காதலர்களே
உங்கள் மௌனத்தைக்
கலைத்துவிடுங்கள்
காதுகளைக்
கூர்மையாக்குங்கள்
நீயாகிய நான்
நானாகிய நீ என்று
உங்கள் உணர்வுகளை
உங்களுக்குள்ளே
புதைத்துக்கொள்ளுங்கள்
உங்களை
இடம்மாறித்
தடம் மாறாமல்
தேடிக்கொள்ளுங்கள்
உறவுகள் உணர்வுகளாக
உரிமைகள்
தனிமைகளாகட்டும்
உள்ளக் குமுறல்கள்
எடுத்துச் சொல்லப்படட்டும்
கள்ளம் கலையட்டும்
கலைந்த காதலும்
துளிர்விட்டுக்கொள்ளும்
காத்திருப்புக்கள்
காதலின்
கதவடைப்புக்கள்
காத்திருந்தால்
காதலின் நீளம்
அளந்துகொள்ளுங்கள்
விட்டுக்கொடுப்புக்கள்
உள்ளப் புரிந்துணர்வுகள்
கள்ளமில்லா வார்த்தைகள்
காதலின் கவிதைகள்
காலத்தை வென்றவை
வெள்ளை மனதை
இன்னும் வெளிச்சமாக்குங்கள்
காதல் ஒளிரட்டும்
காதலோடு ......
5 comments:
விட்டுக்கொடுப்புக்கள்
உள்ளப் புரிந்துணர்வுகள்
கள்ளமில்லா வார்த்தைகள்
காதலின் கவிதைகள்
காலத்தை வென்றவை
கஜன் உண்மைய சொன்னன் அவ்வளவுதான்
தாங்கள் கவிதை சாவடியாக உள்ளது..தங்களது பணி தொடர வாழ்த்துக்கள்..
நன்றி ஹரிகாலன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்
காதல் மொழி பேசி
காதலின் வழி முறைகளையும்
காதலின் விதிமுறைகளையும்
காதலின் வழியே சொன்ன விதம்
அபாரம்
வாழ்த்துக்கள்
Post a Comment