Pages

Friday, November 6, 2009

வறுமையும் திறமையும் + எனது பாடசாலை

ஒரு திறமையின் கண்ணீர்
எனது ஆரம்பமே இங்குதான் (என்ன பிழையா ஆரமிச்சுட்டனே என்று நினைக்காதீங்க)
நான் தரம் எட்டு (அப்போ ஆண்டு எட்டு) வரும் வரைக்கும் எனது பாடசாலை மட் / றோ.க.த.கலவன் பாடசாலை என்றிருந்தது. பின்னர் தேத்தாத்தீவு மகா வித்தியாலயமாக மாற்றப்பட்டது. அப்போதிருந்தே என் பாடசாலை வறுமையின் பாதையில் பயணம். அது வேற ஒன்றும் இல்ல நம்ம ஊரு பொருளாதாரம் வறுமைக் கோட்டத்தாண்ட பயந்துகொண்டே இருந்தது இருக்குது. இப்பதான் கொஞ்சம் எகுறுது..
இருந்தாலும் மீண்டும் வறுமையின் கொடி பறக்குது ...(அப்போதிருந்தே இப்போ வரைக்கும் இதே எழுத்து இன்னும் புதுப்பிக்க முடியாமல்)வாழ்த்துக்கள் சொல்ல வேண்டிய இந்த பதிவு வாழ்க்கை சொல்லுது எண்டு நினைக்காதீங்க.கண்களில் கண்ணீர் பீறிட்டு வருகுதுப்பா அதுதான் ......
இப்போதுதான் வெற்றிகரமாக மாகாணத் தமிழ்த் தினப் போட்டிகள் வெற்றி வாகை சூடிய வாகரையில் நடந்தேறிச்சு.


 

நம்ம பாடசாலை மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் மூன்று முதலிடங்களை மாகாண மட்டப் போட்டிக்கு கொண்டு செல்ல பட்ட வேதனையை எப்படிச்சொல்லுவது ......சற்று கேளுங்கள்
ஒன்று - கட்டுரையாக்கம்
அடுத்தது நாடகம்
மற்றையது வில்லுப்பாட்டு
(தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்குது)

அதிக மாணவர்கள் கூலித்தொழில் மற்றும் பயிர்ச்செய்கை விவசாயம் செய்யும் குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள்.... மூன்று நிகழ்வுகளுக்கும் பங்குபற்றும் மாணவர்களை கூட்டிக் கொண்டு செல்ல போக்குவரத்து சாப்பாட்டு வசதிகளுக்கு எமது பாடசாலையில் அவ்வளவு நிதி இல்லை .... தனி வாகனம் கூட பிடிக்க வசதி இல்லாத நிலைமை...
பாவம் ஆசிரியர்களுடன் அதிபர் அதை விட நமது மாணவர்கள் ...

இருந்தாலும் அங்க இஞ்ச அடகு வைத்தாவது கூட்டிச்செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஆசிரியர்களுக்கும் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற ஆதங்கம் நமது மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும்.
ஒரு வாகனம் வாடகைக்கு பிடிச்சாச்சு ...


காசு அதிகம் தேவை... இனி என்ன போட்டியில் பங்குபற்றாத சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களையும் (ஆட்பலத்துக்கு இல்ல காசுப்பகிர்வுக்கு) கூட்டிப் போயாச்சு


கடும் மழை.... கடை இல்ல சாப்பாட்டுக்கு கறி சமைக்கணும் மீன் பிடிக்க கடலுக்கும் ஆத்துக்கும் அன்று யாரும் போகல மரக்கறிகளும் இல்ல .... புத்திசாலியா சில மரக்கறிகளை கொண்டு போனதால தப்பிட்டங்க ..... சமைக்கப் பட்ட பாடு


ஒரு மாதிரியா நிகழ்ச்சிக்கு தயாராயிட்டாங்க நம்ம பிள்ளைகள் ......
ஆரம்பமே அசத்தலாய் கட்டுரை முதலிடம் தங்கப் பதக்கம் ... தொடர்ந்து வில்லுப்பாட்டு தந்தது அடுத்த தங்கம்
இதுதான் இந்தவருட வில்லுப்பாடு குழு(எமது மாணவ செல்வங்களின் வில்லுப்பாட்டு ஒளிப்பதிவை பிறகு தாரன்)

வில்லுப்பாட்டப் பத்தி சொல்லணும் சென்ற முறை ஆண்கள் பிரிவில் நம்ம பாடசாலைக்கு முதலிடம் கிடைத்தது .....நன்றிகள் தேநூரானுக்கே ...
சரி முதல் நாள் பெற்ற வெற்றிகளோடு களத்தில் அடுத்த நாள் நாடகத்துடன் நம்ம பிள்ளைகள் ...... மிக அழகாய் திறமையை வெளிக்காட்டினர்.... பங்கு பற்றிய மற்றைய பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஏன் நடுவர்களுக்கே பிடிச்சுட்டு....
ஆயினும் கிடைத்தது இரண்டாமிடம் என்றதுமே நம்ம பிள்ளைகளோடு ஆசிரியர்களும் அழுது ஆர்ப்பரித்தனர்.........

ஏனெனில் வழமைக்கு மாறாக இம்முறை ஐந்து நடுவர்கள் (வழமையில் மூன்று)....
திரு,தண்டா என்பவரே தலைமை வகித்தவர் அனைத்து நிகழ்வுகளுக்கும் ...
அவரே வாய்விட்டு சொல்லிவிட்டாரு உண்மையில் தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்துக்கே முதலிடம் ஆனா சேனையூற்று (சரியா பெயர் ஞாபக மில்ல) மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலைமையில் இருக்கிறார்கள் அவர்களையும் தட்டி எழுப்பவே அவர்களுக்கு கொடுத்தோம்... தயவு செய்து மன்னியுங்கள் மனித உரிமை அமைப்புகளுக்கு போக வேண்டாம் ...என்று ஆறுதல் சொல்லி நம்ம பிள்ளைகளின் திறமைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் திட்டம் தீட்டிட்டாரு .....

இப்போ நம்ம பிள்ளைகள் வெறுப்புணர்வுகளுடன் ..... அடுத்த போட்டிக்கு போகக் கூட தெம்பில்லாமல் ...... இப்போ பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினூடாக முறைப்பாட்டு கடிதம் அனுப்பியுள்ளோம் ....பார்ப்போம் நல்லது நடக்குதா என்று.

ஏனெனில் தேசிய மட்டப் போட்டிகள் வழமையாக தலைநகரில் நடந்தால் அதற்கு கூட பணச் செலவைப் பற்றி யோசித்து இருக்கையில் இப்படி அநீதி அங்கேயும் நிகழ்ந்தால்(மற்றப் போட்டிகளுக்கும்) என்ற கிலேசத்துடன் எனது பாடசாலை ....
ஏதோ திறமைக்கு பரிசு கொடுங்கள். நமது மாணவர்களின் வளர்ச்சிக்கு உரமூட்டுங்கள்.
ஏழையின் சிரிப்பில் திறமையைக் காணுங்கள். அங்கே அவர்கள் வாழ்வுக்கு வித்திடுங்கள். எங்கு பிழை நடந்தாலும் சரியான பாதையைக் காட்டுங்கள். பெரியவர்களே!!! எமது பிள்ளைகளின் மனதில் காயங்களுக்கு இடம் கொடுக்காமல் ரணங்களுக்கு மருந்து கொடுங்கள். நாளைய தலைவர்கள் அவர்கள் முளையிலே கிள்ளி விடாதீர்கள்.
நீதி சொல்லும் நடுவர்களே ...!
நக்கீரர்களாகுங்கள் !!!
இருந்தாலும்
எமது மண்ணின் சொத்தான மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்
முன்னேறுங்கள் தடைகளை உடைத்து

11 comments:

siva application said...

excellent ramesh! i really appreciate this wonderful job.keep on & continue.......
ananthan anna.

ramesh said...

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்
தொடர்ந்து பாருங்கள் நம்ம ஊரவங்களுக்கும் சொல்லுங்கள்

Theepan said...

உங்கள் பாடசாலை மாணவர்களுக்கு முதலில் என் பாராட்டுகள் . பிள்ளைகளின் திறமைகள் இப்படியான செயல்களால் பின் தங்க கூடாது.அவர்களுக்கு உரிய வசதிகள் உரியவர்களால் செய்து தரப்பட வேண்டும் . உங்கள் ஆக்கதிக்கு நன்றி . ரமேஷ் ............

kannadi said...

Mmm very good
but
I thing you can disaminate to other in a better way and ask them to sugges that for the morel point of view to your viewer ok,,, otherwise the thing is very clear and appriciatable...da
keep it up, i really proud about this kind of well service you definitly will become one of the leader in future.....my blessess to you

ramesh said...

நன்றி ஜெயதீபன்
///பிள்ளைகளின் திறமைகள் இப்படியான செயல்களால் பின் தங்க கூடாது.அவர்களுக்கு உரிய வசதிகள் உரியவர்களால் செய்து தரப்பட வேண்டும்///

எமது மாணவர்களுக்காக பாடசாலை மேம்பாட்டு குழு சார்பில் நிதி திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம் எமது பாடசாலை பழைய மாணவர்கள் இதற்கு தங்களது பங்களிப்பை நல்குவார்கள் என்று எண்ணுகிறேன் .. ஏன் நீங்களும் உதவலாமே

ramesh said...

நன்றி கண்ணாடி (தணிகசீலன்)
உங்கட பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறோம்

♥ ₯₳₯ ♥ said...

முதலில் வாழ்த்துக்கள் தம்பி தங்கைகளே...உங்கள் பதிவுக்கும் குறைகளை வெளிக்கொணர்ந்தமைக்கும் நன்றி ரமேஷ்..

ramesh said...

///முதலில் வாழ்த்துக்கள் தம்பி தங்கைகளே...உங்கள் பதிவுக்கும் ///

நன்றி நண்பனே (பெயர கூறலாமோ தெரியல )

///குறைகளை வெளிக்கொணர்ந்தமைக்கும் ////
இது குறைகள் என்பதை விட
நம்ம பாடசாலையின்
ஏழ்மையின் வெளிப்பாடு
திறமையின் பெருமைப்பாடு

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்

suranuthan said...

First My congratulations to these children. But they should not give up their effort. Coming even to the 2nd place in the Provincial Level is a great achievement too. Because even some of the leading school fail to get a place in this level.

But a funny thing happen my school students. They got the first places in two events. But the teachers didn't allow the students to get the prize and brought them home. (I think they gave medal this time).

ramesh said...

First My congratulations to these children. But they should not give up their effort. Coming even to the 2nd place in the Provincial ///Level is a great achievement too. Because even some of the leading school fail to get a place in this level.///

Thanks da...its should be for my dear students.
this is a good achievement of our school and its a very good evidence to proof the talent of country side school.

///But a funny thing happen my school students. They got the first places in two events. But the teachers didn't allow the students to get the prize and brought them home.////
Give our congratulations to ur school students.
and ha haaaa
shuld b Gold medal.

Nemi said...

Thambi,
Every thing is good , good and very good. You are doing such a productice job. keep and move forward. we are with you and we are proud of you. Special thanks for your THEDAL. I thing searching or scanning are not suitable words to THEDAL

Sorry I don't know how write in tamil in this cage. I feel this is not a suitable languge to wish you from my heart, any how I am trying on it.

Thambi.
I am noticing some thing to improve to this quality.

You are following the Indian type language slang.That may be the influence of Indian magazine and cinema please come out from it we have long lasting tamil style or find new way on your own I think you can. My suggestion don’t immitate cinema people. keep your own way very soory to say that, Nammada oor paasiya eluthandaa thambi (Anpaaga), Sollurathukkum, Keekiiraraththukke oru santhosama irrikimada…

Keep definite departments of your article that is very useful to readers like me.

All that I said in the interest on you this not a comment actually it is my wish my wish also.

Anna
Nemi
from Kaluthavalai (UK)
nevinathan@gmail.com
Skype ID rajnemy

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு