அபியும் அஷ்வினும் -01 இங்குபோய் முதல்காண்க
அன்றைய இரவுப்பொழுது அஷ்வினுக்கு மட்டும் இன்பப் பொழுதாகவே இருந்தது. அவனை அவனுக்கே நம்பமுடியாமல் இருந்தது. நானா இப்படி.. காதல் யாரைத் தான் விட்டுவைத்தது என்று புலம்பிக்கொண்டு நித்திரையில் அவன் என்னென்னவோ கற்பனையில் ஆழ்ந்தான்..
கடந்தவாரத்துக்கு முதல்வாரம் தான் இருக்கும், தியேட்டரில் ஆயுத எழுத்து படத்தைப் பார்த்துவிட்டு மாதவன் கெட்டப்பில் முடிவெட்டி சிக்கெரட் ஊதிக்கொண்டு அரவிந்திடம் வந்து "ஐம்பது மில்லிலீட்டர் வைனுக்கு ஆசைப்பட்டு வைன்சொப்பையே விலைக்கு வாங்ககூடாது" என்று நண்பனிடம் சொன்ன அந்த டயலொக்கையும் சொல்லும்போதுதான் அப்படியொரு சீன் வந்துபோனதை அரவிந்த் ஞாபகப்படுத்திக்கொண்டான். இப்படியாக காதலை தொலைதூரக் கண்ணால் பார்த்தவனுக்கு யாரால் காதல் இனிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிய அரவிந் மனது துடித்தது. மற்றவரின் காதல் உணர்வுகளை யார் யாயாரொடு காதல் கொள்கிறார்கள் என்பதை அறிவதில் ஒவ்வொருவருக்கும் விரைவான உணர்வு இருக்கத்தான் செய்யும். அரவிந் மட்டும் வித்தியாசமானவனா??? இரவுப்பொழுது இவனுக்கு தேவையில்லாமல் நகர்ந்தது.
அத்தனை ஸ்பரிசங்களையும் சொல்லிக்கொண்டு அந்த இலைகளின் நுனிகளில் ஐஸ்கட்டியாய் இருந்த பனித்துளியைக் கரைத்து தனது ஒளிக்கீற்று விரல்களால் துவம்சம் செய்துகொண்டு வந்த சூரியனைக் கண்டதும் "ஓ.. விடிந்துட்டுது.. நேரமாகிட்டு வெளிக்கிடணுமே." என்று விரைவாக்கிய காலைக்கடனும் விரிவுரைகளுக்கு காலைச்சாப்பாடையும் அடுத்த மணித்தியாலத்துக்கு ஒதுக்கிக்கொண்டு வெளிக்கிட்ட அஷ்வினுக்காக சைக்கிளை ஓட்டுவதற்கு காத்திருந்தான் அரவிந். அவன் வழமையாக அவ்வளவு நேரம் காத்திருக்கமாட்டான். ஆனால் இன்று அஷ்வினின் காதலியா கனவுக்காதலியா என்பதை அவனுக்கு காட்டும் நாள் அல்லவா. நண்பனின் வருகை." டேய் கெதியா வாடா" (கெதியா- விரைவா). "நாம மட்டுந்தான் லேட்" என்று சொல்லி இருவரும் விரிவுரைகளுக்கு செல்ல...
அதுகாலும் எதுவும் பேசாக ஊமையாய் இருவரும் அந்தக் காதலைப்பற்றி.
அவளைப்பார்த்த அந்தக்கணத்தில் அவள் பார்த்து திரும்பிய அந்த பார்வையில் சிக்கலில் சிக்கிய இவர்களா? இவர்கள் இருவருமா அழுகிய பழத்தில் துடிக்கும் புழுக்கள்,,? இன்னும் அந்த சந்தேகம். "அவளை இவன். இல்லை. ஆனா ஏன் அப்படியொரு பார்வை? இதன் விஷமம் என்ன?" அரவிந்துக்கு அந்தப் பாடம் விளங்காமலே முடிவுற்றது.
அந்த கேள்வியை அவிழ்க முற்பட்டபோது " அஷ்வின் நீ புதுசா போன் வாங்கினா நம்பரை சொல்லமாட்டியா எனக்கு? எங்கெட்டெல்லாம் தரமாட்ட.. ம்ம்ம்.. " என்று அபிவர்ணா சொல்ல.
