கண்கள் விழித்துக்கொண்டு
இரவுகளாய்
கனவுகள் நெய்யப்பட்டு
பகல்களாய்
உயிர்கள் தொலைக்கப்பட்டு
அலைகளாய்
நீண்டுகொண்ட
இழப்புக்கள்
நெரிசல்களில்
சிக்கிக்கொண்ட
உணர்வு
கேள்விக்காகவா
செய்திக்காகவா
படங்காட்டுவதற்கா
பாமரன்
ஆனதற்காகவா
தலையெல்லாம்
வால் ஆனதா
தசையாட தான்
ஆடாதோ
சதை விட்டு
நகம்
தனியாக முளைக்குதோ..?
தமிழ்
உயிர்
மூன்றெழுத்து வரிசையில்
உடல் பிரிந்தனவோ
ஊமைகளின் பேர்வழியாய்
ஊமையாய்
நானும்
8 comments:
கரைக்கு வெளியிலும் கரைக்குள்ளும் அகப்படுவது தமிழ் உயிர்கள்தானே !
ஊமைகளின் பேர்வழியாய்
ஊமையாய்
நானும்
.......நானும். :-(
:(
:|
வலிகள் சுமந்த வரிகள்!
உயிர்கள் தொலைக்கப்பட்டு
அலைகளாய்//
வார்த்தைகளால் வலிகளுக்குச் சாமரம் வீசுவது போன்ற கவிதை. பல உணர்வுகளை மறைமுகமாகப் பேசிச் செல்கிறது.
தமிழ்
உயிர்
மூன்றெழுத்து வரிசையில்
உடல் பிரிந்தனவோ//
கேள்விகளை நாங்கள் எங்களை நோக்கிக் கேட்டு பதில் தெரிந்தும் எம் தலை மீது இதற்கும் நாம் தான் காரணம் என குட்ட வேணும் போன்ற உணர்வினைக் கவிதை தருகிறது.
நீண்டுகொண்ட
இழப்புக்கள்
நெரிசல்களில்
சிக்கிக்கொண்ட
உணர்வு...
அனைவருக்கும் நன்றி
Post a Comment