Pages

Saturday, January 29, 2011

இது ஸ்டேடஸ் -10

நான் சிங்கிள் சேர்க்கிளுக்குள்(single circle) இருப்பதை வெறுக்கிறேன்
சிங்கிளா(single) இருந்தாலும் சிக்கலில்லாமல் ஓப்பினாகவே(open) இருப்பதை நேசிக்கிறேன்."

"தமிழ் தமிழாகும் அதை வளர்க்க முடியுமா என்கிற கேள்வி உளதே.
ஆனாலும் காப்பாற்றலாம் அருகிவரும் மொழியானால்.
ஆயினும் தமிழில் விழுந்து தமிழாக இன்னுமின்னும் இருக்கிறது..
நமது தேடல் தமிழில் இன்னும் வளர்கவே..
நாம் வளராலாம் தமிழ் தமிழாய் இருக்கும்"

"ஆயிரமாயிரம் கனவுகளை தேக்கிவைத்திருக்கிறேன். அதில் ஒன்றுகூட என்னுடையதாக இல்லை என்பது வருத்தமா இல்லை சந்தோசமா ?
எதுவானாலும் இது கனவு காணும் வாழ்க்கை"

"ஒவ்வொரு உழைப்புக்கும் வெற்றி இருக்கும்.
வெற்றிக்காக உழைப்பதை விட உழைத்ததற்காக வெற்றி கிடைப்பது மகிழ்ச்சி. ஆசிர்வாதங்களும் அவ்வாறே."

"ஒவ்வொன்றாய் பல்வேறாய் ஆனவைகளை இன்று
ஒன்றாய் தமிழாய் ஆனோம் வெற்றி மகிழ்ச்சி.
எமது பிள்ளைகளுக்கும் கிராமத்துக்கும் பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைத்தது பெருதுவைக்கவைத்தது... நன்றி அனைவருக்கும்""

"இரு நோக்கம், ஒரு நோக்கத்தினால் இன்னொரு நோக்கம் வெற்றிபெறலாம். இல்லையேல் இருநோக்கமும் பெருவெற்றியைத் தரலாம்"

"நானும் மருகளுமாய் குதூகலமாய் குழந்தையாய் மழலையில்.........முன்னங்கை ஊன்றி பின்னங்கால் தள்ளுகையுடன்
பழக பழக உன் முன்னேற்றம்...தவழுதல். இருகை சப்பாணியுடன் இதயத்தை நெருக்கல்களுடன் உன் புன்னகை"

"என்னவேணும் என்று கேட்டால் நான்
என்ன சொல்ல என்றே தெரியாமல்
ஏனென்று அறியாமல் என்னசெய்வதென்று புரியாமல்... அவஸ்த்தை"

"ஒவ்வொரு துயரத்தின் போது பல நட்புகளின் ஆழங்களை மீட்டுப்பார்க்க முடியும். இதுவல்லோ உறவு என்று எண்ணத்தோன்றும்."

"கொஞ்சம் மழை, சிலநேரம் வெயில், இருள் சூழ்ந்த மேகம், தூறல் மழை, வெள்ளம் இல்லை......... இது ஒரு மழைக்காலம்."

"மட்டக்களப்பு தேற்றாத்தீவு, செட்டிபாளையம் மாங்காடு பிரதேசங்களில் கடல் வருவதாக மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆனால் கடற்கரையில் அப்படி இல்லை. கடல் சற்றுக்கொந்தளிப்பாக இருக்கிறது."

"பல நாட்கள் பெய்த மழைக்கு ஒரு நாள் வெயிலேபோதும் போல இருக்கு.. வெள்ளம் வடிந்துகொண்டிருக்கிறது. வெயில் குளிக்கிறோம்."

"நேற்றிரவு சற்று ஓய்ந்திருந்த மழை அதிகாலை முதல் தொடர்ச்சியான கடும் மழை மட்டக்களப்பு தேற்றாத்தீவு தகவல்"

"ஓஓ.... ஊரிலும் பக்கத்துக் கிராமங்களிலும் தொடர்ச்சியான வெள்ளத்தினால் அனேக வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம். உறவினர்கள் சிலரது வீடுகள் நீரில் மூழ்கியிருப்பதாகவும் கதிரைகள் மேசைகளின் மீது இருப்பதாகவும் தொலைபேசியில் சொல்லிக்கொள்கிறார்கள்... இப்பொழுதும் அடைமழை. தாக்கம் அதிகமாக இருக்குகிறது"

"உனக்கான என் பிராத்தனைகள் உன்னுடலுளவுறுதியைக் கூட்டி வெற்றிகாணச் சென்றிருக்கு. நீ என்றும் வேண்டும் நான் உன்னோடு..:)"

"வெள்ள நிலைமை அதிகரிக்கிறது. தண்ணீர் வற்றுவதற்கும் முடிவில்லை. கடலில் சேர்வதற்கும் வழியில்லை. வடிகான்கள் இல்லை. இருந்தாலும் தாங்காது. மழை விடுவதாயும் இல்லை... வீடுகள் நிறையும் வெள்ளம்...."

"எரிச்சல் , வெறுப்பு, ஈரம், வெள்ளம், ஐயோ போதும், மழையே விலகிவிடு கொஞ்சம் சூரியனுக்கும் இடம் கொடு."

"உனக்கு அன்பு கிடைக்கவேண்டுமெனில் முதலில் நீ அன்பு செய்.
கொடுத்தால் தானே கிடைக்கும்."

"படித்தேன் காலையில். பழக்கதோசம் விடுதில்ல. புதுவருசம் எண்டா கோயிலுக்குபோக வேணுமே. போகிறேன். நம்பிக்கைகளை தேக்கி. என்னை வெளிச்சப்படுத்தி"

"மழைத்துவிட்டுப்போகிறது.. நனைந்துகொண்டது மனம்... நிரம்பிவழியுது மணல்.. வடிகான்கள் உயரத்தில்..."

"அடைமழையில்... உந்துருளிப்பயணம்...மழைச்சட்டையுடன்.... தொப்பட்டம்... அற்புதம்....
நனைதல்
குளிர்தல்
மழைதல்"

நிகழ்வு ஒன்றின் கிராமியப்பாடல் இசைக்கும் இசைவான்கள்


6 comments:

Jana said...

//நான் சிங்கிள் சேர்க்கிளுக்குள்(single circle) இருப்பதை வெறுக்கிறேன்
சிங்கிளா(single) இருந்தாலும் சிக்கலில்லாமல் ஓப்பினாகவே(open) இருப்பதை நேசிக்கிறேன்."//


சிதறல்களின் ஸ்ரேட்டஸ்களுக்கு எப்போதும் நான் இரசிகன்.
இந்த ஸ்ரேட்டஸ் மிக யதார்த்தமானது.

ஹேமா said...

போதும் போதும் என்ற மழையின் தாக்கம்.அருமையான உணர்வுகள் றமேஸ் !

Ramesh said...

@@நன்றி கருண்
@@நன்றி ஜனா அண்ண
@@நன்றி ஹேமா

நிரூபன் said...

"ஆயிரமாயிரம் கனவுகளை தேக்கிவைத்திருக்கிறேன். அதில் ஒன்றுகூட என்னுடையதாக இல்லை என்பது வருத்தமா இல்லை சந்தோசமா ?
எதுவானாலும் இது கனவு காணும் வாழ்க்கை"/

முதன் முதலாக உங்கள் வலைப் பதிவை பார்த்தேன். கிராமிய மணங் கமழும் அற்புதச் சித்திரமாய் இருக்கிறது. ஸ்டேட்டஸ் என்று சொல்வதை விட உங்களின் தத்துவம் என்றே சொல்லலாம். எழுத்தின் ஒவ்வோர் வரிகளிலும் அனுபவம் முதிர்ந்த ஒரு எழுத்தாளனைப் பார்ப்பதை உணர்கிறேன், ஆனாலும் நீங்கள் வயதில் இளையவராக இருந்து, வார்த்தைகளில் என்னை கட்டிப் போடுவதாகவே தோன்றுகிறது.

வாழ்த்துக்களுடன் நிரூபன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பரே இன்றுதான் உங்கள் வலைப்பூவுக்கு முதல் தடவையாக வருகிறேன்! நேற்று நண்பர் ஜனாவின் வலைப்பூவில் ' இந்த வாரப் பதிவராக ' நீங்க அறிமுகப்படுத்தப்பட்டிருந்தீர்கள்! அதன் மூலமாகத்தான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்! இன்டிலியிலும் உங்களைத் தொடருகிறேன்! என்னுடன் நட்புக்கு அன்புடன் அழைக்கிறேன்!

Ramesh said...

@@ நன்றி நிரூபன்
@@ நன்றி றஜீவன்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு