Monday, September 20, 2010
பாடலும் அவஸ்தையும்
இசை எப்படி ரசனையாகிறது என்பது சொல்லித் தெரிவதில்லை. இசையின் தாக்கம் இதயத்தில் இசையும் என்பது இயற்கை. நான் என்ன விதிவிலக்கா இசைக்கு. இதனாலேயே ஒவ்வொரு இசையையின் ரசனையில் உழன்று என்ன என்ன மனசுக்குப் பிடிக்கிறது என தேடிக்கொள்ளும் சராசரி மனிதனில் நானும் ஒருவன்.
ஆனாலும் இசை என்னும் போது காலையின் காட்சியை அலங்கரிக்கும் இயற்கையை துயிலெழுப்பும் அனைத்து கிராமத்து இசையையும் சுவைத்து ரசனை எனும் தண்ணீரில் மூழ்கிவிடும் ரசிகன் நான். இதனை எழுத்துக்களில் கொணர்வது முட்டாள் தனம் என நினைக்கிறேன்.
"ரசியுங்கள்
கேளுங்கள்
இதயத்தின் சுவர்களில்
இதயம் தன்னை
அடயாளப்படுத்திக்கொள்ளும்
இசையின் எழுச்சிகளால்"
இந்தப்பாடல் நான் பதினொருவயதுகளில் எனது காதுகளை துளைத்து நெழித்த பாடல் "காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே"
ஒவ்வொரு இதயத்திலும் இந்தப் பாடல் இசைத்துவிடும் இசை விதைத்துவிடும் ரசனையை. இல்லை என்று மறுப்பதற்கு நெஞ்சம் மறுத்துவிடும் வைரமுத்தான வரிகள். காதலின் அவஸ்த்தையை ஒரு ஆணின் காதலை கண்ணீரில் எவ்வாறு படம் பிடித்துக்காட்டப்படுகிறது என்பது மெய்மறப்பது என்றால் இது என்பதை ஒருமுறைசொல்லிவிட்டும் போகும்.
என் நினைவில் நீ இருப்பதால் நெஞ்சை விட்டு எவ்வாறு பிரிந்துகொள்ள முடியும் உன்னால் காதலியே நீ இல்லாத கணங்கள் கண்ணீர்ப் பூக்களைச் சொரிகிறது என்பதை அழகாகா
"கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ எதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே"
உன்னுடன் இருந்த நினைவுகள் எல்லாம் என்னைக் கொல்லுவதாய் உணருகிறேன். இயற்கையை வெறுக்கணும் போல இருக்கு என்பதை படம் போட்டுக்காட்டும் இந்தவரிகள் காதலித்த உணர்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.உரசல்கள் உயிரை மூச்சடைய வைத்த பார்வைகள் என்று காதலையும் இயற்கையையும்..
"தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்"
வாழ்க்கையை வார்த்தைகளுடன் சேர்த்துவிடும் தன்மை அற்புதம்
"வாயில்லாமல் போனால் வாதையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே"
தான் படும் வேதனையை முத்தங்கள் தந்த சுகங்கள் இல்லாமல் தவிக்கும் தருணத்தை
"முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!
இயற்கையே உன்னைக் காதல் செய்யவேண்டுமென்றால் காதலியுடன் தான் ரசிக்கமுடியும் என்பதை
"வீசுகின்ற தென்றலே ,
வேலையில்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா ,
பெண்மயில்லை ஓய்ந்து போ!
பூ வளர்த்த தோட்டமே ,
கூந்தலில்லை தீர்ந்து போ!
பூமி பார்க்கும் வானமே ,
புள்ளியாக தேய்ந்து போ!"
என்னிடம் நண்பனொருவன் பகிர்ந்துகொண்ட கதை (அவனும் அறிந்த விடயங்களைப் அடிக்கடி பகிர்வதுண்டு என்னிடம்)
ஒரு காதல் ஜோடி. இருவருக்குள்ளும் மிகவும் நல்லதொரு புரிந்துணர்வு. காதலில் இணைந்திருக்கும் இருவரும் ரசனையானவர்கள். ஒரு விசேட தினம். இருவருக்குள்ளும் பரிசுப்பொருள் பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவை. அவன் எப்போதும் நல்லதொரு அழகிய கைக்கடிகாரம் கட்டிக்கொள்ளுவான். ஆனால் அதன் பட்டி ரசிக்கும் படியாகவோ இல்லை. அவள் தனது நீண்ட கூந்தலை தலைமுடிவெட்டி அதை வாங்கும் நிலையத்துக்குக் கொண்டு வெட்டிக்கொடுத்து விற்று அதிலிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு அவள் காதலனுக்குப் கைக்கடிகாரப் பட்டியை வாங்கிப் பரிசுப்பொருளாக்கிக் கொண்டு அவனிடம் நீட்டினாள்.
அவனும் அதைப் பெளவியமாக ஏற்றுக்கொண்டு மறைத்திருந்த அந்தப்பொருளைப்பார்க்கும் முன் தனது பரிசை நீட்டினான். அவளும் அன்பாக அதை ஏற்றுக்கொண்டு இருவரும் இதயத்தால் பிணைந்து பிரித்துப்பார்க்க அவள் காதலன் அவள் எத்தனை அழகாகவும் அடிக்கடி எத்தனையோ வாசனைத்திரவியங்களால் அடிக்கடி பாதுகாத்தக்கொள்ளும் அந்த அழகிய கார்வண்ணத்து நிள் கூந்தலுக்குரிய அந்த அடர்த்தியான கூந்தலை சோத்து மேலும் அழகுறச்செய்யும் சீமாட்டியை வாங்கிக் கொண்டுவந்திருந்தான் அவன் மணிக்கூட்டை விற்றுவிட்டு......
இதுக்குப்பின் அவனால் என்ன பாடமுடியும்
"பாவயில்லை பாவை ,தேவையென்ன தேவை?
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை?
முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!"
கண்ணீர் வழியும் கண்களுடன் உசிரு போகத்தானே வேணும். காதலின் தேவை காதலர்கள் தங்களுக்கிடையில் எவ்வாறு எவ்வளவு அதிகளவு அன்பு செலுத்துவது யார் பக்கம் அந்த காதல் எடுத்துக்காட்டப்படுகிறது என்று பரீட்சித்துப்பார்ப்பார்கள். காதலர்களாலே அதிக பாடல் வரிகள் வாசிக்கப்படும். இசை ரசிக்கப்படும். இங்கு இசையும் காதலும் என்பதில் காதலில் நான் உள்ளேனா என்பதை அடிக்கடி கேட்டுப்பார்க்கும். காதலின் அவஸ்த்தைகளை காதலி (அருகில்) இல்லாவிட்டால் இசையோடுதான் மனம் பயணிக்கும் என்பது வெளிப்படையானது. இருந்தாலும் தேவைகளோடு முற்றுப்புள்ளிகாண்பது காதலின் பக்குவப்படாத தன்மை என்பது மனவேதனைக்குரிய விடயம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Nice....
@Jana
நன்றி அண்ணா
Post a Comment