Pages

Tuesday, January 4, 2011

நூதனமாய்....

காற்றின் ஓரங்களிலும்
காதுகொடுக்கிறேன்

கடினமான பொழுதுகளையும்
நனைத்துவிட்டு போகும்
அந்த
நுண்ணிய பார்வையை
இழந்துவிட விரும்பவில்லை

அந்த சோகத்தில்
நுழைகின்ற வெப்பத்தில்
எழுகின்ற
'புன்னகை'
மறக்கவே மாட்டேனென்று
அடம்பிடித்துக்கொள்ளும்

நானும் பட்டுவிடக்கூடாதென்று
ஒதுக்கி ஒருக்கணித்து முட்டாமல்
செல்ல நினைக்கும் முன்னே
உன் உரசல்களில்
சிக்கிய விரல்களும்
சிக்கியெடுத்த மனசும்
பத்திரப்படுத்திக்கொள்கிறேன்
எங்காவது
ஆவணப்படுத்தலாமா என

இன்னும் தோள் தடவிய
நெற்றியும்
ரீசேட்டில் ஒட்டிய
ஸ்டிக்கர் பொட்டும்

ஒவ்வொன்றும்
வந்துகொண்டன
ஒவ்வொன்றாய்

ஒரு தடவையேனும்
வராமல் போய்விடாதே!!
பல்வேறாகிடுவேன்..

சந்தித்துக்கொண்ட இடத்தில்
விட்டுவிட்டுச் செல்கிறேன்
துணிச்சலாய்
எடுத்துக்கொண்டு சென்றுவிடு
மறுபடி கொடுக்கவேண்டுமென்று
எண்ணிக்கொள்ளாதே


(படக்கலவை - By Manivarma Ko இலிருந்து படம் நன்றி மணி அண்ண)

8 comments:

S.T.Seelan (S.Thanigaseelan) said...

//சந்தித்துக்கொண்ட இடத்தில்
விட்டுவிட்டுச் செல்கிறேன்// ஆனால் துணிச்சலில்லாமல் என்று இட்டால் நன்றப்பா..

Good

Jana said...

//உன் உரசல்களில்
சிக்கிய விரல்களும்
சிக்கியெடுத்த மனசும்
பத்திரப்படுத்திக்கொள்கிறேன்
எங்காவது
ஆவணப்படுத்தலாமா என//

வாறே வாவ்... இலகித்து நின்ற இடம் இது...
படம் அதுவே ஒரு கவிதைதான்.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஉன் உரசல்களில்
சிக்கிய விரல்களும்
சிக்கியெடுத்த மனசும்
பத்திரப்படுத்திக்கொள்கிறேன்ஃஃஃஃ

ஆஹா அருமை...2 மனதை தொட்டுட்டிங்க (ஒன்று என்னோடது மற்றது ---- ) ஹ..ஹ..

Chitra said...

அருமை.... இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!

ஹேமா said...

றமேஸ....காதலுக்கு இந்தத் துணிச்சல் வேணும் நூதனமாய் விட்டுச் செல்லுதலும் எடுத்தலுமான துணிச்சல்.அழகு !

sinmajan said...

அருமையான வரிகள்.ரசித்தேன்.

தர்ஷன் said...

//பத்திரப்படுத்திக்கொள்கிறேன்
எங்காவது
ஆவணப்படுத்தலாமா என//

அழகு

Ramesh said...

@@ நன்றி சீலண்ணா

@@ நன்றி ஜனா அண்ணா

@@ நன்றி சுதா

@@ நன்றி சித்ரா

@@ நன்றி ஹேமா

@@ நன்றி சின்மயன்

@@ நன்றி தர்ஷன்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு