நான் அழிந்து
என்னை
அழித்துவிட்டுப்போன
"உறவு"
எனக்காக
தற்செயலாக
வேண்டுமென்றே
ஆளாக
ஏற்றப்பட்ட "ஊசி"
உதடு கடித்து
உமிழ்ந்து உசுப்பிய
முத்தம்
என்னில் சிக்கிய
"இரத்தம்"
சொல்லவில்லை
நீர்ப்பீடன எதிரி
இணைக்கப்பட்டிருக்கு
இறந்துவிடு என்று
கிழிந்த சேலையில்
தெரிந்தது
வாழ்ந்த வாழ்க்கை
இழந்தபோதுதான்
உணர்வானது
இருந்தவரை
வாழ்க்கை
சொர்க்கமும்
நரகமும்
வார்த்தையிலும்
வாழும் 'நல்'
வாழ்க்கையிலும் தான்
ஒரு எயிட்ஸின் புலம்பல் பார்க்க
Tuesday, November 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
விழிப்புணர்வு கவிதை. பாராட்டுக்கள்!
வாழ்வோடு இருக்கிறோமா.வாழ்வை வாழ்கிறோமா என்பதுதான் வாழ்வு !
@@Chitra said...
நன்றி சித்ரா
@@ஹேமா said...
ம்ம்
நன்றி ஹேமா
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
Post a Comment