்டக்களப்பின் பிரதான இறங்குதுறையான மண்முனை இறங்குதுறையின் படுவான்கரையையும் எழுவான் கரையையும் இணைக்கும் ஓடத்தில் பயணம். இன்னும் பாலம் அமைக்கப்படவில்லை. பல தடவைகள் அடிக்கல் நாட்டப்பட்டதாக அறிகிறேன்.
அனுபவம் சொல்லுது
"அவன் நல்லவனா கெட்டவனா என்பது பற்றி ஆராய்ச்சி நடத்துவதை விட நான் எப்போதும் நல்லவனா இருக்கணும் என்பதில் நிலையாக இருக்கப்பார்க்கணும்"
சிதறும் சில்லறைகள் - 01
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பொறுக்கிக்கொண்டேன். சில்லறைகளை மட்டும் அல்ல..
@Jana said...
///பொறுக்கிக்கொண்டேன். சில்லறைகளை மட்டும் அல்ல..//
நன்றி அண்ணா.
உங்களாலும் இனி என் தமிழ் எம் தமிழாகும். ஊக்கப்படுத்தலுக்கு நன்றி
//"அவன் நல்லவனா கெட்டவனா என்பது பற்றி ஆராய்ச்சி நடத்துவதை விட நான் எப்போதும் நல்லவனா இருக்கணும் என்பதில் நிலையாக இருக்கப்பார்க்கணும்"//
TRUE.. :)
@Bavan said...
ம்ம் நன்றி பவன்
றமேஸ்...கொட்டிய சில்லரையில் பொறுக்கினது...
பூக்கள்பூக்கும் தருணம்.....அருமை அருமை.இசையும் வரிகளும் தேன்போல !
அடுத்து முரளியின் மறைவு.
அடுத்து சமூக அக்கறை.
கடைசி வாக்கியம்.
@ஹேமா said...
////றமேஸ்...கொட்டிய சில்லறையில் பொறுக்கினது... ...////
நன்றி ஹேமா
சிதறிய சில்லறைகள் அனைத்தும் அருமையானவை நண்பா
@யோ வொய்ஸ் (யோகா) said...
///சிதறிய சில்லறைகள் அனைத்தும் அருமையானவை நண்பா////
நன்றி யோகா
Post a Comment