Pages

Saturday, January 1, 2011

நீ வேண்டும்

உன் வருகை

கூடுது
அனுபவமும்
வயதும்

நீ வரவேண்டும்
நான்
பக்குவப்படவேண்டும்

நேற்று
'கடந்த'
என்றாகி விட்டது

நீ தான்
பிரசவித்திருக்கிறாய்
புதிய ஆண்டாய்

சந்தோசம்
நாம்
காணவேண்டும்

இனிப்பாக
வாழ்வை
மாற்ற வேண்டும்

அனுபவிக்க
அவ்வப்போது
சோகத்தையும்
தந்துவிடு
இல்லையேல்
வாழ்க்கை
வாழப்படாமல்
போய்விடும்
வெறுமையாய்

நீ வேண்டும்
புதுமையாய்
தமிழாய்

இணைந்திடுவோம்
இயைந்திடுவோம்

நாமும்
மற்றவர்களுடன்
'வாழ்க்கை'
எழுதிடுவோம்

நீ வேண்டும்
சாரல்
மழை
எல்லாம்
மனதில் ஆகட்டும்
மகிழ்ச்சியில்

இனிதான
புத்தாண்டு வாழ்த்துக்கள்

10 comments:

Bavan said...

இந்த ஆண்டின் முதல் பதிவுக்கு எனக்குத்தான் சுடுசோறு..:P

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே..:)

Ramesh said...

Bavan said...
நன்றி பவன்
உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்

யோ வொய்ஸ் (யோகா) said...

வருடத்தின் முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள்.

இனிய புது வருட வாழ்த்துக்கள்

Ramesh said...

@@யோ வொய்ஸ் (யோகா) said...
நன்றி யோகா

Sai-Moulees-Ramaki said...

நன்றி
உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்

Sai-Moulees-Ramaki said...

நன்றி உங்களுக்கும் புதுவருட வாழ்த்துக்கள்

Kandumany Veluppillai Rudra said...

இன்பம் தொடர! இதயம் குளிர!
துன்பம் தொலைய! தொல்லைகள் மறைய!
நண்பர்கள் வாழ்த்த! நானிலம் போற்ற!
இனிய இந்த வருடம்! இன்பம் இன்னும் சேர்க்கட்டும்!
என்றும்வல்ல இறைவன், இணைந்து இறை பாலிக்கட்டும்.

ஹேமா said...

றமேஸ்....உங்கள் நல்ல மனசுக்கு நம்மவர் வாழ்வில் நல்லதே நடக்கும்.நம்புவோம்.இனிதாய் மகிழ்ச்சியாய் வரட்டும் 2011.

Ramesh said...

@@நன்றி சாய் மெளலி

Ramesh said...

@@நன்றி ஹேமா.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு