"எல்லாரையும் சுற்றி ஏதோ ஓர் அரசியல்
ஏதோ ஒரு வகையில் அரசியலைச் சுற்றி எல்லாரும்""எவ்வளவு இன்பங்களை அனுபவிக்க முடியுமோ அனுபவிக்கிறேன் கிராமத்தின் சிறப்பே இதுதான் .கண்ணகி அம்மன் கோயிலில் நாங்கள்"
"ஒவ்வொரு பாதிப்புக்களிலேதான் தாக்கங்களும் மனக்கஸ்டங்களும் வரும்.ஏன் சந்தோசமும் கூட. அது மாற்றமா தடுமாற்றமா என்பது புரியமறுக்கும்."
"மட்டக்களப்பு செட்டியூர் கண்ணகை அம்மன் சந்நிதிதன்னில் நமது அண்ணன்மார் மீண்டும் ஒரு இறுவட்டு வெளியிட்டனர் "அம்மன் காவியம்" என இன்று. இன்றைய கல்யாணக்கால் பூசையுடன் இனிய பொழுது அம்மன் நிகழ்வாய் எய்திய மகிழ்ச்சியும்..."
"என்னே வெயில்.. ஆஆஆஆ கண்ணைக்கட்டுதே.. வியர்வைகளால் உடல் நனையுதே.. ஆங்.. 35 டிக்கிறி செல்சியஸ்..."
"சொந்தத்தில் (சுயநலத்தில்) மற்றவர்களின் கண்களும் மனசும் குளிர்மை காணும் என்ற எண்ணம் மட்டுமே
குளிர்ந்தால் போதும் ஆறுதலடையும் மனம் ##புகைப்படங்களும் நானும்##"
"தாந்தாமலை முருகன் கோயிலுக்கு அம்மாவைக்கூட்டிக்கொண்டு சென்று மீண்டது மகிழ்ச்சி. எண்ணைக்காப்பு அம்மா வைத்தார்.."
"என்னை வாசிக்கும் வயலின்
நீ
உன் இசையின் முதல் ரசிகன்
நான்"
"உன் வாழ்க்கையின் நீள அகலங்களைத் தெரியாவிட்டாலும் ஆழ அன்புகளையும் ஆறிய காயங்களையும் அறிவேன்.. பட்டதால்தான் உன்னைால் மற்றவர்(வை)களையும் தடவிக்கொள்ள முடிகிறது.."
"உனக்குள் உருவாக உருவாக்க எண்ணாத அளவுக்கு இல்லாத அந்த உந்தன் பல்புலமை இருந்தென்ன லாபம்."
"தமிழில் 'வணக்கம்' என்றே வரும். காலை மாலை மதிவ வணக்கம் மற்றும் வணக்கங்கள் தமிழில் இந்த (தனியார்)வானொலிகளின் சேர்க்கைகளினால் வந்த வினை. ஆக தமிழில் சொல்லும் வணக்கம் நேரமோ காலமோ காட்டாது. இதனால் உலகில் எவரோடும் வணக்கம் என எந்நேரமும் சொல்லமுடியும். ஆனால் இந்த காலைவணக்கம் சொல்ல மற்றொருவருக்கு மாலைவணக்கம் சொல்லவேண்டி வரும். அதை விட தமிழுக்கே வணக்கம் சிறப்பாக அமைவதால் வணக்கமாக்குக.. .."
தமிழுக்கே ஆன சிறப்புக்களில் இதுவும் ஒன்று ஆக அந்த அந்த மொழிகளின் சிறப்புப் பதங்களை அவ்வாறே சொல்லல் அழகும் பெருமையும். ..."
"இருத்தல் என்பது மாறுதலுக்காக
மாறுதல் என்பது வளர்ச்சிக்காக
வளர்ச்சி என்பது நீ யாராக இருக்கிறாய் (படைப்புத்திறன்) என்பதற்காக
முடிவில்லாத வகையில் உன்னைப் படைத்துக்கொள்வது."
###டாக்டர். வால்டர் ஸ்டேபிளஸ்.. தமிழ்மொழிபெயர்ப்பு புத்தகம் வாசிப்பிலிருந்து...##
"எழுதப்படாத சொற்கள் போல எழுதப்படாத உணர்வுகளும் அதிகம்.
என்னுள்ளும் தேக்கத்தில் தான்"
"இருந்த போது இருந்த காதலைவிட இல்லாதபோதுதான் காதல் காதலிக்கப்படுகிறது.. இல்லையேல் அத்தனை காதல் வரலாறுகள் எழுதப்பட்டிருக்காது.."
"அத்தனை அரசியலுக்கும் உண்மையில் நடுவுநிலைமை சரிந்துவிடும் ...
அப்போதும் அரசியல், ரகசியமாக நடுவுநிலைமையை எடுத்துக்காட்டுவது அரசியல்"
"ஒவ்வொரு அங்குலமாக ஒரு சொட்டுக் குறைவில்லாமல் கிராமத்தை அனுபவிக்கிறேன்.
விட்டுப்பிரிந்தாலும் அதற்கும் சேர்த்து.."
இன்றைய படங்கள்
தாந்தாலை முருகன் கோயிலின் பிள்ளையார் கோயிலின் எண்ணைக்காப்பு படங்கள்..
3 comments:
அடடா.........! பேஸ்புக்கில போட்ட ஸ்ரேற்றசை வைத்தே பதிவொன்று போடுறாங்கப்பா!
சில கருத்துக்கள் அற்புதம். குறிப்பாக அரசியல் குறித்தவை.
//"எல்லாரையும் சுற்றி ஏதோ ஓர் அரசியல்
ஏதோ ஒரு வகையில் அரசியலைச் சுற்றி எல்லாரும்"//
சுப்பர் அண்ணே!!!!
படங்களும் அருமை பதிவும் அருமை. அம்மாவையும் பார்த்தேன்.
மிக்க நன்றி தம்பி
Post a Comment