இந்தப்பதிவுதான் நம்மட 100 வது பதிவு அதான் வெற்றிப்பதிவு...
சிதறலின் கதை.....
பதிவு பற்றி எப்பவோ ஒரு PC Times புத்தகத்துல படிச்சிருக்கன் அப்போ அதுபற்றி பெரிதா அலட்டிக்கவில்லை. இணையம் என்பது நமக்கு இடைஞ்சலாக இருந்ததால். ஆனாலும் ஊர் விடயங்கள் நிகழ்வுகள் என்பன இணயத்தரவேற்றம் செய்யப்பட வேண்டுமென்ற அவா மனசுக்குள்ள எப்போதும் இருந்தது. பிறகு இதுபற்றி நம்மட நண்பி தானும் தனது அண்ணாவும் பதிவெழுதுவதாகவும் தனது அண்ணா பல பதிவெழுதுவதாகவும் சொல்லி தனது "ஜே பக்கங்கள்" என்ற பதிவின் சுட்டியை எனக்கு அனுப்பிருந்தாள். பிறகு தான் தெரிந்தது இந்தப்பதிவுலகம் உடனேயே யூ ரியுப்பில எவ்வாறு ஆரம்பிப்பது என்று பார்த்திட்டு ஆரம்பித்தேன் முதல் பதிவு என்வீட்டு முகப்பு படம் பின் எனது கவிதை
"தாலாட்டின் இசைச்சிற்பி என்தாய்"
பத்து திங்கள் உன் கருவில்
ஊன்றியதால்தான் இந்த
பிள்ளைத்தாவரம் பூமியில்
காலூன்றியது - இருந்தாலும்
உன் அன்புச்
சூரியகதிர்களால் தான்
இன்னமும்
"வாழ்க்கைச் சேர்க்கை " செய்கிறது
அம்மா ........
என்று முதல்பதிவு கவிதையில் அம்மாவுக்கு சமர்ப்பணமாக.. தொடர்ந்து டெம்பலேட்டுக்களை மாற்றுவது பற்றியும் நண்பியே சொல்ல எனது வலைப்பதிவை அழகுபடுத்தக்(...?) கற்றுக்கொண்டு அதன் அழகு பற்றி எனது மற்றொரு நண்பன் "Wall papers" என்று அழகிய படங்களுக்காக தனது பதிவை வெளியிடும் ஜெயதீபனை அடிக்கடி தொல்லைகொடுத்து எப்படி இருக்குடா கொமண்ட் பண்ணு எண்டு மிகவும் கஸ்ட்ப்பட்டு தொல்லையிலும் இந்தப்பதிவு வளர ஆரம்பத்தில் நம்ம தம்பியானவர் சுரேனும் "இப்படி மாத்துங்க அப்படி எழுதுங்க.." எண்டு சொல்லச்சொல்ல ஒருமாதிரியா உருப்பெற்றது இந்தச் சிதறல்கள்... ஆனா சில மாதங்கள் கடந்த பிற்பாடுதான் தெரிந்தது இன்னுமொரு சிதறல்கள் இருப்பது. ஆனாலும் எனுது பதிவின் பெயரை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை ஏனெனில் தற்செயலாகவும் அவசரமாகவும் பதிவொன்று ஆரம்பிக்கணும் என்ற முனைப்போடும் வந்த சிதறல்கள்... என்ற காரணத்தினால்..
