இன்றைய நாள்:
மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இவர் இலங்கை ஜனநாயக குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியாக பதவியேற்று தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பித்திருக்கிறார்.
திருக்குறள்
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.(67)
விளக்கம்:
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும்.
தன்னிலை விளக்கம்
இக்குறள் என்தந்தை கற்றாரோ என்னவோ இல்லை. ஆனாலும் தமது பிள்ளை தன்னை விட கற்று சமுதாயத்தில் விஞ்ச வேண்டுமென்ற அவா ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் உண்மை உணர்வு. அப்பாவும் என் குடும்பமும் என்னை ஒரு கற்றவனாக்குவதல் சில வெற்றிகளைக்கண்டாலும் என்விருப்பத்தை அவர்களுக்காக விட்டுக்கொடுப்பதில் அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதில் எனக்கு அதீத விரும்பம் கொண்டவனாய் இருப்பேன். ஆனாலும் அதிகளவில் பயன்பாடுகளில் சிக்கலைத் தோற்றுவிக்கும் அல்லது மூடநம்பிக்கைகளை களைவதிலும் அவர்களுக்கு அவை பற்றி தெளிவுபடுத்துவதிலும் ஒருவனாக இருப்பேன். அப்படியே எனது விருப்பமான தனியார் துறைவிடுத்து அரச துறைக்கு முதன் முதலாக இணைகிறேன். இது கூட என் தந்தை ஆசைப்பட்டு நுழைகிறேன். என்னை எப்படியோ அரச உத்தியோகத்தில் சேரு என்று முணுமுணுத்து அவர் விருப்பத்தை நோகடிக்காமல் இருப்பதில் பெரும் மகிழ்ச்சியுறுகிறேன்.
பாடல்
நான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவுடன் என்னை நனைத்துவிட்டுப்போன இப்பாடல்
இப்பொழுதும் அப்பாவுக்காக கேட்கிறேன்.
தேன் கிண்ணத்திலிருந்து
கனவெல்லாம் பலிக்குதே.. கண்முன்னே நடக்குதே..
கனவெல்லாம் பலிக்குதே.. கண்முன்னே நடக்குதே..
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னைவிட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
(கனவெல்லாம்..)
நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பேரைச் சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோளைத் தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால்
என் பாதி நீயல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனமின்று மிதந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
(கனவெல்லாம்..)
கிளிக்கூட்டில் பொத்தி வைத்து
புலி வளர்த்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்று விடு
உயிரிருக்கும் அதுவரையில்
என்னாளும் காவல் காப்பவன் நான்
என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீயல்லவா
என் ஆதி அந்தம் யாவும் இன்று ஆனந்த கண்ணீர்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
(கனவெல்லாம்..)
படம்: கிரீடம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், கார்த்திக்
புத்தகம்
இப்பெல்லாம் புத்தகம் என்றாலே உசிரு. படிக்காவிட்டாலும் வாங்கிக்கொள்ளவேண்டுமென்று ஒரு ஆவல். நான் படிக்காமல் போனாலும் யாராவது படிக்கட்டும் என்று உள்ளுணர்வு.
அண்மையில் சுஜாதாவின் மீண்டும் தூண்டில் கதைகள் படித்தேன். அதில் பத்துக்கதைகள் அற்புதமாய் எழுதிருக்கிறார் சுஜாதா அங்கே செல்போன்கள் பயனுள்ளவை,ஸ்டேடஸ், சென்னையில் மேன் ஹாட்டன் என்பன அவசியம் படிக்கவேண்டிய கதைகள்.
ஒரு ஸ்டேடஸ்'
"இன்பமும் துன்பமும் நிறைந்த வேதனையில்....
அழுதாலும் சிரித்தாலும்... வாழ்க்கை என்றே முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது"
ஒரு படம்
அண்மையில் திருமலை சென்றபோது செல்போனுக்குள் சிக்கிய படம்.
Friday, November 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அருமை..........தகுந்த பாடல்.....வாழ்த்துகள்.....
அருமை..........தகுந்த பாடல்.....வாழ்த்துகள்.....
பாடலும்,ஸ்டேடஸ்ம் ரசித்தேன்.நன்றி றமேஸ் !
திருக்குறள் - வேலை கிடைச்சதை நொடிக்கொடுமுறை நிரூபிக்கிறீங்க சேர்..:P
பாடல் - சிட்டுவேசன் சோங்?
புத்தகம் - இனி எப்ப திருமலை வருவதாக உத்தேசம்..:P
ஒரு ஸ்டேடஸ் - Liked.:)
ஒரு படம் - இங்கு தினமும் பீச்சில் ஒவ்வொரு காட்சிகள் கிடைக்கும்..:) இப்போது பின்னூட்டிக்கொண்டிருக்கும் போதுகூட மழை பெய்கிறது..:D
தூண்டில் கதைகள் மிகச்சிறப்பானவை. ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு சொடுக்குத் திருப்பம் வருவதை கவனித்திருப்பீர்களே!!
'மீன் எறிதூண்டிலில் நிவக்கும்
கானக நாடனோடு ஆண்டு ஒழிந்தன்றே"- குறுந்தொகை -54
என்ற அருமையான உவமை சொன்ன பெயர் தெரியாமல் "மீனெறிதூண்டிலார்" என்ற புலவரின் தாக்கத்தால் "தூண்டில் கதைகள்" என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சுஜாதா கூறியுள்ளார்.
1988 களில் எழுதப்பட்ட அருமையான கதைகள். நினைவு படுத்தியதற்கு நன்றிகள்.
பாடல் படம் எல்லாம் ஓகே, சில்லறை கலகலக்குது
@@ஜனகனின் எண்ண ஜனனங்கள்
நன்றி ஜனா
@@ஹேமா
நன்றி ஹேமா
@@Bavan
ம்ம் நன்றி பவன் திருமலையை மறந்துட்டேன். ஹிஹிஹி
@@Jana
நன்றி அண்ணா
ஆம் முன்னுரையில் சுஜாதா குறிப்பிட்டுள்ளார். சொடுக்குத்தான் கதையில் சுவாரசியம்.
@@KANA VARO
நன்றி வரோ
நல்லா இருக்கு. அருமை.
நல்ல பாடல் ஒன்றுடன் அருமையாய் வரைந்துள்ளீர்கள்... அதிலும் அப்பா பாடல் என்னை மிகவும் கவர்ந்தது....
திருமலை படம் நல்லாயிருக்கு....
@@vanathy said...
நன்றி வானதி
@@ம.தி.சுதா said....
நன்றி
சுதா
Post a Comment