இப்போது மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையினால் மக்கள் நிலைகுலைந்திருக்கிறார்கள். அதீத மழைவீழ்ச்சியின் காரணமாக வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்கள் வீடுகளில் வாழமுடியாத நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு சற்று ஓய்ந்திருந்த நிலையிலும் இன்று அதிகாலை முதல் கடும் மழைவீழ்ச்சி காரணமாக மக்கள் ஓரளவு வீடுகளில் வாழ்ந்த மக்கள் கூட இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்குவதற்காக சென்றுகொண்டிருக்கின்றனர். இங்கு கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவுகிறது. தாங்கமுடியவில்லை. அழுகைதான் வருகிறது ஓரளவு சமாளிக்க முடிந்தவர்கள் கூட முடியாத நிலை. இதன்காரணமாக இவர்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுகின்றன. இது எமது கிராமம் மற்றும் அயல்கிராமங்களின் நிலை.(களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம்,மற்றும் குருக்கள்மடம்) இங்கயே இவ்வளவு என்றால் இதன் பன்மடங்கு வேதனையை எமது படுவான்கரை மக்கள் அனுபவித்துவருகிறார்கள். அவர்களுக்கும் எழுவான் கரையில் வசிப்பவர்களுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் அவசர உதவிகளை மேற்கொள்ளவேண்டும்.
இதற்கிடையில் எமது வலைப்பதிவர்கள் முன்னின்று மிக அவசரமாக நிவாரணப்பணிகளுக்காக பொருட்களை சேகரிக்கதொடங்கியுள்ளார்கள். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்யப்படும் மனிதாபிமான உதவியாக இச்செயற்பாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். வரவேற்கிறோம் தொடருங்கள். நன்றி சொல்லிக்கொண்டு ஒன்றுசேர்ந்து உதவியை செய்வோம். "எங்கெல்லாம் மனம் காயப்படுகிறதோ அங்கெல்லாம் மனம் பூக்கவேண்டும் நல்லுதவியாய்" என்பதே நமது இலக்கு என்று ஆரம்பித்திருக்கும் இந்த முயற்சிக்கு தங்களால் ஆன உதவிகளை நல்குங்கள்.
மேலதிக தகவலுக்கு இங்கு செல்க. வதீஸின்கிறுக்கல்கள்:பதிவர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்
இதற்காக தற்போது எமது பிரதேச முகாம்களின் மக்கள் விபரம்
மொத்தக்குடும்ங்களின் எண்ணிக்கை (மொ.கு.எ),சனத்தொகை -(ச.தொ)
குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயம் :- மொ.கு.எ- 85 + ச.தொ- 305
செட்டிபாளையம் மகாவித்தியாலயம்:- மொ.கு.எ- 295 + ச.தொ - 1158.
மாங்காடு சரஸ்வதி வித் - மெ.கு.எ- 131 + ச.தொ -495
தேற்றாத்தீவு மகாவித் - மொ.கு.எ- 123 + ச.தொ - 439
தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயம் - மொ.கு.எ- 193 + ச.தொ - 709
களுதாவளை மகா வித் - மொ.கு.எ- 255
களுதாவளை புலவர்மணி வித்- மொ.கு.எ - 205
களுதாவளை இராமகிருஷ்ண வித் -மொ.கு.எ- 170
களுதாவளை விபுலாநந்தா வித் - மொ.கு.எ - 156
களுதாவளை கணேச வித் - மொ.கு.எ- 48
இத்தகவல்கள் இன்று காலை பதிவாகியது ஆனாலும் இன்னுமின்னும் மக்கள் முகாம்களுக்கு சென்றவண்ணம் இருக்கிறார்கள். இப்பொழுதும் அடைமழை தொடர்கிறது.
மற்றயது நீங்கள் வழங்கக்கூடிய பொருட்களில் இவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கோ சேகரிக்கும் போது:
ஆடைகள்,
பால்மா,
பிஸ்கட்,
நூடுல்ஸ் போன்ற உலர்உணவுப்பொருட்கள்,
அடைக்கப்பட்ட தண்ணீர்ப்போத்தல்கள்
அத்தோடு பல்துலக்கி, பற்பசை
ஜீவனி
தொற்றுநீக்கிகள்
மேலும் கடும் காற்றோடு நிலவும் காலநிலையினால் தூவாணம் அதாவது தூறல்கள் தடுப்பதற்கு பொலுத்தீன்களும், நுளம்புப்பெருக்கம் அதிகமாக இருப்பதால் நுளம்புவலைகள், மெழுகுதிரி மற்றும் ஹரிக்கன் விளக்குகள் தேவையாகிறது. காரணம் அடிக்கடி மின்துண்டிக்கப்படுவதனால்..
நான் இன்று MOH அவர்களுடன் கலந்துரையாடினேன். அவர் பால்மா வழங்கும் போது பாலூட்டும் தாய்மாருக்கு வழங்கும் போது அவர்கள் பாலூட்டுவதை நிறுத்திக்கொண்டு புட்டிப்பால் கொடுக்கும் முறைக்கு தள்ளப்படுகிறார்கள் அதனால் ஆறுமாத குழந்தைகளுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குரிய பொருட்களை சேகரித்தல் சிறந்தது எனவும் மருந்துப்பொருட்களை நேரடியாக MOH அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கொடுக்கும்படி நேற்றைய அனர்த்தம் சம்பந்தமான கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக தெளிவாக சொன்னார்.
எமது பிரதேச வைத்தியர் Dr.S.ராஜேந்திரன் MOH, Kaluwanchidy. ஆனாலும் நடமாடும் அவசரசேவை படுவான்கரை பிரதேசத்திற்கு அவசியப்டுவதாகவும் சொன்னார்.
தற்போது கிடைத்த பிந்திய தகவல் எமது கிராமத்தின் வாவியின் நீர்மட்டம் அதிகரிப்பதாலும் வடிந்தோடும் நீரின் அளவு கூடிக்கொள்வதாலும் எமது பிரதான வீதிக்கு மேற்கே இருக்கும் வீடுகளில் நீர் வீடுகளுக்குள் ஊடுருவிக்கொண்டிருக்கிறது.
இது எமது தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் தங்கியுள்ள குடும்பங்கள் மற்றும் இன்றைய படங்கள்
Wednesday, January 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
MMMM...இப்போது மழை நிலவரம் எப்படி இருக்கிறது சகோதரா...??
கடும் மழை கடும் குளிர். வெள்ளமாக இருக்குது நண்பா
நான் வெளியில் நிலைமையை மேலும் அவதானித்து வந்து தொடர்கிறன்
என்ன ஒரு அவலம்
இயற்கையின் சோதனை
மன்டேக்கால போகுது ரமேஷ்
கிரான் பக்கம் எப்படி நிலவரம், புலிபஞ்சககல்,குடும்பிமலை , வடமுனை பக்கம்.ஊத்துச்சேனை
இலங்கையில் இருந்திருந்தால் மடக்களப்புக்கு வந்து அவசரகால அனர்த்த உதவிகள் செய்திருக்கலாம் புலம்பெயர்ந்ததால் என செய்ற எண்டு தெரியாம இருக்கு
அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்க வேண்டும்.
Post a Comment