"இல்ல அபி நேற்றுத் தானே வாங்கினேன். இண்டைக்குத்தானே தரணும். அதான் கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் மிஸ்ட் கோல் எடுக்கிறேன்" என்று தொடர்பை தொலைபேசியின் வழியே ஆரம்பிக்க.
அரவிந்துக்கு அடேய் போன் வாங்கி மூன்று நாளாச்சு இப்படி உல்டாவுட்டு ஆரம்பிக்கிறானே.. ஆனாலும் அபி ஏற்கனவே யாரோ தனது சொந்த மச்சான் பிரவீனைக் கல்யாணம் பண்ணப்போவதாயும் அவனுக்கும் இவளுக்கும் ஏற்கனவே நிச்சயம் பண்ணியாச்சு எண்டு சொன்னது எல்லோருக்கும் தெரியுமே. "ஏன் அவள் இவன். ஒரே குழப்பமா இருக்கே"..
இதெப்படி சரியாகும். அது ஊர் அறிந்த விடயம். பிரவீனும் அடிக்கடி ஹோஸ்டலுக்கு வந்து அவளைச் சந்திப்பான். இதுக்குள்ள இவன் ஏன் இவளுடன்...
"அரவிந், அபி போன் பண்ணுறாள்" என்று பின்னேரம் அரவிந்தோட கதைச்சுக் கொண்டிருக்கும்போது சற்று விலகி ஓடினான் அஷ்வின் அபியோட கதைக்க.
" அஷ்வின் எப்படி இருக்க. ஏன் இண்டைக்கு ஒருமாதிரியா இருந்த. இஞ்சே இனிமேல் நீ குடிக்கிற கொறைச்சிடு. அப்பதான் பிறகு நீ குடியைவிடுறத்து லேசா இருக்கும். சரியா? "
"ம்ம்.. பிறகு சொல்லு... நீ சொன்ன பிறகு இப்ப குடிக்கிற சரியான குறைவு அபி. விட்டாச்சு எல்லாத்தையும் விடணும்."
என்றெல்லாம் என்னனவோ கதைச்ச பிறகும் அஷ்வினுக்குள்ள அந்த கேள்வி ஏன் இவள் இப்படி நெருக்கமாகிறாள். உண்மையில் என்னைக் காதலிக்கிறாளா. இல்லை காதலிப்பதாய் நடிக்கிறாளா? இவளுக்கு ஏற்கனவே நிச்சயம் பண்ணினவன் இருக்கும்போது என்னுடன் ஏன் இந்த .... பரிதாபம்.?? இல்ல.. அன்பு.. இது காதலா.. நட்பா??? என்று தடுமாறிய அவனுக்கு அவள்மேல் ஒரு ஈர்ப்பு என்னவென்று சொல்லமுடியாத அந்த "அது"...
அவனுக்குள் எத்தனை மாற்றம். மொடலான ரீசேட்,முடிவெட்டி சேவ் பண்ணி,செல்போன், குறுச்செய்தியாய் கவிதைகள், படிக்கணும் அவளுக்காக, சிக்கெரெட் விடணும் அவளுக்காக....அத்தனையும் அவளால்.
அவளேதான் அந்த சிறகுகளை தந்தாள். எல்லாம் மாற்றம். காதலில் தீர்ப்புகளா இவை. இந்த அவள் செய்த அந்த இனம்புரியாத அன்பு, கரிசனம், இதற்கு யாரைக்கேட்பேன். அவளே சொல்லித் தொலைக்கட்டும்.
அவள் இல்லாமல் இனி......வேண்டாம். அவள் ஸ்பரிசம் உள்ளத்தை இனிப்பாக்கும். அவள் பேச்சினால் கொள்ளை கொள்ளளட்டும். அவளுக்காக எல்லாம் மாறட்டும். என்றென்று அவனுக்குள் உருவான அந்த எண்ண அலைகளை கட்டுப்படுத்துவது கஸ்டமாகவே தெரிந்தது.
அந்தநேரத்திலும் வானொலியைத் திறக்க அவனுக்கென்றேதான் ஒலிக்க ஆரம்பித்தது
"புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி பருகுதே"
என்று ஆரம்பிக்கும் அந்த பாடல்..
என்னைக் கொஞ்சம் மாற்றி...
Thursday, April 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஹாய் பாஸ்,உங்களை என் பதிவில் விட்டு விட்டேன்,
ம்ம் அறிமுகம் நன்றி...
முதல் தடவை உங்கள் பக்கம்..மனிச்சூ...இனி தினம் வருவேன்...
Post a Comment