சிதறலின் வெற்றி
சிதறல்களின் நோக்கமே நம்ம கிராமத்து விடயங்கள் இணையவலம் வரவேண்டும் என்பது இப்படி இருக்க கவிதையும் வெளியிடவேண்டும் ஏனெனில் பதிவு தொடர்ச்சியாக எழுதவேண்டும் என்பதால் நம்மளால முடிந்தளவு கவிதை மாதிரியாவது எழுதுகிறேன். இப்படி இருக்க நம்மட ஆரம்பப் பாடசாலையின் வேதனை கலந்த சாதனையை வறுமையும் திறமையும் + எனது பாடசாலை என்ற தலைப்பில் எழுதியதும் நம்மட ஊரைச்சேர்ந்த புலம்பெயர் நம்மவர்கள் ஒன்றுசேர்ந்து எமது பாடசாலைக்கு உதவுவதற்கு முன்வந்தமை எனது வலைப்பதிவின் முதல் வெற்றி. நன்றி நம்மவர்களே விரைவில் உங்களுக்காக கலைவிழா வந்து சேரும்.
கால்கோள் கவியரங்கில் "களரி"யின் பொங்கல் படையல்
பின்னர் எனது பதிவை பார்த்து கவியரங்குக்கு என்னும் அழைத்து அழுவதா சொல்.. என்ற தலைப்பில் தைப்பொங்கல் விழாவில் கவியரங்கில் போராசிரியர் சி.மெளனகுரு அவர்களின் பார்வையில் பட்டது சிதறலின் கவிதை வெற்றியே..
இதைவிட எனது பக்கத்து ஊர் சந்ரு போல் பல பதிவர்களை கடல்கடந்தும் பல பதிவர்களை நண்பர்களாக்க முடிந்ததும் அவர்களோடு அடிக்கடி அரட்டை அடிப்பதும்... (ஹிஹிஹி.. பங்குச்சந்தையும் கரவையின் ஓசையும்மனசுக்குள் சிரிக்குமே...ஹிஹிஹி....)
இதுவரை பல பதிவெழுதியதும் நம்ம ஊரு நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்தும் எழுத்து வடிவில் கொடுக்கும் போதும் நிம்மதியடைகிறேன் ( கொஞ்ச நாளைக்கு புகைப்படம் எடுக்கமுடியாது நம்ம கமெரா உடைஞ்சுட்டு ம்ம்்்ம்ம்்்ம்்்)
பயனுறப்பதிவெழுதவேண்டும் என்ற எண்ணத்தோடு சில மொக்கைப்பதிவெழுதினாலும் மன்னிப்பீர்களாக.....
தொடர்ந்து எழுதுவதற்கு பின்னூட்டமிட்டு வரும் என் உறவுகளுக்கும் வோட்டுப்போட்டு உற்சாகப்படுத்தும் நெஞ்சங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் தொடர்ந்திருங்கள்.
எனது பதிவுகளை பார்த்துவிட்டு நம்ம நண்பர் ஒருவர் அனுப்பிய மடலின் சில பகுதி கீழே.... ஆனால் தமிழுக்காக தவறுவிட்டுவிட்டேனோ என்ற உணர்வும் எனக்குள்ளே... எமது தமிழர் தமது காலாசார விழுமியங்களை எத்தனை இடர்கள் தடைகள் வந்தாலும் செய்வார்கள் என்பதை அறிவீர்கள் தானே.. இது வாழ்க்கையின் நிலையாமையே...
நன்றி ஜெயமார்த்தாண்டன்
வெற்றிப்பதிவு என்னோட பதிவுலகம் அடுத்த வெற்றிக்காக காத்திருப்பு அதான் "தேனலை" இணையவானொலி விரைவில்....
பதிவு பற்றி வைரமுத்துவின் காதலித்துப்பார் பாணியில் 2ஆம் மைல்கல்லும் பதிவெழுதிப்பாரும்....
பதிவெழுதிப்பார்....
உன்னைச் சுற்றி
ரசிகர் வட்டம் தோன்றும்
உன் எழுத்துக்களால்
உலகம் எழுதப்படும்
நடுநிசி கடந்து
ராத்திரி சிவராத்திரியாகும்
தட்டெழுத்து வேகமாகும்
பின்னூட்டல்காரன்
தெய்வமாவான்..
தட்டித் தட்டிக் கீபோட்
உடைந்துபோகும்
கணணித்திரை பார்த்து
கண்ணிரண்டும்
பிதுங்கிக்கொள்ளும்
கதிரையை சூடாக்குவாய்
நல்ல பின்னூட்டங்கள்
வந்தால்
நன்றி சொல்வாய்
வராவிட்டால்
அடிக்கடி மின்னஞசலை
அவதானிப்பாய்
யாரும் உன்னைக்
காணமாட்டார்கள்
ஆனாலும்
இணைய உலகமே
உன்னையே கவனிப்பதாய்
உணர்வாய்...
அனானிகளின் இம்சையை
அடைந்ததுண்டா..?
உன்னையே அறிந்த
அனுபவம் உண்டா????
பலதூர இடைவெளிகளில் இருந்து
பின்னூட்டல் வந்ததும்
சிலிக்க முடியுமே??
அதற்காக
பதிவெழுதிப்பார்
தமிழ் என்ற சொல்லுக்கு
அர்த்தம்
ஆயிரமாக
பதிவெழுதிப்பார்....
பிற்சேர்க்கை:
மன்னிக்கவும் மறந்திட்டன்
வலைச்சரம் தளம் மூலம் எனக்கு வானம்பாடிகள் மற்றும் சீனா அவர்களால் அறிமுகம் கிடைத்தது மிகவும் பெருமையடைந்தது கவிதை
என்றென்றும் நன்றியுடையவன் வானம்பாடிகள் அண்ணெ கோவிச்சுக்காதீங்க..
45 comments:
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா ....
கவிஞரே பொருட்குற்றம். தமிழ்மணம்,தமிழிஷ்,திரட்டி ஓட்டு பற்றி எழுதாமை:)).. வாழ்த்துகள்.
suranuthan said...
//உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா .//
வாங்க சுரேன் நன்றி உங்கள் உதவி என்றும் மனதில்
வானம்பாடிகள் said...
///கவிஞரே பொருட்குற்றம். தமிழ்மணம்,தமிழிஷ்,திரட்டி ஓட்டு பற்றி எழுதாமை:)).. வாழ்த்துகள்.///
அண்ணே... கண்ணாடி சற்றுத்துலக்கிப்பாருங்கள்
வோட்டு = ஓட்டு வோட்டு என்பது நம்ம வழக்கு அதான்
***தொடர்ந்து எழுதுவதற்கு பின்னூட்டமிட்டு வரும் என் உறவுகளுக்கும் வோட்டுப்போட்டு உற்சாகப்படுத்தும் நெஞ்சங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் தொடர்ந்திருங்கள்.****
நன்றி அண்ணே...
தொடர்ந்திருங்கள்
அல்லோஓஓ. நான் கவிதையைச் சொன்னேன்.:))
வாழ்த்துக்கள் றமேஷ் தங்கள் எழுத்து பயணம் சிறக்க...!
Congratulations!
Best wishes for more fame and success.
வானம்பாடிகள் said...
///அல்லோஓஓ. நான் கவிதையைச் சொன்னேன்.:))///
ஓகே...
இப்போ கொஞ்கம் பாருங்களேன்
பிரியமுடன்...வசந்த் said...
///வாழ்த்துக்கள் றமேஷ் தங்கள் எழுத்து பயணம் சிறக்க...!////
நன்றி வசந்த்
Chitra said...
//Congratulations!
Best wishes for more fame and success.
///
நன்றி சித்ரா
ம்ம்ம் வளருவோம்...
மோதிரக்கையால் குட்டு பட்டிருக்கீங்க... நல்லா எழுதிறீங்க றமேஷ். வாழ்த்துக்கள், நிறைய எழுதுங்கள்.
பிரபாகர்.
சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்!
மேலும் இரட்டை சதம் அடிக்க வாழ்த்துக்கள் தோழரே!!
தொடர்ந்து கலக்குங்கள்.....
வாழ்த்துக்கள் நண்பா..
பிரபாகர் said...
///மோதிரக்கையால் குட்டு பட்டிருக்கீங்க... நல்லா எழுதிறீங்க றமேஷ். வாழ்த்துக்கள், நிறைய எழுதுங்கள்.
////
வாங்க பிரபாகர்
ஆமாங்க நல்லதுதானே....
நன்றி வருகை வாழ்த்துக்களுக்கும்
சதத்திற்கு வாழ்த்துகள் நண்பா
best of luck
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
Atchu said...
///சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்!
மேலும் இரட்டை சதம் அடிக்க வாழ்த்துக்கள் தோழரே!!
தொடர்ந்து கலக்குங்கள்.....
///
நன்றி ப.ச அச்சு
கலக்குவோம்
நன்றி
Balavasakan said...
//வாழ்த்துக்கள் நண்பா..//
நன்றி நண்பா
Subankan said...
///சதத்திற்கு வாழ்த்துகள் நண்பா///
நன்றி நண்பரே
VARO said...
///best of luck
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்///
நன்றி வரோ...
ம்ம் தொடரும்
வெற்றி உனக்கு உண்டாக வேண்டும,தங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்
Theepan said...
/// வெற்றி உனக்கு உண்டாக வேண்டும,தங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்///
நன்றி டா.. அடிக்கடி எழுத்துப்பிழைகளையும் நீ திருத்துவதை எழுத மறந்துட்டேன் மன்னிப்பாயாக....
தொடர்ந்திரு..
congratz....
ysharan said...
//congratz....//
வாங்க தம்பி
நன்றி
Congratulations!
Best wishes for ur activities..
தம்பி...றமேஸ் நீங்கள் ஓடுங்கோ.பின்னால நாங்களும் வாறமெல்லோ.
வாழ்த்துகள் என் ஊர்க்காற்றே !
ஆமா அக்கா சொல்லுகின்றார்
ஓடுங்கோ!!
அக்காவே ஒரு பயந்தாங் கொள்ளி
அவவுக்கு துணை தேவை.
முன்னால வருகிறேன் என்று
சொல்லாமல்....
பின்னால் வருகிறாவாம் இது
எப்படி!!!
என் மனமார வாழ்த்துகள்.
றமேஸ்.மேலும் மேலும்
சிறக்க,...ஆக்கம் பிறக்க!!
ஆமா!கிறுக்கு சந்ரு என்னாச்சு!!??
வாழ்த்துக்கள் ரமேஸ்
தொடர்ந்து பதிவுலகில் கலக்குங்கள்
ஹேமா said...
///தம்பி...றமேஸ் நீங்கள் ஓடுங்கோ.பின்னால நாங்களும் வாறமெல்லோ.
வாழ்த்துகள் என் ஊர்க்காற்றே !///
நன்றி அக்கா...
'''ஓடு ஓடு வாரான்பாரு வேட்டைக்காரன்...''''
எண்டு சொல்லுரேல்னு நெனச்சுட்டன்....
Kala said...
///ஆமா அக்கா சொல்லுகின்றார் ஓடுங்கோ!!அக்காவே ஒரு பயந்தாங் கொள்ளி அவவுக்கு துணை தேவை.
முன்னால வருகிறேன் என்று
சொல்லாமல்....பின்னால் வருகிறாவாம் இது எப்படி!!!
என் மனமார வாழ்த்துகள். றமேஸ்.மேலும் மேலும்
சிறக்க,...ஆக்கம் பிறக்க!!
///
நன்றி
அதான்னே.. அக்காவுக்கு தன்னடக்கம் அதிகம். தம்பிய முன்னேற்றணும் எண்டு ஊக்கப்படுத்துறாங்ப்பா...
நன்றிம்மா
ஆமா!கிறுக்கு சந்ரு என்னாச்சு!!??
கரவைக்குரல் said...
///
வாழ்த்துக்கள் ரமேஸ்
தொடர்ந்து பதிவுலகில் கலக்குங்கள்
///
வாங்க கரவைக்குரல் உங்களுக்குத்தாக் அடிக்கடி அரட்டைத் தொல்லை ஹிஹிஹி
நன்றி டா
வாழ்த்துக்கள் நண்பா..
நான் அங்கிட்டு ரெண்டு ரன் அடிக்கிறதுக்கு வெய்ட்டிங்..இங்க அடிச்சாச்சா..:))
வாழ்த்துக்கள் றமேஸ், முதல் முறை சாட் பண்ணியபோது நான் கேட்டதுதான் உங்களுக்கு வந்த மெயிலிலும் உள்ளது. எல்லாம் நல்லபடியாய் இருப்பின் மகிழ்ச்சி.
எனக்கும் படங்கள் மிக்க நெகிழ்ச்சியை தந்தது.(என்னது காமெரா உடஞ்சிரிச்சா??):(
-------
தொடரட்டும் நல்ல பதிவுகள்.:)
முனைவர்.இரா.குணசீலன் said...
///வாழ்த்துக்கள் நண்பா..///
நன்றி நண்பரே...
பலா பட்டறை said...
///நான் அங்கிட்டு ரெண்டு ரன் அடிக்கிறதுக்கு வெய்ட்டிங்..இங்க அடிச்சாச்சா..:))
///
ம்ம் ரெண்டு ரண் தானா உங்களுக்கு .
தடுமாற்றம் வேண்டாம் சொதப்பாம அடிச்சுடுங்கோ :)
/////
வாழ்த்துக்கள் றமேஸ், முதல் முறை சாட் பண்ணியபோது நான் கேட்டதுதான் உங்களுக்கு வந்த மெயிலிலும் உள்ளது. எல்லாம் நல்லபடியாய் இருப்பின் மகிழ்ச்சி.
எனக்கும் படங்கள் மிக்க நெகிழ்ச்சியை தந்தது.(என்னது காமெரா உடஞ்சிரிச்சா??):(
தொடரட்டும் நல்ல பதிவுகள்.:)
/////
ஆமாங்க மகிழ்ச்சியே...
இன்னுமின்னும் வளருவோம் தொடருவோம்....
நன்றி சங்கர்.
தொடர்ந்திருங்கள்
வாழ்த்துக்கள் நண்பா!
ரோஸ்விக் said...
////வாழ்த்துக்கள் நண்பா!////
நன்றி வருகை வாழ்த்துக்களுக்கும்
என் அன்பு வாழ்த்துக்கள்....
அண்ணாமலையான் said...
//என் அன்பு வாழ்த்துக்கள்....///
வாங்க அண்ணாலையான்
நன்றி
வாழ்த்துக்கள் றமேஷ்
Ananth said...
///வாழ்த்துக்கள் றமேஷ்///
நன்றி அண்ணா
வாழ்த்துக்கள் நண்பா..........
Jeya said...
///வாழ்த்துக்கள் நண்பா........./////
வாங்க ஜெயா... உங்களால்தான் உருப்பெற்றது இந்த சிதறல்கள்..
என்றென்றும் நன்றி உங்களுக்கு.
வாழ்த்துக்கள் றமேஷ்.
தங்கள் மின்-அஞ்சல் கிடைத்தது. வேலை அதிகம். பதில் அனுப்புகிறேன்.
தொடருங்கள். அருமையான பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.
ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...
///
வாழ்த்துக்கள் றமேஷ்.
தங்கள் மின்-அஞ்சல் கிடைத்தது. வேலை அதிகம். பதில் அனுப்புகிறேன்.
தொடருங்கள். அருமையான பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.
///
நன்றி ஜெ.ஜெயமார்த்தாண்டன்
ம்ம் தொடருவோம்.விரைவில் வந்துசேரும்
Post a Comment